நெருங்கிய நண்பரை மீண்டும் மணந்த அமலா பால் !
6 கார்த்திகை 2023 திங்கள் 11:18 | பார்வைகள் : 8485
சமவெளி, மைனா, வேலையில்லா பட்டதாரி, தெய்வ திருமகள் உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகை அமலா பால்.
இவர் விஜய்,தனுஷ்,பாபி சிம்ஹா,ஜெயம் ரவி உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்து சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.
2014 ஆம் ஆண்டு இயக்குநர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலா பால்,பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2017இல் விவாகரத்து பெற்று பிரிந்தததைத் தொடந்து சில மாதங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்து பின்னர் மீண்டும் நடிக்க தொடங்கினார்.
சினிமாவில் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் ஆர்வம் கொண்ட அமலாபால் வெளிநாடு மற்றும் பல்வேறு இடங்களுக்கு சென்று புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில்,கடந்த சில தினங்களுக்கு முன்பு அமலாபாலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அவரின் நெருங்கிய நண்பரான ஜகத் தேசாய் தனது காதலை வெளிப்படுத்த அமலா பால் அதனை ஏற்றுக்கொண்டார்.அதனைத் தொடர்ந்து நடிகை அமலாபாலின் காதல் திருமணம் கேரளாவின் கொச்சியில் உள்ள நட்சத்திர விருந்தகம் ஒன்றில் நடந்துள்ளது.
இதனை அமலாபால் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளார்.இவர்களுக்கு இரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan