Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

சந்தானம் பாணியில் களமிறங்கிய சதிஷ்

சந்தானம் பாணியில் களமிறங்கிய சதிஷ்

4 கார்த்திகை 2023 சனி 12:36 | பார்வைகள் : 12226


அண்மையில் மறைந்த புகழ்பெற்ற பிரபல நடிகரும், திரைப்பட கதாசிரியருமான கிரேசி மோகன் அவர்களுடைய நாடகங்களில் நடிக்க துவங்கி, அதன்பின் சினிமா துறையில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து, இன்று காமெடியனாகவும், ஹீரோவாகவும் வளம் வரும் நடிகர் தான் சதீஷ். கடந்த 2006 ஆம் ஆண்டு கிரேசி மோகனுடைய திரைக்கதையில் வெளியான "ஜெர்ரி" என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் சதிஷ். 

இந்நிலையில் நடிகர் சதிஷ் அவர்களுக்கு ஒரு பிரேக் கொடுத்த திரைப்படம் தான் கடந்த 2010 ஆம் ஆண்டு மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான "தமிழ் படம்" என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஆர்யாவின் மதராசபட்டினம், சிவகார்த்திகேயனின் மரினா, ஆரியின் "மாலை பொழுதின் மயக்கத்திலே", விக்ரமின் "தாண்டவம்" போன்ற பல திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது.

இந்நிலையில் பிரபல லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் இந்த நவம்பர் மாதம் இப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளது இப்படத்தின் சிறப்பு அம்சமாக உள்ளது என்றே கூறலாம். 

 தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, Dream Catcher என்ற ஒரு அழகு சாதனா பொருளில் உள்ள இறக்கையை பிய்த்து எடுத்ததால், கதையின் நாயகன் மற்றும் அவர் சொந்தங்களுக்கு கனவில் ஏற்படும் நிகழ்வுகள் நிஜத்திலும் ஏற்படுகின்றது. இந்த பிரச்சனையில் இருந்து நாயகனும் மற்றவர்களுக்கு தப்பித்தார்களா? என்பதே இந்த படத்தின் கதை.

இந்த படத்தில் பிரபல நடிகைகள் ரெஜினா கசாண்ட்ரா, சரண்யா பொன்வண்ணன் மற்றும் நடிகர்கள் நாசர், ஆனந்த்ராஜ், VTV கணேஷ், ரெடின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்