Paristamil Navigation Paristamil advert login

நீ தனியா வந்தா தலை மட்டும் தான் உருளும் ‛கில்லர் கில்லர்' பாடல்

நீ தனியா வந்தா தலை மட்டும் தான் உருளும் ‛கில்லர் கில்லர்' பாடல்

22 கார்த்திகை 2023 புதன் 14:06 | பார்வைகள் : 3299


தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்’ என்ற திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்த இந்த பாடலை தனுஷ் பாடியுள்ளார் என்பதும் கபீர் வாசகி எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் முதல் முறை கேட்கும் போதே அசத்தலாக இருப்பதாகவும் ஆக்ரோஷமாக இருப்பதாகவும் தனுஷின் குரல் இந்த பாடலுக்கு மிகச்சரியாக பொருந்தி உள்ளதாகவும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடித்துள்ளார் என்பதும் சந்தீப் கிஷான், நிவேதா உள்ளிட்ட பலர் இந்த படத்தின் நடிப்பு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை பெரும் பொருட்செலவில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.