விளம்பர
தொடர்பு
அமரர் வீரசிங்கம் பாக்கியம்
மண்ணில்: 16-10-1934
விண்ணில்: 02-06-2016
பிறந்த இடம் : 
இறந்த இடம்: 
அம்மா அம்மா எம்மை விட்டு பிரிந்து ஆண்டு ஒன்று ஆனதோ அம்மா. எம்மால் நம்ப முடியவில்லை அம்மா.
 
உற்ற கணவன் உங்கள் நினைவில் கலங்கி நிற்க, பெற்ற பிள்ளைகள் உங்கள் மதிமுகம் காணாது கண் கலங்கி நிற்க, பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் உங்கள் துயரில் என்றும் வாட, காலவன் கொண்டு சென்று ஓராண்டு ஆனதோ அம்மா!
அன்பாய் எங்களை வளர்திட்டீர்கள் அம்மா உங்களைப் போல் பாசம் காட்ட எவரும் இல்லை அம்மா.
 
அந்நிய நாட்டில் இருந்து ஓடி வந்தோம் உங்கள் திருமுகத்தை காண, அதற்கிடையில் காலவன் கொண்டு சென்றது ஏனோ அம்மா ஆறா துயரில் ஆழ்த்தி விட்டு மீளாத்துயில் கொள்ள சென்று விட்டீர்களோ அம்மா!
 
ஆண்டு ஒன்று என்ன ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் போனாலும் அம்மா! எங்கள் மனதை விட்டு நீங்க மாட்டீர்கள் அம்மா.
 
அம்மாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்
 
அன்புக் கணவர், பிள்ளைகள், மருமகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
1974