விளம்பர
தொடர்பு
ஏ.இரகுநாதன்
மண்ணில்: 05-05-1935
விண்ணில்: 22-04-2020
பிறந்த இடம் : மலேசியா
இறந்த இடம்:  பிரான்ஸ்

ஈழத்துக் கலைத்தாயின்  மூத்தமகன்
அமரர் ஏ.இரகுநாதன்

 

மறைந்த மாபெரும் ஈழத்துக் கலைஞர் ஏ.இரகுநாதன் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலி,
ஈழத்துத் திரைப்படத் துறை வரலாற்றில் ஆளுமை மிக்க ஒருவர். புலம்பெயர் தேசத்திலும் கலைத்துறை சார்ந்து பல ஆக்கங்களை வெளிக்கொணர்ந்தவர். திரைப்படங்கள், நாடகங்கள் பலவற்றை இயக்கியும், நடித்தும் வந்தவர். என்காகப் பூக்கும் நாவலை எழுதியவர். நிழல், பாரீஸ் முரசு போன்ற பத்திரிக்கைகளில் ஆசிரியராகக் கடைமை ஆற்றியவர்.

இலங்கையில் இராணுவத்தில்  எழுதுவிளைஞராய் கடைமையாற்றியவர் 1968ல் வெளிவந்த திரைப்படமான நிர்மலா இவரின் ஆளுமையின் வெளிப்பாடு.


எல்லோருடனும் நண்பர்களாகப் பழகும் தன்மை கொண்டவர். பிறர் ஆற்றல் கண்டு மதிப்பளிப்பவர் மலேசியாவில் பிறந்து மானிப்பாயில் கல்விகற்று பின்னர் அரச உத்தியோகம் வகித்து அதையும் கலைக்காக அர்ப்பணித்து, 1983ல் புலம்பெயர்ந்து பாரீசில் வாழ்ந்து தனது 86வது வயதில் காலத்தின் கோரப் பிடிக்குள் சிக்கி 22-04-2020 இன்று காலமான திரு.ஏ.இரகுநாதன் அவர்களின் துயரச் செய்தி இன்று மேலும் எம்மை ஆற்றாமை இருளில் தள்ளியுள்ளது அவரது இழப்புக் குறித்து எமது ஆழ்ந்த அனுதாபத்தினை கலைஞனை இழந்து தவிக்கும் அவர் குடும்பத்தினருக்கு மற்றும் கலைக் குடும்பத்தினருக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம்
 

1642