யாழ். வைத்தியசாலை வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris மற்றும் கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அன்ரன் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 08-12-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மனுவல்பிள்ளை அந்தோனாபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரிஆன் சந்திரா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஓர்லீன், பெரரிக்கா, ரெபேக்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
எல்வீன், அன்றியா, ஜேலன் ஆகியோரின் ஞானத் தந்தையும்,
கீதா(இலங்கை), காலஞ்சென்ற ரவீந்திரன்(கனடா), டெஸ்ரர்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றொபேட்(இலங்கை), விஜி, வின்சன்ற், செல்வம், மகேந்திரன், சிறி, றாஜினி, றாஜன், அன்ரன்(பப்பா), மரீனா(செல்லா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யசிந்தா, சீலா, கொன்சி, மோகன், அனுரன், கீதா, அனிதா, டானியல் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.