விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

உருகும் பனிப்பாறைகள் - வெளிவரும் படிந்துபோன வைரஸ்கள்

14 November, 2022, Mon 15:12   |  views: 4953

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்குப் பிறகு உலகம் முழுவதும் மீண்டு வரும் நிலையில், விஞ்ஞானிகள் அடுத்த தொற்றுநோய் வெளவால்கள் அல்லது பறவைகளிடமிருந்து வராமல் , பனிப்பாறைகள் உருகுவதால் நிகழும் என்கின்றனர்.

 
உலகெங்கிலும் காலநிலை மாற்றம்  காரணமாக துருவப்பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. அப்படி உருகிய பின்னர் அதன் அடியில் இருக்கும் மண்ணின் மரபணு பகுப்பாய்வு வைரஸ் கசிவு மற்றும் வைரஸ்கள் பரவல் அபாயங்களை வெளிப்படுத்தியுள்ளது.
 
வைரல் ஸ்பில்ஓவர் என்பது ஒரு புதிய ஹோஸ்டை எதிர்கொள்ளும் போது, ​​ஒரு வைரஸ் அதைத் தாக்கி, இந்தப் புதிய ஹோஸ்டில் நிலையாகப் பரவும் ஒரு செயல்முறையாகும்.
 
Biological Sciences இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் , காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் சுற்றுச்சூழலை வேகமாகப் பாதித்து வரும் நிலையில் கிருமிகள் கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதை ஆராய்ச்சியாளர்கள் விவரித்துள்ளனர்.
 
பனிப்பாறைகளில் அடைபட்டிருக்கும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை நிரந்தரமாக உறைய வைக்கும் சூழல் மாறுவதால் அது மீண்டும் உயிர்பெற்று பரவும். வைரஸ்கள் அது வளரும் சூழ்நிலை கிடைக்கும் வரை வெறும் கல்லையும் மண்ணையும் போல் இருக்கும். சூழல் கிடைத்துவிட்டால் சட்டென்று உயிர்பெற்றது போல் பரவத்தொடங்கும்.
 
இதனால் பனிப்பாறைகள் உருகுவது விஞ்ஞானிகளுக்கு மிகப்பெரிய கவலையாக உள்ளது. இது நேரடியாகவோ விலங்குகள் மூலமாகவோ பெரும் தோற்று வாய்ப்பை ஏற்படுத்தும்.
 
ஒரு குழு உலகின் மிகப்பெரிய உயர் ஆர்க்டிக் நன்னீர் ஏரியான லேக் ஹசென் ஏரியிலிருந்து மண் மற்றும் வண்டல் மாதிரிகளை சேகரித்து, ஆர்என்ஏ மற்றும் டிஎன்ஏவை வரிசைப்படுத்தியது. அதில் வைரஸ்களின் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
 
விஞ்ஞானிகள், 2021 இல் பனிப்பாறைகளைப் சோதிக்கும்போது, ​​15,000 ஆண்டுகளுக்கும் மேலாக உறைந்திருந்த 33 வைரஸ்களைக் கண்டுபிடித்தனர். அவற்றில் 28 அறியப்படாத புதிய வகை வைரஸ்கள். இதேபோல், புவி வெப்பமடைதல் காரணமாக உருகும் திபெத்திய பனிப்பாறையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18