விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

நேற்று கர்ப்பம் - இன்று குழந்தை - அதிர்ச்சியடைந்த தாய்!

3 October, 2022, Mon 5:11   |  views: 5069

பெண்கள் கர்ப்பமடைந்தால் அவர்கள் உடல் எடை கூடுவது, வயிறு பெரிதாவது என உடலில் மாற்றங்கள் ஏற்படுவது வழக்கம். இருப்பினும், அவர் எப்போது கர்பமடைந்தால் என்பது ஒவ்வொருவருக்கும் ஏறத்தாழ 2, 3 மாதங்களுள் தெரிந்துவிடும்.
 
ஆனால், இங்கிலாந்தில் ஒரு பெண்ணுக்கு தான் கர்ப்பமடைந்திருக்கிறோம் என்பது பிரவசத்திற்கு முந்தைய நாள்தான்  தெரிந்தது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? 
 
ஆம், இங்கிலாந்தின் நாட்டிங்காம் நகரைச் சேர்ந்த மாலி கில்பர்ட் (25) பெண்ணுக்கு தான் அது நிகழ்ந்துள்ளது. கடந்த சில மாதங்களாக, உடல்நிலை சரியில்லை என பலமுறை மருத்துவமனைக்கு சென்றும், அவர் கர்ப்பமடைந்துள்ளார் என்பது நீண்ட நாள்களுக்கு பிறகே தெரியவந்துள்ளது. 
 
இதுகுறித்து, மாலி கூறுகையில்,"நான் கடந்த மார்ச் மாதம் முதல் எனது உடல் எடை அதிகரித்த காரணத்தால் மருத்துவமனைக்கு பரிசோதனை மேற்கொண்டு வந்தேன். பல வருடங்களாக எனது உடல் எடை அதிகரிப்பதும், குறைவதுமாகவே இருந்து வந்தது. ஆனால், இம்முறை மிகவும் வித்தியாசமாக இருந்தது. நான் லிம்பெடிமா மற்றும் லிபோடெமாவுக்காக பலமுறை பரிசோதிக்கப்பட்டேன். ஏனென்றால் அது நீர் கோர்த்தல் அல்லது அது போன்ற ஒன்றுதான் என மருத்துவர்கள்  நினைத்தார்கள். 
 
இருப்பினும், மார்ச் மாதத்தில் இருந்து சோதிக்கப்பட்டும் தெளிவான விடையும் ஏதும் கிடைக்கவில்லை. எனவே, கடந்த செப்.5ஆம் தேதி எனக்கு ரத்த பரிசோதனை செய்து மேற்கொண்டனர். அந்த பரிசோதனை முடிவு இரண்டு நாள்களுக்கு பின் வெளியானது. அதில், எனக்கு இரும்பு சத்து குறைவாக இருப்பதாகவும், கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது" என்றார். 
 
இப்போதாவது ஒரு விடை கிடைத்ததே என ஆசுவாசுமடைந்த பெண்ணுக்கு, அடுத்த ஒருமணிநேரத்தில் அவருக்கு அதிர்ச்சிகரமான செய்தியை கூறியுள்ளனர். தொடர்ந்து அவர் கூறுகையில்,"எனக்கு மேற்கொள்ளப்பட்ட ரத்த பரிசோதனையின் முழுமையான அறிக்கை வந்திருப்பதாக கூறி, அடுத்த ஒரு மணிநேரத்தில் என்னை அழைத்தார்கள். அதில், நான் கர்ப்பமடைந்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்" என்றார்.
 
இருப்பினும், குழந்தை பிறக்க இன்னும் சில வாரங்கள் இருப்பதாக மாலிக்கு மருத்துவர்கள் ஆறுதல் கூறியுள்ளனர். இதையடுத்து, அடுத்த வாரம் மற்றொரு ரத்த பரிசோதனை எடுக்கவும், ஸ்கேன் பரிசோதனை செய்யவும் மாலி திட்டமிட்டுள்ளார். ஆனால், அதற்குள்தான் அடுத்த அதிர்ச்சிக்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 
 
அதுகுறித்து மாலி,"நான் கர்ப்பமான தகவலை அறிந்த பின், அடுத்த நாள் இயல்பாக வேலைக்கு சென்றுவிட்டேன். மதிய உணவின்போது எனது தாயை சந்திக்க சென்றேன். அப்போது எனது நீர் உடைந்தது. தொடர்ந்து, எனது தாயார் ஆம்புலன்ஸை அழைக்க, அவர்கள் என்னை மருத்துவமனைக்கு அழைத்துசென்றனர். அப்போதே எனக்கு குழந்தை பிறந்துவிட்டது" என இயல்பாக கூறுகிறார். தற்போது, தாயும் சேயும் நலமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18