பாம்பை கையால் எறியும் யுவதி! இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள காணொளி
7 January, 2016, Thu 23:22 GMT+1 | views: 667
சூரிய குளியலில் ஈடுபட்டிருந்த யுவதியொருவர், தனக்கு அருகில் வந்த பாம்பை கையால் பிடித்து தூக்கி எறியும் காட்சி எனக் கூறப்படும் வீடியோவொன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
பூங்காவொன்றில் சன் பாத்தில் ஈடுபடும் அந்த யுவதி பின்னால் திரும்பிப் பார்த்துவிட்டு தலையை முன்புறமாக திருப்பும்போது அவரை நோக்கி பாம்பொன்று விரைந்து வருவதாகவும், அதையடுத்து, அந்த யுவதி திடுக்கிட்ட போதிலும் அவர் தனது கையால் பாம்பின் கழுத்தை பிடித்து அதனை தூக்கி எறிவதாகவும் அவ் வீடியோவில் காண்பிக்கப்படுகிறது.
தென் ஆபிரிக்காவின் ரொபர்ட்ஸன் நகரிலுள்ள பூங்காவொன்றில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது வேடிக்கைக்காக பதிவு செய்யப்பட் காட்சி என இவ்வீடியோவை பதிவு செய்தவர் தெரிவித்துள்ளார்.
“எனது சகோதரனும் நானும் இணைந்து எமது சகோதரியை வேடிக்கையாக பயந்து ஓட செய்வதற்கு முயற்சித்தோம். ஆனால், அவர் தயாரானவராக இருந்தார். நான் சிறு பருவத்திலிருந்து ஆற்றில் பாம்பைகளை பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன். சிலவேளை பாம்பு பிடிப்பதில் எனது சகோதரியும் என்னுடன் இணைந்துகொண்டிருந்தார்” என அந்நபர் தெரிவித்துள்ளார்.
பூமியில் பாறை உருவான விதம், அமைப்பு குறித்து படிக்கும் படிப்பு.
•
உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு:இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.