விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

உலகிற்கே ஆச்சுறுத்தலாக உருவெடுக்கும் பனிப்பாறை விரிசல்கள்!

18 December, 2021, Sat 6:59   |  views: 7717

இன்னும் சில வருடங்களில் உலகம் பெரும் அச்சுறுத்தலை சந்திக்க நேரிடும். அண்டார்டிகாவின் த்வைட்ஸ் பனிப்பாறையில்  (Thwaites Glacier) ஆபத்தான வகையில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன, இதன் காரணமாக உலகளாவிய கடல் மட்டம் திடீரென குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். பல பகுதிகள் நீரில் மூழ்கி மக்கள் இடம்பெயர நேரிடலாம்.
 
கடல்களின் வெப்பமயமாதலின் விளைவாக த்வைட்ஸ் ஈஸ்டர்ன் ஐஸ் ஷெல்ஃப் (TIES)பனிப்பாறைகளை  இணைப்பதற்கான புள்ளியாக செயல்படுகிறது. இந்நிலையில் செயற்கைக்கோள் படங்கள் TIES பகுதியில் பெரிய விரிசல்களை  ஏற்பட்டுள்ளது. இந்த மிதக்கும் பனிக்கட்டி உடைந்தால் கடல் மட்டம் 25% உயரும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
 
பனிப்பாறை நிபுணர் பேராசிரியர் டெட் ஸ்கம்போஸ், பனிப்பாறையின் நிலையில் வியத்தகு மாற்றங்கள் நிகழப் போகின்றன என்றும் த்வைட்ஸ் பனிப்பாறை மிக வேகமாக உருகி வருகிறது, இப்போது அதன் பெரும்பகுதி உடைந்து போகும் அபாயத்தில் உள்ளது எனவும் கூறினார். பனிப்பாறையில் விரிசல் அதிகரித்து உடைந்தால், அது த்வைட்ஸ் பனிப்பாறையின் கிழக்கு பகுதியில் மூன்றில் ஒரு பகுதியை இன்னும் வேகமாக உருகச் செய்யும். இந்த நிகழ்வின் காரணமாக, பனிப்பாறை உருகும் வேகம் மும்மடங்கு அதிகரிக்கும் என எச்சரித்துள்ளார்.
 
பூமியின் வெப்பநிலை அதிகரித்து வருவதால், த்வைட்ஸ் பனிப்பாறை வேகமாக உருகி வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர், இது முழு உலகிற்கும் ஒரு பெரிய ஆபத்தின் அறிகுறியாகும். அண்டார்டிகாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த பனிப்பாறை பகுதி, 1980 முதல், குறைந்தது 600 பில்லியன் டன் பனியை இழந்துள்ளது. த்வைட்ஸின் மொத்த பரப்பளவு கிட்டத்தட்ட பிரிட்டனை பரப்பளவிற்கு சமமானது.  எனவே இது உருகினால் உலகளவில் கடல் மட்டம் பெரிதும் உயரும்.
 
முன்னதாக, அமெரிக்காவின் (America) மன்ஹாட்டன் நகரின் மூன்றில் இரண்டு பங்கு   என்ற அளவில் 1100 அடி உயரம் கொண்ட பிரம்மாண்டமான பனிப்பாறையில் பெரிய ஓட்டை ஏற்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த ஓட்டையைப் பார்த்து, ​​உருகிய பனிக்கட்டி சுமார் 14 டிரில்லியன் டன்கள் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. தற்போது வெளியாகியுள்ள செயற்கைக்கோள் படங்களும் மிக மோசமான ஆபத்தை சுட்டிக்காட்டியுள்ளன. பனிப்பாறையின் ஒரு பகுதி உடைவதால், உலக கடல்களின் நீர்மட்டம் 5% அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். இதனால் கடலோர பகுதிகள் தண்ணீரில் மூழ்கும்.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18