Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

ஜெய் அனுமான் ஜோதிட நிலையம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வீடு வாடகைக்கு

வேலைக்கு பெண் தேவை

ஊழியர்கள் தேவை

78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché SITIS MARKET et Coccinelle) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).
click to view more   click to call
06 05 59 89 89

வேலை ஆட்கள் தேவை

இயற்கை மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

வேலையாள் தேவை

காணி விற்பனைக்கு

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.
click to call 07 69 21 85 73

ஆங்கில வகுப்புக்கள்

வேலைக்கு ஆள் தேவை

Baill விற்பனைக்கு

Ezanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.
மாத வாடகை : 2000€
விலை :90000 €
click to call 06 69 04 35 45

ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்

திருமண மண்டப சேவை

நிகழ்வு சேவைகள்

Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
21
ஞாயிற்றுக்கிழமை
ஏப்ரல்
துர்முகி 2047
திதி: ஏகாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

புத்தாண்டு ராசி பலன்கள் 2015

31 December, 2014, Wed 20:20   |  views: 3204

பாசத்தோடு பழகி, பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கையை கூட்டிக் கொள்ளும் மேஷ ராசி நேயர்களே!

வந்து விட்டது புத்தாண்டு. உங்கள் எண்ணங்கள் ஈடேறும் விதத்தில் ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெற்று, குருவால் பார்க்கப்படுகிறார்.

குரு மங்கள யோகத்தோடும், புத சுக்ர யோகத்தோடும் பிறக்கும் புத்தாண்டில், புதிய திருப்பங்கள் பலவும் காணப்போகிறீர்கள். முயற்சிக்காத காரியங்களில் கூட முத்தான பலன்கள் கிடைக்கும். முன்னேற்றப் பாதையில் இருந்த தடைகள் அகலும்.

இந்தப் புத்தாண்டின் தொடக்கத் திலேயே அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் வந்துவிட்டது. எனவே விரயங்கள் கூடுதலாகவே இருக்கும். வீட்டுத் தேவைகள் அதிகரிக்கும்.

ஆனால் உங்களைப் பொறுத்தவரை உங்களுக்கென்று ஒரு சுய ஜாதகம் உள்ளது. அதில் சனி இருக்கும் நிலை, அதைப் பார்க்கும் கிரகம், மற்ற கிரகங்களின் ஆதிக்கம், தெசாபுத்தி பலன்கள் இவைகளை அனுசரித்தும் நல்ல பலன்கள் நடைபெற வாய்ப்பு உண்டு.

புத்தாண்டு கிரக நிலைகளையும், அதற்குரிய கட்டத்தையும் உங்கள் சுயஜாதகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து வருடப் பிறப்பு நாள், பெரிய கிரகங்களின் மாற்றங்கள் உருவாகும் நாள் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும் பொழுது, யோகம் தரும் தெசாபுத்தியும் இணைந்து செயல்பட்டால் இமயத்தின் எல்லைக்கே நீங்கள் செல்லலாம்.

வாசலை நோக்கி சந்தர்ப்பங்கள் வந்து சேரும். இல்லையேல் கோவிலை நோக்கி சென்று கும்பிட்டு பரிகாரங்களைச் செய்து கொள்ள வேண்டும்.

2015-ம் ஆண்டு சனிக்குரிய ஆண்டாக 8-எண் ஆதிக்கத்தில் அமைவதால் சனியின் பலம் உங்கள் சுயஜாதகத்தில் எப்படி இருக்கிறது என்பதை சரிபார்த்துக் கொள்வது நல்லது. வருடப்பிறப்பு பரணி நட்சத்திரத்தில் பிறப்பது ஒரு வகைக்கு யோகம்தான்.

பரணி நட்சத்திரம் சுக்ரனுக்குரியது. சுக்ரன் சனிக்கு நட்பு கிரகம் என்பதாலும், ஜோதிட எண் கணித அடிப் படையில் வரும் ஆண்டு வளம் சேர்க்கும் ஆண்டாக அமையும் என்பதாலும் யோகபலம் பெற்ற நாளில் உங்களுக்கு அனுகூலம் தரும் ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்து சென்று வழிபட்டு வந்தால் தான் தேகநலனும் சிறப்பாக இருக்கும்.

வெற்றி தேவதை வீடு வந்து வரம் கொடுக்க வழிபாடு ஒன்றே கைகொடுக்கும்.

செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!

வெள்ளிக்கிழமை தோறும் விநாயகப் பெருமானையும், செவ்வாய்க்கிழமை தோறும் முருகப் பெருமானையும், சனிக்கிழமை தோறும் சனிபகவானையும் வழிபட்டு வருவது நல்லது. சஷ்டி விரதம் இருந்தால் சங்கடங்கள் தீரும். சந்தோஷங்கள் சேரும்.

வருமானத்தைப் பற்றியும், வருங்காலத்தைப் பற்றியும் எந்த நேரமும் சிந்திக்கும் ரிஷப ராசி நேயர்களே!

பிறக்கப் போகும் புத்தாண்டு உங்கள் பிரச்சினைகளுக்கு வடிகாலாக அமையப் போகிறது. ஆண்டின் கூட்டுத்தொகை '8' என்று வரும்பொழுதே சனியின் ஆதிக்கத்திற்குரிய ஆண்டு இது என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு சனி நட்பு கிரகமாகும். பொதுவாக கிரக நிலைகளின் அமைப்பின் படியும், எண்கணித அமைப்பின் படியும் இனிய வாழ்வை அமைத்துக் கொடுக்கும் ஆண்டாகவே இந்த ஆண்டைக் கருதலாம்.

இந்தப் புத்தாண்டின் தொடக்கத்தில் சப்தம ஸ்தானத்தில் சனி உலா வருகிறார். இதைக் கண்டகச் சனி என்பார்கள். ஆண்டு முழுவதும் சனி அந்த இடத்தில் தான் இருக்கின்றார். இருந்தாலும் நீங்கள் செய்த ஒரு பாக்கியம் குருவின் பார்வை சனியின் மீது பதிகிறது. திடீர் திருப்பங்கள் பலவும் இந்த குரு, சனி பார்வை கொடுக்கும்.

உங்களைப் பொறுத்தவரை உங்களுக்கென்று ஒரு சுய ஜாதகம் உள்ளது. அதில் சனி இருக்கும் நிலை அதைப் பார்க்கும் கிரகம், அதன் பாதசார விவரம் இவைகளை அனுசரித்து நல்ல பலன்கள் நடைபெற வாய்ப்பு உண்டு.

மேலும் புத்தாண்டு கிரக நிலைகளையும், அதற்குரிய கட்டத்தையும் உங்கள் சுய ஜாதகத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள். வருடப் பிறப்பு நாள், பெரிய கிரகங்களின் மாற்றங்கள் ஏற்படுகின்ற நாள் ஆகியவற்றை அனுசரித்தும் யோகம் தரும் திசாபுத்தி இணைந்து செயல்பட்டால் இன்பங்களை எதிர்கொள்ள நேரிடும். இல்லம் தேடி நல்ல செய்தி வந்துகொண்டேயிருக்கும்.

அன்பு நண்பர் களின் ஆதரவு பெருகும். இல்லையேல் துயரங்கள் தொடர்கதையாய்மாறும். அது போன்ற காலங்களில் பரிகாரங்களையும், வழிபாடுகளையும் செய்து பலன்களை வரவழைத்துக் கொள்ள இயலும்.

புத்தாண்டு சனிக்குரிய ஆண்டு என்பதால், உங்களுக்கு யோகம் தரும் கிரகமாகவும், உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்குரிய நட்பு கிரகமாகவும் இருப்பதால் ஜோதிட எண்கணித அடிப்படையில் உங்களுக்கு அனு கூலம் தரும் ஸ்தலங்களை தேர்ந்தெடுத்து யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வந்தால் முன்னேற்றத்தின் முதல் படிக்கு செல்லலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.

செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!

வருடம் முழுவதும் வசந்த காலமாக உருவாக நந்தியெம் பெருமானை வழிபாடு செய்யுங்கள். நந்தியெம்பெருமான் வழிபாடும் நலம் சேர்க்கும், வளம் சேர்க்கும். வெள்ளிதோறும் அம்பிகையை வழிபட்டு வந்தால் இன்பங்கள் வந்து சேரும்.

அரிய பல யோசனைகளை அடுத்தவர்களுக்கு எடுத்து வழங்கும் மிதுன ராசி நேயர்களே!

மாற்றங்களையும், ஏற்றங்களையும் விரும்பும் உங்களுக்கு, இந்தப் புத்தாண்டு புது முயற்சிகளுக்கு வெற்றி தரும் ஆண்டாக அமையப் போகின்றது. தனாதிபதி லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்க, ஆண்டு தொடங்குவதால் சேமிப்பு அதிகரிக்கும்.

சிக்கனத்தில் இருப்பவர்கள் செலவுக்கு அஞ்சாத விதத்தில் வருமானம் குவிய வழி கிடைக்கப் போகிறது.

உங்களுக்கு இந்தப் புத்தாண்டின் தொடக்கத்தில் 6-ம் இடத்தில் சனி சஞ்சரிப்பது யோகம்தான். அஷ்டமாதிபதி 6-ல் சஞ்சரிக்கும் பொழுது, விபரீத ராஜயோக அடிப்படையில் சில நல்ல பலன்களும் நடைபெறும். திட்டமிடாது செய்யும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும்.

உங்களைப் பொறுத்தவரை உங்களுக்கென்று ஒரு சுய ஜாதகம் உள்ளது. அதில் சனி மற்றும் ராகு- கேதுக் கள் இருக்கும் நிலையை அறிந்து கொள்ள வேண்டும்.

அதைப் பார்க்கும் கிரகங்களால் பலனும் கிடைக்கலாம். பாதிப்புகளும் உருவாகலாம். எனவே புத்தாண்டின் கிரகநிலைக்குரிய கட்டத்தையும் உங்கள் சுயஜாதகத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். வருடப் பிறப்பு நாள், பிறக்கும் நட்சத்திரம், இந்த வருடத்தில் பெயர்ச்சியாகும் பெரிய கிரகங்களின் மாற்றங்கள், இவை அனைத்தும் உங்கள் திசாபுத்திக்கு ஏற்ப அனுகூலம் தரும் விதத்தில் அமைந்திருந்தால், வருடம் முழுவதும் வசந்த காலமாக இருக்கும்.

2015-ம் ஆண்டு சனிக்குரிய ஆண்டாக ' 8' எண் ஆதிக்கத்தில் பிறக்கிறது. சனியின் பலம் உங்கள் சுய ஜாதகத்தில் இருப்பதைப் பொறுத்து மாற்றங்கள் உருவாகும். பரணி நட்சத்திரத்தில் ஆண்டு பிறப்பதால் சுக்ர பலம் மேலோங்கி இருப்பதால் பிள்ளைகள் வழியில் பெரும் மாற்றங்கள் ஏற்படலாம். வாரிசுகளால் விரயங்களைச் சந்திக்க நேரிட்டாலும் அதன் வளர்ச்சியில் எந்தத் தடையும் இருக்காது.

செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!

புதன்கிழமை தோறும் விஷ்ணுவையும், இலக்குமியையும் வழிபட்டு வாருங்கள். ஏகாதசி விரதம் இருப்பதன் மூலம் இனிய பலன் கிடைக் கும். விரதங்களை முறையாகக் கடைப்பிடித்தால் விரும்பும் விதத்தில் வாழ்க்கை அமையும்.

அஞ்சாத நெஞ்சமும், அயராத உழைப்பும் கொண்ட கடக ராசி நேயர்களே!

புத்தாண்டு பிறக்கப் போகின்றது. தொடங்கும் புத்தாண்டு தொல்லைகளை நீக்குமா?, கடன்சுமையைக் குறைத்து கவலைகளைப் போக்கிடுமா? இடமாற்றம் தந்து இனிய பலன் கொடுத்திடுமா? என்ற சிந்தனை தேவையில்லை.

உச்சகுரு உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது, நீங்கள் அச்சப்படத் தேவையில்லை. ஆனந்தமயமான வாழ்க்கை அமையப் போகின்றது.

இந்தப் புத்தாண்டின் தொடக்கம் அற்புதமான கிரக நிலைகளோடு அமைந்திருக்கிறது. 6-க்கு அதிபதி வக்ர இயக்கத்தில் இருக்க, அர்த்தாஷ்டமச் சனி விலகி நிற்க, யோகம் தரும் செவ்வாய், புத சுக்ர யோகத்தோடு இந்தப் புனித ஆண்டு பிறக்கின்றது. நவக்கிரகங்களில் 4,5 கிரகங்கள் நல்ல நிலையில் இருக்க ஆண்டு தொடங்குவதால் வேண்டிய நற்பலன்கள் வந்து சேரும். விருப்பங்கள் நிறைவேறும்.

உங்கள் சுயஜாதகத்தில் சப்தமாதிபதி சனி எப்படி இருக்கிறார்?. 6-க்கு அதிபதி குரு எப்படியிருக்கிறார்? பாம்பு கிரகங்களின் பாதசாரம் எப்படி இருக்கிறது? என்பதையெல்லாம் நீங்கள் ஆராய்ந்து பார்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அவற்றோடு இந்தப் புத்தாண்டின் கிரக நிலைகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள். வருடத்தில் வரும் கிரக மாற்றங்கள் உங்களுக்கு வசந்த காலத்தை வரவழைத்துக் கொடுக்குமா? என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

திசாபுத்திகள் இருக்குமேயானால் அதற்குரிய பரிகாரங்களை யோக பலம் பெற்ற நாளில் செய்வது நல்லது. பொதுவாக சுக்ரனுக்குரிய நட்சத்திரத்தில் பிறக்கும் ஆண்டு இது. சனிக்குரிய '8' எண் ஆதிக்கம் கூட்டுத் தொகையாக வருகின்றது.

வருடத் தொடக்கத்திலேயே சுக்ரனை சனி பார்க்கிறார். எனவே தக்க விதத்தில் வாழ்க்கை அமைய சனி, சுக்ர வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள்.

செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!

வாழ்க்கை வளம்பெற வருடம் முழுவதும் நலம் கிடைக்க தெற்கு நோக்கிய அம்பிகையை வழிபட்டு வருவது நல்லது. பஞ்சமி திதியில் விரதமிருந்து வராகியை வழிபட்டால் வளர்ச்சி கூடும்.

பொது வாழ்வில் புகழ் குவிக்க வேண்டும் என்று விரும்பும் சிம்மராசி அன்பர்களே!

புத்தாண்டு வந்து விட்டது. புதிய திருப்பங்கள் ஏற்படப் போகிறது. பத்தோடு பதினொன்றாவதாக இல்லாமல் முத்தான முதல் ஆளாக இருக்க விரும்பும் உங்களுக்கு வருடத் தொடக்கத்திலேயே ராசிநாதன் சூரியன், பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார்.

யோகம் தரும் செவ்வாய் உச்சம்பெற்று, விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் வியாழனால் பார்க்கப்படுகிறார். அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது.

அஷ்டமத்துச் சனியில் பாதிப்பங்கு வலிமை உடையது அர்த்தாஷ்டமச் சனி. அர்த்தாஷ்டமச் சனியில் அதே சூழ்நிலை ஒரு சிலருக்கு உருவாகலாம்.

நினைத்தது நிறைவேற வேண்டுமானால் உங்களுக்கென்று உள்ள சுய ஜாதகத்தை ஆராய்ந்தும் பாருங்கள்.

உங்கள் சுய ஜாதகத்தில் சனி இருக்கும் நிலை, அதைப் பார்க்கும் கிரகம், மற்ற கிரகங்களின் ஆதிக்கம், திசாபுத்தி பலன்கள் இவற்றை அனு சரித்து புத்தாண்டின் கிரக நிலைகளை ஒப்பிட்டுப்பார்த்து, பெரிய கிரகங்களின் மாற்றங்கள் ஏற்படுவதை அனுசரித்துக் கிரகங்களின் ஒத்துழைப்பு கிடைத்தால், வாழ்வில் வசந்த காலம் வந்து சேரும்.

இல்லையேல் வழிபாட்டின் மூலம் தான் வளர்ச்சியைக் கூட்டிக்கொள்ள முடியும். யோகபலம் பெற்ற நாளில் உங்களுக்கு அனுகூலம் தரும் சிறப்பு ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்து அதற்குரிய விதத்தில் பரிகாரங்களை செய்வதோடு 2-ல் ராகுவும் 8-ல் கேதுவும் இருப்பதால் ஒரே திசையில் 'சிவகுடும்பம்' அமைந்த ஸ்தலங்களில் சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை செய்வதன் மூலம் நல்ல பலன்களை வரவழைத்துக் கொள்ள இயலும்.

2015 - சனிக்குரிய '8' எண் ஆதிக் கத்தில் பிறக்கும் ஆண்டாகும். எனவே விநாயகர், அனுமன், சனி பகவானை விடாது வழிபட்டு வருவது நல்லது.

செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!

வருடம் முழுவதும் வளர்ச்சி கூடவும் வரலாற்றில் இடம் பெறவும் பிரதோஷ காலத்தில் நந்தி வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். சனிக்கிழமை விரதமும், ஆஞ்சநேயர் வழிபாடும் சகல யோகங்களையும் வழங்கும்.

இனிமையாகப் பேசி எல்லோர் மனதிலும் இடம் பிடிக்கும் கன்னி ராசி அன்பர்களே!

பிறக்கும் புத்தாண்டு உங்களுக்கு பெருமைகளையெல்லாம் வழங்கப் போகிறது. முத்தான வாழ்வில் முழு மதியை மறைந்த மேகங்களைப் போல இத்தனை நாளாக ஏழரைச் சனியின் ஆதிக்கத்தில் சிக்கித் தவித்த உங்களுக்கு வெற்றிக்குரிய விதத்தில் வாழ்க்கைப் பாதையை அமைத்துக்கொடுக்கப் போகிறது.

இந்தப் புத்தாண்டின் தொடக்கத்தில் ஜென்ம குரு, சப்தம கேது என்பதால் ஏற்றமும், இறக்கமும் நிறைந்த வாழ்க்கையே அமையும் என்று சொல்லலாம். இருந்தாலும் ஏழரைச் சனி விலகிவிட்டதால் இனி பங்கெடுத்த தொழில் தழைக்கும். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும்.

தொழில் வளர்ச்சியில் தொல்லை தந்தவர்கள் விலக, லாபம் எதிர்பார்த்தபடி உங்கள் கரங்களில் தவழும்.

உங்களைப் பொறுத்தவரை உங்களுக்கென்று ஒரு சுய ஜாதகம் இருக்கிறது. அதில் நவக்கிரகங்களும் இருக்கும் இடத்தை அறிந்து கொண்டு தசாபுத்தியையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

நடக்கும் தசாநாதன் வீற்றிருக்கும் இடம் பார்க்கும் கிரகம், அதோடு இணைந்து பலன் தரும் கிரகம் நவாமாலை நிலை இவை அனைத்தும் அறிந்து, புத்தாண்டு ஜாதகத்தோடு அதை ஒப்பிட்டுப் பார்த்தால், அதற்கேற்ப கிரகங்களின் ஆதிக்கம் இருந்தால், கீர்த்தி அதிகரிக்கும். கேட்ட இடத்தில் உதவியும் கிடைக்கும். இல்லையேல், தொல்லைகளைச் சமாளிக்கும் சூழ்நிலை உருவாகும்.

புத்தாண்டு சனிக்குரிய எண்ணான 8 எண் ஆதிக்கத்தில் பரணி நட்சத்திரத்தில் சுக்ர பலத்தோடு பிறக்கிறது. சுக்ரனும், சனியும் உங்கள் ராசிநாதனான புதனுக்கு நட்பு கிரகங்கள்.

எனவே, நண்பர்கள் எப்படி நமது வாழ்க்கையில் உதவிக்கரம் நீட்டுகிறார்களோ அதே போல நம்பிக்கைக்குரிய இந்த கிரகங்களும் நமக்கு நல்வழி காட்டும்.

செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!

ஆண்டு முழுவதும் வேண்டிய நற்பலன்கள் கிடைக்க ராகு - கேதுக்களின் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். செவ்வாய் விரதமும், துர்க்கை வழிபாடும் உங்கள் துயரங்களைத் தீர்க்கும்.

நல்ல தகவல்களையே நாளும் கேட்க வேண்டுமென்று விரும்பும் துலாம் ராசி அன்பர்களே!

பிறக்கும் புத்தாண்டு ஜென்ம குரு விலகி பிறப்பதால், சிறப்பான பலன்களை வழங்கும் என்றே கருதலாம்.

அகத்தில் தெளிவோடும், முகத்தில் பொலிவோடும் பணிபுரிந்து முன்னேற்றத்தில் முதற்படிக்குச் செல்லப் போகிறீர்கள். இருந்தாலும் இன்னும் ஏழரைச் சனியில் பாதச்சனியின் ஆதிக்கம் இருக்கிறது.

ஆண்டு தொடங்குவது - சுக்ரனுக் குரிய பரணி நடத்திரத்தில்தான். சுக்ரன் உங்கள் ராசிநாதனாகவும் விளங்குகிறார்.

எனவே, இந்த ஆண்டு சுபிட்சம் தரும் ஆண்டாகவே அமையப் போகிறது என்று கருதலாம்.

இந்தப் புத்தாண்டின் தொடக்கத்திலேயே சனி பகவான் விலகியது நன்மைதான். இனி ஏதேனும் ஒரு புதிய துறையில் மனதை செலுத்தி ஒரு பொன்னான வாழ்வை அமைத்துக் கொள்ளப்போகிறீர்கள்.

உங்கள் ராசியின் சின்னம் தராசு. அதற்கு இரண்டு தட்டுக்கள் இருப்பது போல உங்களுக்கும் மனமும் இரண்டு மனமாக இருக்கும்.

ஒன்று காரியத்தைச் செய்யத் தூண்டும். மற்றொன்று காரியத்தைச் செய்ய மறுக்கும். நீங்கள் எதிர்மறைச் சிந்தனைகளை விலக்கிவிட்டு, நேர்மறை சிந்தனையை வளர்த்துக் கொண்டால், ஆர்வத்தோடு செய்யும் செயல்கள் எல்லாம் வெற்றியாகும்.

உங்களுக்கென்று ஒரு சுய ஜாதகம் இருக்கிறது. அதில் சனி இருக்கும் நிலை. அதன் பாதசாரம் அதைப் பார்க்கும் கிரகத்தின் நிலை இவற்றையெல்லாம் அறிந்து கொண்டு, நடப்பு தெசா புத்திக்கேற்ப பலன்களையும் பார்த்து, புத்தாண்டு கிரக நிலைக்குரிய கட்டத்தை ஒப்பிட்டுப் பார்த்து, யோக பலம் பெற்ற நாளில் காரியங் களைச் செய்தால், வெற்றிக்கொடி பறக்க வாழ்க்கையை நடத்தலாம்.

இல்லையேல் உற்றார், உறவினர்களின் பகையைத் தேடிக்கொள்ள வேண்டியது இருக்கும்.

புத்தாண்டு சனிக்குரிய 8- எண் ஆதிக்கத்தில் பிறக்கிறது. எனவே சனியின் வலிமை உங்கள் ஜாதகத்தில் எப்படியிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

பிறகு உள்ளூர் சிவாலயத்தில் உள்ள சனி பகவான் சன்னிதிக்குச் சென்று சனி கவசம் பாடி, எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். உங்களைப் பொறுத்தவரை சனி ஒரு தாக்கும் கிரகம் அல்ல. காக்கும் கிரகம்! - என்பதை அறிந்து கொள்வீர்கள்.

செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!

வெள்ளிக்கிழமை தோறும் அம்பிகை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அன்று தினம் விரதம் இருப்பது நல்லது. சங்கடகர சதுர்த்தியன்று ஆனைமுகப் பெருமானை வழிபட்டால் சங்கடங்கள் தீரும். சந்தோஷங்கள் சேரும்.

'புகழ்' ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் விருச்சிக ராசி அன்பர்களே!

பிறக்கும் புத்தாண்டு உங்களுக்கு பெருமைகளைக் குவிக்கும் ஆண்டாகவே அமையப் போகின்றது. வருடத் தொடக்கத்திலேயே உச்சம் பெற்ற குரு, உங்கள் ராசியைப் பார்க்கிறார்.

எனவே உடனடி நற்பலன்கள் வந்து சேரப்போகின்றது. குரு சந்திர யோகத் தோடும், புத-சுக்ர யோகத்தோடும் குரு மங்கள யோகத்தோடும் இந்தப் புத்தாண்டு பிறக்கின்றது. யோகத்தோடு பிறக்கும் ஆண்டு சகல யோகங்களையும் உங்களுக்கு வழங்கப் போகின்றது.

ஆண்டு பிறக்கும் பொழுதே ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெற்றிருக்கின்றார். லாபத்தைத் தரும் தனாதிபதி குருவும் உச்சம் பெற்றுள்ளார். எண்ணியதை முடிக்கும் விதத்தில் கன்னி ராசியில் ராகுவின் சஞ்சாரம். ஒளிமயமான எதிர்காலத்திற்கு உறுதுணைபுரியும் விதத்தில் சூரியனும் உலாவருகின்றார்.

எனவே செல்வ வளம் பெருகும் விதத்திலும், செல்வாக்கு உயரும் விதத்திலும் இந்தப் புத்தாண்டு 2015 அமையப் போகின்றது.

இந்தப் புத்தாண்டில் தொடக்கத்திலேயே குருவின் பரிபூரண பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. அதுவும் உச்சம் பெற்ற குருவாக இருப்பதால் நல்ல பலன்களைக் கொடுக்கலாம்.

பொருளாதார நிலை உயரும். புகழ் கூடும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் வந்து சேரும். வீடு, வாகனங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும்.

கட்டளைக்கு அடிபணிய பலரும் காத்திருப்பார்கள். கனவுகள் நனவாகும். சுற்றத்தார் போற்றுமளவிற்கு வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட தேவதையின் அரவணைப்பிற்கு ஆளாகி, அகிலத்தார் பாராட்டும் விதத்தில் உங்கள் பணி மேம்படும்.

உங்கள் சுய ஜாதகத்தில் சனியின் ஆதிக்கம் எப்படி இருக்கிறது? என்பதை அறிந்து கொள்ள வேண்டும். தற்சமயம் ஏழரைச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகிறது.

சகாய ஸ்தானாதிபதியாகவே சனி வருவதால், அது ஜென்மத்தில் சஞ்சரிக்கும் பொழுது ஏராளமான நற்பலன்கள் உண்டாகும். இல்லத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். செல்வந்தர்களின் ஒத்துழைப்போடு சில நல்ல காரியங்களைச் செய்து முடிப்பீர்கள்.

புத்தாண்டின் கிரக நிலைகளை உங்கள் சுய ஜாதகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து, திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளை யோகபலம் பெற்ற நாளில், அனுகூலம் தரும் ஸ்தலங் களைத்தேர்ந்தெடுத்து வழிபட்டு வந்தால் வெற்றி மீது வெற்றி வந்து சேரும்.

2015-ம் ஆண்டு சனிக்குரிய ஆண்டாக '8' என்ற எண் ஆதிக்கத்தில் பிறப்பது யோகம்தான். சனிக்கு நட்பு கிரகமான சுக்ரனுக்குரிய பரணி நட்சத்திரத்தில், புதிய வருடம் பிறப்பதால் தரணியாளும் யோகம் முதல் தனவரவு அதிகரிக்கும் யோகம் வரை உங்களுக்கு ஏற்படப் போகின்றது.

செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!

சனிக்கிழமை தோறும் ஆனைமுகப்பெருமானையும், அனுமனையும், சனிபகவானையும் வழிபட்டு வாருங்கள். நிலவு நிறைந்த நாளில் கிரிவலம் வந்து சிவாலய வழிபாடு செய்வதன் மூலமும், முருகப் பெருமானை வழிபடுவதன் மூலமும் முன்னேற்றத்தை வரவழைத்துக் கொள்ளலாம்.

நிதானத்தோடு செயல்பட்டால் நினைத்ததை முடிக்கலாம் என்று சொல்லும் மகர ராசி அன்பர்களே!

புத்தாண்டு வரப்போகின்றது. தொடங்கும் புத்தாண்டில் குருவின் பரிபூரண பார்வை உங்கள் ராசியில் பதியும் விதத்தில் இருப்பதால் மனக்குழப்பங்கள் அகலும். பணவரவு போதுமானதாக இருக்கும். ஏக்கங்கள் தீர்ந்து எல்லோரும் போற்றும் விதத்தில் வாழ்க்கை அமையும்.

சப்தம பார்வையில் ராசி இருப்பதால் இதுவரை ஆரோக்கியத் தொல்லைகளைச் சந்தித்து வந்த உங்களுக்கு இனி சீரான வாழ்க்கையும். செயல்பாடுகளில் முன்னேற்றமும் கிடைக்கும்.

மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான வழி ஆண்டின் தொடக்கத்திலேயே கிடைக்கின்றது. சென்ற ஆண்டில் நடைபெறாத சுபகாரிய நிகழ்வுகள் இந்த ஆண்டு இனிதாக நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும்.

புத்திரப் பேறு இல்லாத தம்பதியர் களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். பொதுவாக குருவின் நேரடிப் பார்வையில் இருக்கும் ராசிகள் அனைத்தும் புனிதமடைகின்றன.

தொழில் வளம் சிறப்பாகவும், தொடர்ந்து வரும் கடன்சுமை குறையும் விதத்திலும் கிரக நிலைகள் சாதகமாக விளங்கினாலும் சனியின் பார்வை உங்கள் ராசியில் அல்லவா பதிகின்றது.

எனவே, உடல்ஆரோக்கியத்தில் திடீர் தாக்குதல்கள், வைத்தியச் செலவுகள் அப்போதைக்கப்போது உருவாகலாம். என்னயிருந்தாலும் காரகன் தன் பாவத்தைப் பார்க்கின்ற பொழுது பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாதே தவிர சிறுசிறு அச்சுறுத்தல்கள் ஏற்படத்தான் செய்யும்.

எனவே, அதற்கு அணைகட்டும் விதத்தில் சனியை முறையாக வழி படுவது நல்லது. சனியின் ஆதிக்க காலத்தில் விநாயகப் பெருமானையும், அனுமனையும் வழிபட்டு வருவதன் மூலமும், வேதனைகளிலிருந்து விடுபட இயலும். சகாய ஸ்தானத்தில் கேது இருப்பதால் வழிபாட்டின் மூலமே வளர்ச்சியைக் கூட்டிக் கொள்ள இயலும்.

தங்கள் உடமைகளைப் பாதுகாப் பதில் உங்களுக்கு நிகர் யாருமில்லை. உற்சாகத்தோடு இருப்பவர்களின் பட்டியலில் இடம் பிடிப்பவர்களும் நீங்கள் தான். வீட்டிற்கு வரும் விருந்தினர் களை வியக்கும் விதத்தில் உபசரிப்பீர்கள்.

இப்படிப்பட்ட குணங்களைப் பெற்ற உங்களுக்கு இந்தப் புத்தாண்டின் தொடக்கத்தில் 3-ல் கேதுவும், 9-ல் ராகுவும் சஞ்சரிப்பதால் முன்னோக்கியும், பின்னோக்கியும் செல்லும் விதத்தில் வாழ்க்கைத்தரம் அமையும்.

எந்நாளும் ஒரே நிலையில் இருக்கவும், இனிய வாழ்க்கை அமையவும் பொன்னான ராகு-கேதுக்களை யோக பலம் பெற்ற நாளில் சர்ப்ப சாந்தி பரிகாரங் களைச் செய்து வழிபடுவது நல்லது.

உங்களைப் பொறுத்தவரை உங்களுக்கென்று ஒரு சுயஜாதகம் உள்ளது. அதில் சனி வீற்றிருக்கும் இடத்தையும், அது பார்க்கும் இடத்தையும் அறிந்து கொள்ளுங்கள்.

புத்தாண்டின் கிரக நிலைகளையும் ஒப்பிட்டுப் பார்த்து அதற்கேற்ப பரிகாரங்களை யும் நீங்கள் செய்து கொண்டால் உரிய விதத்தில் வாழ்க்கைப் பாதை அமையும். இல்லையேல் உற்சாகம் குறைந்து உள்ளத்தில் அமைதி இழக்கும் சூழ் நிலையும் உருவாகலாம்.

நீங்கள் செய்த ஒரு பாக்கியம் பிறக்கும் புத்தாண்டு உங்கள் ராசிநாதன் சனிக்குரிய எண்ணான “8” எண் ஆதிக்கத்திலேயே பிறக்கின்றது. எனவே நல்ல வாய்ப்புகள் இல்லம் வரும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!

வாழ்க்கை வளம் பெற வருடம் முழுவதும் சனிக்கிழமை தோறும் லட்சுமி சமேத விஷ்ணுவை வழிபட்டு வாருங்கள். வாலில் மணி கட்டிய ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலமும் வளர்ச்சி கூடும்.

நம்பிக்கைக்குரிய நண்பர்களைத் தேர்ந்தெடுத்துப் பழகும் கும்ப ராசி நேயர்களே!

வளர்ச்சிப் பாதைக்கு வித்திடும் விதத்தில் யூலை மாதத்தில் குருவின் பரிபூரண பார்வை உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. அதுவரை 6-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு வக்ர இயக்கத்தில் இருப்பதால் வழிபாட்டின் மூலம் நீங்கள் வளர்ச்சியைக் கூட்டிக் கொள்ளலாம்.

குருமங்கள யோகத்தோடும், குரு சுக்ர பார்வையோடும், புத, சுக்ர யோகத்தோடும் பிறக்கும் புத்தாண்டில் மகத்துவம் அதிகரிக்கப் போகின்றது. மக்கள் போற்றும் விதத்தில் வாழ்க்கைத் தரம் உயரப் போகின்றது.

வருடத் தொடக்கத்தில் 10-ல் சனி சஞ்சரிப்பது யோகம்தான். முத்தான தொழிலை அமைத்துக் கொடுக்கும். முன்னிலையில் இருக்கும் பலரும் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவர்.

வெற்றிக்குரிய சூரியனும், லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். அற்புதப் பலன்களை அள்ளி வழங்கும் விதத்தில் அத்தனை கிரகங்களும் இருந்தாலும், அஷ்டமத்தில் அல்லவா ராகு சஞ்சரிக்கின்றார். அதுமட்டுமல்லாமல் வாக்கு ஸ்தானத்தில் கேது வகையாக இடம் பெறுகிறார்.

எனவே, எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்து செய்ய வேண்டியது முக்கியம். கேது பலத்தால் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. எதைச் செய்வேன் என்று நீங்கள் வாக்குறுதி கொடுக்கிறீர்களோ, அதை நீங்கள் செய்ய இயலாது போகும். எதை நீங்கள் செய்ய இயலாது என்று நினைக்கிறீர்களோ அதை நீங்கள் செய்து காட்ட இயலும். இங்ஙனம் செயலில் மாற்றத்தைக் கொடுப்பவர் கேதுபகவான்.

எனவே ராகு-கேது, சனி, குரு ஆகிய நான்கு கிரகங்களையும் பொறுத்தே வழியிலுள்ள தடைகற்கள் அகன்று படிக்கற்களாக மாறும்.

உங்களது சுய ஜாதகத்தில் சனி மற்றும் ராகு-கேதுக்கள் இருக்கும் நிலையை அறிந்து கொள்ள வேண்டும். அதைப் பார்க்கும் கிரகங்களால் பலனும் கிடைக்கலாம், பாதிப்புகளும் உருவாகலாம்.

எனவே புத்தாண்டின் கிரக நிலைக்குரிய கட்டத்தையும் உங்கள் சுயஜாதகத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

வருடப் பிறப்பு நாள், பிறக் கும் நட்சத்திரம், இந்த வருடத்தில் பெயர்ச்சியாகும் பெரிய கிரகங்களின் மாற்றங்கள் இவை அனைத்தும் உங்கள் திசாபுத்திக்கு ஏற்ப அனுகூலம் தரும் விதத்தில் அமைந்திருந்தால் எதிர்பார்ப்புகள் எல்லாம் இந்த ஆண்டு நிறைவேறும்.

2015-ம் ஆண்டு உங்கள் ராசி நாதன் சனிக்குரிய “8” எண் ஆதிக்கத்தில் பிறப்பது யோகம்தான். ராகு- கேதுக்களுக்கு மட்டும் யோகபலம் பெற்ற நாளில் சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை முறையாகச் செய்து கொள்ளுங்கள்.

செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!

சனிக்கிழமை தோறும் சிவாலயம் சென்று விநாயகர், சர்வேஸ்வரன், உமாதேவியை வழிபடுவதோடு சனிபகவான் சன்னிதியில் எள் தீபம் ஏற்றுங்கள். கார்த்திகை விரத மிருந்து கந்தப் பெருமானை வணங்கினால் நேர்த்தியான வாழ்வு அமையும்.

பதவிக்கு ஆசைப்படாமல் உதவிக்கு ஆசைப்படும் நல்ல உள்ளம் படைத்த தனுசு ராசி நேயர்களே!

உங்களுக்கு புத்தாண்டு ஏழரைச் சனியின் தொடக்கத்தில் பிறக்கிறது. அனைவரது மனதிலும் இடம் பிடித்து அருமையாகப் பழகும் உங்களுக்கு, இப்போது வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் வந்துவிட்டது ஏழரைச் சனி. இதனால் சந்தோஷக் குறைபாடுகள் உருவாகிவிடுமோ என்ற கவலை உங்களைக் கவ்விக் கொள்ளலாம்.

இருந்தாலும் சனி உங்கள் ராசிக்கு 2,3 ஆகிய இடங்களுக்கு அதிபதியாக விளங்குவதால் பெரிய அளவில் பாதிப்புகளையோ, விரயங்களையோ கொடுக்காது.

அதுவும் பொங்கு சனியின் ஆதிக்கத்தில் இருப்பவர்களுக்கு செல்வம் பொங்கி வரும். செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும்.

உங்கள் ஜாதக அடிப்படையில் மங்கு சனியா, பொங்கு சனியா, மூன்றாம் சுற்றில் வரும் சனியா என்பதை அறிந்து கொண்டு செயல்படுவது நல்லது.

முன்கோபக்காரர் என்று பலரும் உங்களை வர்ணிப்பார்கள். அரக்க குணமும், இரக்க குணமும் உங்களுக்கு இணைந்தேயிருக்கும். அன்றாட வாழ்க்கையில் யாருக்கும். அச்சுறுத்தல் ஏற்பட்டால் உங்களை நோக்கித் தான் ஓடிவருவர்.

ஏனென்றால், தங்கு தடைகள் அகல தலைமைப் பதவியில் உள்ளவர்களைத் தெரிந்து வைத்திருப்பவர்கள் நீங்கள் தான். அதிகப் புகழ் பெற்ற உங்களுக்கு இல்லத்திற்குள் மட்டும் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும்.

இப்படிப்பட்ட உங்களுக்கு இந்தப் புத்தாண்டின் தொடக்கம் குரு பார்வையாலும், 10-ம் இடத்து ராகுவாலும் பலவிதமான முன்னேற்றங்களை வரவழைத்துக் கொடுக்கப் போகின்றது. என்னயிருந்தாலும் விரயச் சனியின் ஆதிக்கம் கொஞ்சம் கூடுதல் விரயத்தைக் கொடுப்பதோடு மனநிம்மதியையும் குறைக்கலாம்.

எனவே அப்போதைக்கப்போது வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது. வாரந்தோறும் சனிக்கிழமை விரதமிருந்து ஆனைமுகப் பெருமானையும், சனி பகவானையும் வழிபட்டு வாருங்கள்.

இல்லத்தில் காகத்திற்கு சோறு வைப்பதன் மூலமும் இனிய பலன்களை காணலாம்.

உங்களது சுயஜாதகத்தில் சனி எப்படி இருக்கிறார்?. சனியைப் பார்க்கும் குருவின் பலம் எப்படி உள்ளது? என்பதை அறிந்து நடப்பாண்டின் கிரக நிலைகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.

அனுகூலமாக இருந்தால் ஆண்டு முழுவதும் நற்பலன்கள் கிடைக்கும். இல்லையேல் வேண்டிய பலனை விரும்பி வரவழைத்துக் கொள்ள நீங்கள் செல்ல வேண்டிய இடம் ஆலயங்கள் தான். பிறக்கும் புத்தாண்டு சனிக்குரிய '8' எண் ஆதிக்கத்தில் பிறக்கிறது. எனவே மந்தன் சனியால் மகத்துவம் அதிகம் பெற வழிவகை செய்து கொள்ளுங்கள்.

செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!

ஆண்டு முழுவதும் நற்பலன் களைப் பெற குரு தட்சிணாமூர்த்தி வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். சனிக்கிழமை தோறும் விரதம்இருந்து ராமதூதனாம் ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

உதவும் குணத்தாலும், உழைக்கும் கரத்தாலும் உயர்ந்த நிலையை அடையும் மீனராசி அன்பர்களே!

புத்தாண்டு பிறக்கும் பொழுதே ஜென்மத்தில் கேதுவும், 7-ல் ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். சர்ப்ப தோஷத்தின் பிடியில் உங்கள் ராசி இருந்தாலும் உச்ச குருவின் பார்வை அதன் கடுமையைக் குறைக்கிறது.

கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகமான வியாழன் வக்ர இயக்கத்தில் இருப்பது ஒரு வகைக்கு நன்மைதான்.

தோஷங்களை யோகமாக மாற்றும் ஆற்றல் வக்ர இயக்கத்திற்கு உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக ஆண்டு தொடங்குவதற்கு முன்னதாகவே அஷ்டமத்துச் சனி விலகிவிட்டது அல்லவா? எனவே வேண்டிய நற்பலன்கள் விரைவில் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது.

உங்களுக்கு புத்தாண்டின் தொடக் கத்தில் 2-ல் சந்திரன் சஞ்சரிக்கின்றார். 5-ல் குரு சஞ்சரித்து அங்கிருந்த படியே உங்கள் ராசியையும், 9,11 ஆகிய இடங்களையும் குரு பார்க்கின்றார்.

லாப ஸ்தானத்தில் தனாதிபதி உச்சம் பெறுகின்றார். எனவே நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும்.

வியாபாரம், தொழிலில் லாபம் கிட்டும். விருப்ப ஓய்வு பெற்றுக்கூட ஒருசிலர் தனித்து தொழில் செய்ய முன் வருவர். வசதி, வாய்ப்புகள் பெருகும். சென்ற ஆண்டில் நடைபெறாத சில காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும்.

வீடு, வாகனங்களின் சேர்க்கையும், நாடுமாற்ற உணர்வும் மேலோங்கும்.

ராகு-கேதுக்களுக்கு பரிகாரம் செய்வதோடு யோகபலம் பெற்ற நாளில் உங்களுக்கு அனுகூலம் தரும் ஸ்தலங்களில் முறையாக சர்ப்ப சாந்திப் பரிகாரங்களைச் செய்து கொண்டால் முன்னேற்றத்தின் முதல் படிக்குச் செல்ல இயலும்.

சுய ஜாதகத்தில் சனி மற்றும் ராகு- கேதுக்கள் இருக்கும் நிலையறிந்து கொள்ள வேண்டும். அதைப் பார்க்கும் கிரகங்களாலும், அதோடு இணைந் திருக்கும் கிரகங்களாலும் பலன் கிடைக்கலாம். புத்தாண்டின் கிரக நிலைக் குரிய கட்டத்தையும் உங்கள் ஜாதகத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் கிரகங்கள் அனுகூலமாக இருந்தால் வாழ்க்கை வளமாக இருக்கும்.

2015-ம் ஆண்டு சனிக்குரிய “8” எண் ஆதிக்கத்தில் பிறக்கின்றது. ஆண்டு பிறக்கும் நட்சத்திரம் பரணி என்பதால் சுக்ரபலம் மேலோங்கியிருக்கிறது.

சுக்ரன் உங்கள் ராசிநாதன் குருவிற்கு பகை கிரகமாகும். எனவே, வளர்ச்சி தொடர்ந்து நிலைக்க பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது.

செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!

ஆண்டு முழுவதும் அற்புதப் பலன்பெற திங்கள் தோறும் விநாயகப் பெருமானையும், செவ்வாய் தோறும் முருகப் பெருமானையும், வியாழன்தோறும் குரு தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வாருங் கள். முத்தெய்வ வழிபாடு முன்னேற்றத்தை வழங்கும்.

  முன்அடுத்த   

ayurveda-muligai-vaidhiya-salai
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


auto-ecole-de-bondy
87 Rue Roger SALENGRO, 93140 Bondy
M" : Gare de Bondy RER E

Tel : 0175471856 / 0752111355
agaram-translation-services
57, Rue Louis Blanc, 75010 Paris
M" : La Chapelle

Tel: 09 86 14 03 61
Port : 07 60 26 80 89
EXACT EXCHANGE SARL
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
exact-exchange-sarl
123, Bld de Magenta, 75010 Paris
M" : Gare du Nord

Tel: 01 48 78 35 33
பரிஸ் ஈழநிலா
Live Music Group
S.S.தில்லைச்சிவம்
Tel: 06 20 31 24 90
உங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்
வெத்தலை மை ஜோதிட நிலையம்
ஜோதிடர் பீமராஜ்
Tel:07 73 42 42 63
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
59, Avenue de Valenton
94190 Villeneuve-Saint-George
(RER D)
HIK VISION
Tel: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel: 06 12 65 73 53 / 06 51 79 74 32
29, Avenure Louis de Brogline
95 500 Le Thillay
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்

Tél.: 09 83 06 14 13

தமிழில் தொடர்பு கொள்ள:

Madame. பார்த்தீபன் றஜனி
07 68 55 17 26