Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

அதிரடி ஆட்டத்தில் அபார வெற்றி பெற்ற ராஜஸ்தான்!

28 September, 2020, Mon 6:35   |  views: 364

சஞ்சு சாம்சன், தேவேத்தியாவின் அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

 
ஐபிஎல் கிரிக்கெட்டின் 9வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.
 
நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது.
 
அதன்படி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதலில் துடுப்பெடுத்தாடியது. கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
 
தொடக்கம் முதலே இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
 
முதல் 10 ஓவர் முடிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் விக்கெட் இழப்பின்றி 110 ஓட்டங்கள் குவித்தது. மயங்க் அகர்வால் 69 ஓட்டங்களும், கேஎல் ராகுல் 36 ஓட்டங்களும் எடுத்திருந்தனர்.
 
13.2 ஓவரில் பஞ்சாப் அணி 150 ஓட்டங்களைக் கடந்தது. இதற்கிடையில் கேஎல் ராகுல் 35 பந்தில் அரைசதம் கடந்தார்.
 
மறுமுனையில் ருத்ர தாண்டவமாடிய மயங்க் அகர்வால் 15-வது ஓவரின் கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டி 45 பந்தில் 9 பவுண்டரி, 7 சிக்சருடன் சதம் அடித்தார்.
 
மயங்க் அகர்வால் 50 பந்தில் 106 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். கேஎல் ராகுல் 69 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.
 
இறுதியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுக்கு 223 ஓட்டங்கள் குவித்தது.
 
இதையடுத்து 224 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ராஜஸ்தான் ராயலஸ் அணி களமிறங்கியது.
 
தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லரும், ஸ்டீவ் ஸ்மித்தும் களமிறங்கினர். பட்லர் 4 ஓட்டங்களில் வெளியேற, ஸ்மித் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து ஆட்டமிழந்தார்.
 
ஸ்மித் வெளியேறியதும் மறுமுனையில் ஆடிய சஞ்சு சாம்சன் அதிரடியை வெளிப்படுத்தினார். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.
 
சாம்சன் 42 பந்தில் 7 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 85 ஓட்டங்கள் குவித்து அவுட்டானார். அப்போது ராஜஸ்தான் அணி 161 ரன்கள் எடுத்திருந்தது.
 
அதுவரை மந்தமாக ஆடிய ராகுல் தேவேத்தியா, 18 வது ஓவரில் 5 சிக்சர் அடித்து அசத்தினார். இதனால் கடைசி 2 ஓவரில் ராஜஸ்தான் வெற்றி பெற 21 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அதிரடியாக ஆடிய தேவேத்தியா 53 ஓட்டங்கள் குவித்து வெளியேறினார்.
 
இறுதியில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 226 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக சஞ்சு சாம்சன் தெரிவு செய்யப்பட்டார்.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்