Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஆங்கில வகுப்புக்கள்

வேலைக்கு ஆள் தேவை

வேலையாள்த் தேவை

வேலைக்கு ஆள் தேவை

வீடு வாடகைக்கு

Saint-Ouen-l’Aumôneல் F1 – 15m2 வீடு வாடகைக்கு..
மாத வாடகை :490€
click to call 06 17 86 85 87

வீடு விற்பனைக்கு

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

PTP திருமண பொருத்துனர்

வேலையாள் தேவை

91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு
click to call 01 69 45 57 69

அழகுக் கலைநிபுனர் தேவை

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

காணி விற்பனைக்கு

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.
click to call 07 69 21 85 73

திருமண மண்டப சேவை

Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
19
புதன்கிழமை
ஜூன்
துர்முகி 2047
திதி: ஏகாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

தமிழ் புத்தாண்டு ராசிபலன்! (14.4.2014 -13.4.2015)

13 April, 2014, Sun 17:05   |  views: 8931

சூரியனை உச்சமாக கொண்ட மேஷ ராசி அன்பர்களே!

செவ்வாயே உங்கள் ஆட்சி நாயகனாக கொண்ட உங்களுக்கு, முக்கிய கிரகம் எதுவுமே சாதகமாக அமையவில்லை. அதனால், எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நன்மையளிக்கும். ஆண்டு தொடக்கம் சுமாராக இருந்தாலும், நாட்கள் போகப் போக நன்மை அதிகரிக்கும். முக்கிய கிரகமான குருபகவான் 3-ம் இடமான மிதுனத்தில்இருக்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. குரு சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது பார்வை பலன் நன்மை தரும். ஜூன் 13-ந் தேதி குரு மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு மாறுகிறார். அங்கும் அவரால் நன்மை தர இயலாது. ராகு தற்போது 7-ம் இடமான துலாமில் இருக்கிறார். இதனால் வீட்டில் சில சிரமம் உருவாகும். ஆனால் ஜூன் 21ல் ராகு துலாமில் இருந்து கன்னிற்கு மாறுகிறார். அவரால் நன்மை கிடைக்க ஆரம்பிக்கும். குடும்பத்தில் நிலவிய குழப்பம் தீரும். முயற்சியில் இருந்து வந்த தடை அனைத்தும் விலகும்.கேது உங்கள் ராசியிலேயே இருப்பதால் எதிரி தொல்லை ஏற்பட்டுக் கொண்டிருக்கும். அவர் ஜூன் 21ல் மேஷத்தில் இருந்து மீனத்திற்குமாறுகிறார். இதுவும் சிறப்பானதல்ல. சனி உங்கள் ராசிக்கு 7-ம் இடமானதுலாமில் உள்ளார். பொதுவாக இங்கு இருக்கும் போது சனி குடும்பத்தில் பல பிரச்னையை உருவாக்குவார். அலைச்சல் அதிகரிக்கும். ஆனால், தற்போது சனி வக்கிரமாக உள்ளதால் கெடுபலன் நேராது. மாறாக, நன்மை ஓரளவு கிடைக்கும். டிச. 16ல் சனி துலாமில் இருந்து விருச்சிகத்திற்கு மாறுகிறார். அஷ்டமத்தில் சனி பெயர்வதால், முயற்சியில் பல்வேறு தடை உருவாகும். பணப்புழக்கம் இருக்கும். அதே நேரம் செலவும் அதிகரிக்கும். சிக்கனம் தேவை.குருவின் பார்வையால் பொருளாதாரம் சீராகும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். வீடு, மனை வாங்கலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமணம் போன்ற சுபங்கள்கைகூடும். குழந்தை பாக்கியம் பெறுவர். ஜூலை மாதம் முதல் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி தடை படலாம். புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் இல்லை. உறவினர் வகையில்தொடர்ந்து அனுகூலம் இருக்காது.

தொழில், வியாபாரம்:


தொழில், வியாபாரம் சிறப்பாகநடக்கும். எதிரித் தொல்லை சற்று கட்டுக்குள்இருக்கும். ஆண்டின் முற்பகுதியில், அரசு வகையில் நன்மை கிடைக்கும். ஜூன் 13ம் திகதிக்குப் பிறகு வியாபாரத்தில் முயற்சி தேவைப்படும். ஆண்டின் பிற்பகுதியில் அரசு வகையில் நன்மை உண்டாகாது.வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக்கொள்ளவும். பண விஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். ஜூன் 21-ந் தேதிக்குபிறகு எடுத்தகாரியத்தில் வெற்றி உண்டாகும். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள். உங்கள் ஆற்றல் மேம்படும்.

பணியாளர்கள்: 


வேலைப்பளு அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொலிஸ் மற்றும் பாதுகாப்பு துறையில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். முக்கிய கோரிக்கைகளை ஜூனுக்குள்  கேட்டு பெற்றுக் கொள்ளவும்.அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். அதேபோல் வேலை இன்றி இருப்பவர்கள் ஆண்டின் தொடக்கத்திலேயே முயற்சி செய்து வேலையை தேடிக் கொள்வது நல்லது.

கலைஞர்கள்:

ஒப்பந்தம் கிடைக்க சற்று முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். திறமை வெளிப்படுவதோடு, சமூகத்தில் புகழ், செல்வாக்கிற்கு குறைவிருக்காது.

அரசியல்வாதிகள்: சீரான நிலையில் இருப்பர். ஜூன் முதல் எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காது. பலனை எதிர்பாராமல் பிறருக்கு உழைக்க வேண்டியதிருக்கும்.

மாணவர்கள்:

ஆண்டு முழுவதும் சீரான பலனைக் காணலாம். சற்று முயற்சி எடுத்தால் சிறப்பான வெற்றி கிடைக்கும். ஆனால் அடுத்தகல்வி ஆண்டில் சுமாரான பலனே உண்டாகும். விடாமுயற்சியுடன் படிக்க வேண்டியதிருக்கும்.

விவசாயிகள்: செலவு அதிகரிக்கும் பயிர் வகைகளைத் தவிர்க்கவும்.அக்கறையுடன் உழைப்பது அவசியம். வழக்கு விவகாரங்களில் சாதகபலன் இருக்காது.

பெண்கள்: 

குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியை பெறுவர். உடல் நலம் சிறப்பாக இருக்கும். கண்  தொடர்பான உபாதை உண்டாகலாம்.

சுக்கிரனை ஆட்சிவீடாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே!

தற்போது ராகு 6-ம் இடத்தில் இருப்பதால் பல்வேறு நன்மைகளை தந்து கொண்டிருக்கிறார். செயல்பாடுகளில் வெற்றி தந்து உங்கள் திறமையை வளர்ப்பார். ஜூன் 21ல், இவர் கன்னி ராசிக்கு செல்கிறார். 5-ம் இடமான அங்கு அவரால் நன்மை தர இயலாது. அவரால் குடும்பத்தில் சிற்சில பிரச்னைகள் உருவாகலாம். கேது உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் இருப்பதால், உடல் நலத்தில் சிற்சில உபாதைகளை தரலாம். ஆனால் ஜூன் 21ல், அவர் 11-ம் இடமானமீனத்திற்கு செல்கிறார். அங்கு பல்வேறு நன்மைகளைத் தருவார். ஆன்மிக சுற்றுலா சென்று வர வாய்ப்புண்டு. பணவசதி நன்றாக இருக்கும். தோஷங்கள் நீங்கி நல்வாழ்க்கை நடத்துவதற்குரிய சந்தர்ப்பங்கள் தேடி வரும். நன்மையான காலகட்டமாக அமையும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். புத்திரர்கள் உயர்கல்வியில் சிறந்து விளங்குவர். சனிபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடமான துலாமில் இருந்து, உங்களுக்கு எண்ணற்ற பலநன்மைகளை செய்து கொண்டு இருக்கிறார். குறிப்பாக முயற்சிகளில் வெற்றியை தருவார். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெற்று இருக்கிறீர்கள். உங்கள் ஆற்றல் மேம்பட்டு இருக்கும். குடும்பத்தில் உங்களை உயர்ந்த ஸ்தானத்தில் வைத்திருப்பார்கள். டிசம்பர் 16ல், இவர் துலாமில் இருந்து விருச்சிகத்திற்கு மாறுகிறார்.இது சிறப்பான இடம் அல்ல. அதாவது அவர் குடும்பத்தில் சிற்சில பிரச்னைகளை உருவாக்குவார். பொறுமை தேவை.

தொழில், வியாபாரம்: வெளியூர்பயணம் அனுகூலத்தைக் கொடுக்கும். புதியதோர் தெம்பும், உற்சாகமும் ஏற்படும். போட்டியாளர்களின் தொல்லை இருக்காது. அரசிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். புதிய தொழிலைத் தொடங்கலாம். குறிப்பாக ஜூன் 13க்குள் ஆரம்பிப்பது நல்லது. பெரிய தொழில் தொடங்க வேண்டுமானால், உங்கள் குடும்பத்தில், நல்ல ராசியில் உள்ளவர்கள் பெயரில் தொடங்குவது நல்லது. இரும்பு, கம்ப்யூட்டர், தரகுஉள்பட எந்த தொழிலிலும் சிறப்பைக் காணலாம்.

பணியாளர்கள்: வேலையில் நல்ல வளர்ச்சி காணலாம். சிலர் அதிகாரம் மிக்க பதவிக்கு உயர்த்தப்படுவர். சம்பள உயர்வு, எதிர்பார்த்ததைவிட அதிகமாக கிடைக்கும். வெகு நாட்களாக எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். படித்துவிட்டு வேலையின்றி இருப்பவர்களுக்குவேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. ஜூன் 13 குரு பெயர்ச்சி முதல், அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். சிலருக்கு வேலையில் வெறுப்பு வரலாம், பொறுப்புகளை இழக்கலாம். ஆனால், சனிபகவான் வக்கிரகாலமாக இருப்பதால் இந்த இடர்பாடுகள் எதுவும் நடக்காது. அதோடுகுருவின் பார்வைகளால் நன்மையே நடக்கும். உங்கள் வேலையை வேறு யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். நீங்களே செய்து முடிப்பது நல்லது. குருபகவானால் முயற்சியில் சிற்சில தடைகள் வரத்தான் செய்யும். அதை சாமர்த்தியமாக முறியடிப்பீர்கள். பொதுவாக கடந்த காலத்தைப் போல் நன்மை கிடைக்காது என்று நினைப்பீர்கள். ஆனால் உங்கள் நிலைமையை கீழே விழாதவாறு குரு, தன் பார்வைகளால் தாங்கி கொள்வார். பொருளாதாரத்தில் எந்த பின்னடைவும் இருக்காது. உங்கள் செல்வாக்கிலும் எந்த பங்கமும் வராது. அதேநேரம் வீண்விவாதங்களில் ஈடுபடாமல் சற்று ஒதுங்கிஇருப்பது நல்லது.

கலைஞர்கள்: புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.பண வரவு சிறப்பாக இருக்கும். அரசிடமிருந்து பாராட்டு,வெகுமதி கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: நினைத்ததை நிறைவேற்றிக்கொள்வீர்கள். நீண்ட காலமாக எதிர்பார்த்த பதவி கிடைக்கும். ஜூன் 13ம் திகதிக்கு பிறகு எதிலும்சற்று நிதானம் தேவை.

மாணவர்கள்: கல்வியில் சாதனை படைக்கலாம். அடுத்த கல்விஆண்டில் அதிகமாக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியிருக்கும். முயற்சிக்கு தகுந்தமதிப்பெண் கிடைக்கும். கெட்ட சகவாசத்தில் சற்று எச்சரிக்கைத் தேவை.

விவசாயிகள்: நல்ல லாபத்தைக் காணலாம்.நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு. கருப்புநிற தானியங்கள் சிறப்பான பலனைத் தரும். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் புதிய சொத்து வாங்குவீர்கள். வழக்கு விவகாரங்கள் இந்த காலத்தில் சிறப்பாக அமையும். ஆனால் புதிய வழக்கில் சிக்க வேண்டாம்.  டிசம்பர் 16ம் திகதிக்கு பிறகு சிற்சில பிரச்சினையை உருவாகலாம். தீயோர் சேர்க்கையால் அவதியுறலாம்.

பெண்கள்: புதிய ஆபரணம்வாங்கலாம்.   உல்லாச பயணம் மேற்கொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். உடல் நலம் சீராக இருக்கும்.

புதனை ஆட்சி வீடாகக் கொண்ட மிதுனராசி அன்பர்களே!

மதிநுட்பத்துடன் செயலாற்றி வருவீர்கள். தற்போது 5-ம் இடத்தில் இருக்கும் ராகுவால் குடும்பத்தில் பிரச்னை உருவாகலாம். ஆனால், குருவின் பார்வை அவர் மீது விழுவதால் கெடுபலன் பெரும்பங்கு குறையும். ஜூன்21ல் ராகு துலாமில் இருந்து கன்னிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம்அல்ல. கேது 11-ம் இடமான மேஷத்தில் இருப்பதால், நல்ல பொருளாதார வளமும், ஆரோக்கியமும்உண்டாகும். எடுத்த செயலை வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றலை வழங்குவார். ஜூன்21ல் கேது மேஷத்தில் இருந்து மீனத்திற்கு மாறுகிறார்.அப்போது நன்மை குறையத் தொடங்கும். சனி பகவான் 5-ம் இடமான துலாம் ராசியில் உள்ளார். அவரால் முயற்சியில் தடை, எதிரி தொல்லை, இடையூறு உருவாகும். தற்போது சனிபகவான் வக்கிரத்தில் சிக்கி இருப்பதால் அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. டிசம்பர் 16ல் இவர் துலாமில் இருந்து விருச்சிகத்திற்கு மாறுகிறார். சனி பெயர்ச்சிக்குப் பின், கையில் பணம் புழங்கும். எடுத்த செயலில் வெற்றி உண்டாகும். ஆற்றல் மேம்படும். சனியின் 10-ம் இடத்துப்பார்வையும் சிறப்பாக அமையும். அதன் மூலம் தொழிலில்நல்ல முன்னேற்றம் ஏற்படும். எந்த தொய்வும்இல்லாமல் தொடர்ந்து சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். குடும்பத்தில் வசதி அதிகரிக்கும். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு மேம்படும். அக்கம்பக்கத்தினரின் பாராட்டு கிடைக்கும்.தம்பதியினர் இடையேகருத்துவேறுபாடு நீங்கிஅன்யோன்யம் அதிகரிக்கும். பல ஆண்டுகளாக தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி ஜூன் 13க்கு பிறகு கைகூடும்.அதுவும் நல்ல வரனாகஅமையும். குழந்தை பாக்கியம் ஏற்படும். புதிய வீடு கட்டலாம். அல்லது தற்போதுள்ளவீட்டை விட அதிக வசதிமிகுந்த வீட்டிற்கு குடிபுகலாம். உறவினர்கள்வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். புதிய வாகனம் வாங்கலாம்.

தொழில், வியாபாரம்: வியாபாரிகள் எதிரிகளின் சதியை முறியடித்து முன்னேறலாம். தீயோர்சேர்க்கையால் அவதிப்பட்டு வந்தவர்கள் அதில் இருந்துவிடுபடுவர். வீண் அலைச்சல் இருக்காது. தரகு தொடர்பான தொழில் நன்கு வளர்ச்சி அடையும். டிசம்பர் 16 முதல், வியாபாரிகள் புதியதோர் தெம்பைக்காணலாம். வருமானம் அதிகரிக்கும். புதியவியாபாரம் நல்ல லாபத்தை கொடுக்கும்.வேலையின்றி இருப்பவர்கள், புதிய தொழிலைத் தொடங்கலாம். அதில் நல்ல வருமானம் கிடைக்கும். சிலர் வேலை விஷயமாக வெளிநாடு சென்று வருவார்கள். வாடிக்கையாளர்கள் உங்களிடம்நன்மதிப்பு வைத்திருப்பர். அரசிடம் எதிர்பார்த்தஉதவிகள் கிடைக்கும்.

பணியாளர்கள்: சிறப்பான முன்னேற்றம் காணலாம். வீண் அலைச்சல் இருக்காது. அப்படியே வெளியூர்பயணம் மேற்கொண்டாலும் அது அனுகூலமான பலனைத்தரும். போலீஸ் மற்றும் பாதுகாப்புதொடர்பான வேலையில் இருப்பவர்கள்முன்னேற்றம் காண்பர். புதிய பதவி வர வாய்ப்பு உண்டு. ஜூன் 13 முதல் பணியில் மேலும்முன்னேற்றம் காணலாம்.வேலையில் திருப்தியும், தன்னம்பிக்கையும் பிறக்கும். வேலைப்பளுவெகுவாக குறையும். விரும்பிய இடத்திற்கு மாற்றம்கிடைக்கப் பெறலாம். படித்துவிட்டு வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.

கலைஞர்கள்: பிரச்னைகளின்றி முன்னேறலாம்.புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர்.பணவரவு சிறப்பாக இருக்கும். அரசியல்வாதிகள்: எதிர்பார்த்த பதவி கிடைக்கச் சில காலம் பொறுத்திருக்க வேண்டும். ஆனால்,பணவிஷயத்தில் தேவைகள் பூர்த்தி அடையும்.மாணவர்கள்:  இந்த கல்விஆண்டில் சற்று சிரத்தை எடுத்து படித்தும்,  ஆசிரியர்களின்அறிவுரையையும் ஏற்றால், அடுத்தஆண்டு விரும்பிய பாடம்கிடைக்க உறுதுணையாக இருக்கும்.

விவசாயிகள்: முன்னேற்றமானபலனைக் காணலாம். புதிய சொத்துக்களை வாங்கலாம். மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல வருமானத்தைப் பெறலாம்.

பெண்கள்: பணவிஷயத்தில்முன்னேற்றம் அடைவர். கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பு கிடைக்கும். குழந்தைபாக்கியம் உண்டு. விருந்து, விழா என சென்று வரலாம். உடல்நலம் சீராகஇருக்கும். ஜூன் 21க்குப் பிறகு, சிற்சில உபாதைகள்வரலாம். எதிரிகளின் தொல்லைஏற்படும். சிலரது வீட்டில்பொருட்கள்களவு போகவாய்ப்பு உண்டு.

சந்திரனை ஆட்சிநாயகனாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே!

உங்கள் கையில் எவ்வளவு பணம் வந்தாலும் செலவாகி விடும் . பிறரின் அன்பான பேச்சுக்கு அடிபணிவீர்கள். இந்த ஆண்டில் முக்கிய கிரகமான குரு பகவான் 12-ம் இடமான மிதுனத்தில் இருக்கிறார். இது சிறப்பானதல்ல. ஜூன்13ல் குருபகவான் மிதுனத்தில் இருந்து உங்கள் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அவரால் வீண் விரோதம் வரலாம். மந்த நிலை ஏற்படலாம். ஆனால்,குருவின் பார்வை பலத்தால் நன்மை கிடைக்கும். 5-ம் பார்வையால் குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பொருளாதார வளம் அதிகரிக்கும். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 7-ம்பார்வையால் செல்வாக்கு அதிகரிக்கும். தேவை பூர்த்தியாகும். வாழ்வில் சுபயோகம் உண்டாகும். சுப நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். 9ம் பார்வையால் உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தைவெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். ராகு 4-ம் இடமான துலாமில் இருப்பதால் நன்மை தர இயலாது. ஜூன்21ல் ராகு துலாமில் இருந்துகன்னிக்கு மாறுகிறார். 3-ம் இடம் என்பதால் அவரால், காரியவெற்றி, பொருளாதார வளம், குடும்ப மகிழ்ச்சி, தொழில் விருத்தி உண்டாகும். கேது 10-ம் இடமான மேஷத்தில் இருப்பதால்உடல் உபாதை உருவாகும். ஜூன் 21 கேது மேஷத்தில் இருந்து மீனத்திற்குமாறுவதால் நன்மை பல தருவார். சனிபகவான் 4-ம் இடமான துலாமில் உள்ளார். இது சிறப்பான நிலை அல்ல. தற்போது அவர் வக்கிரத்தில் சிக்கி இருப்பதால் சிறப்பாக இயங்க முடியாது. அதனால் கெடுபலன் உண்டாகாது.மாறாக நன்மையே நடக்கும். டிசம்பர் 16ல் சனிபகவான் துலாமில் இருந்து விருச்சிகத்திற்கு மாறுகிறார். அவர்திருப்தியற்ற நிலையில்இருந்தாலும் அவரது 7-ம் இடத்து பார்வை சிறப்பாக உள்ளது. இதனால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள்  உறுதுணையாக செயல்படுவர்.பொருளாதார வளம் கடந்த காலத்தைவிட சற்றுஅதிகரிக்கும். ஆனால்அதற்கு சற்று முயற்சி எடுக்கவேண்டியதிருக்கும். பெரியோர்களின் ஆலோசனை கிடைக்கும். ஜூன் 21 முதல் சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.  கணவன், மனைவி இடையே அன்பு நீடிக்கும். ஆனாலும் அவ்வப்போது கருத்து வேறுபாடு உண்டாவதை தவிர்க்க முடியாது. வீடு, மனை வாங்கும் முயற்சி தள்ளிப் போகலாம். ஜூன் முதல் தடைபட்டு வந்த திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.

தொழில், வியாபாரம்: தொழில், வியாபாரத்தில் சீரான முன்னேற்றம் இருக்கும். வியாபாரம் விஷயமாக வெளியூர் பயணம் சென்று வருவர். அரசு வகையில் எதிர்பார்த்த நன்மை ஆரம்பத்தில் கிடைக்காது. ஆனால் ஜூன் 21 க்கு பிறகு லாபம் அதிகரிக்கும். அலைச்சல் இருக்கும். அரசின் உதவி கிடைக்கும். எதிரிதொல்லையை எளிதில் முறியடிப்பீர்கள்.

பணியாளர்கள்: உத்தியோகத்தில் சீரான பலனைக் காணலாம். பணிச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உங்கள் திறமைக்கு ஏற்ப மதிப்பு, பாராட்டு இல்லாமல்போகலாம். சிலருக்கு இடமாற்றம் வரலாம்.அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. ஜூன் 21 முதல் முன்னேற்றம் காணலாம். பதவி உயர்வு கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். சற்று முயற்சி செய்தால் உங்கள் கோரிக்கை நிறைவேறும்.

கலைஞர்கள்:  ஆண்டின் தொடக்கத்தில் சிரத்தைஎடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்களைப் பெறமுடியும். பிற்பகுதியில் நன்மை அதிகரிக்கும்.அரசியல்வாதிகள்: எதிலும் விடாமுயற்சி மேற்கொள்ள வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த பதவி கிடைக்காது. ஜூன் முதல் பணப்புழக்கத்திற்கு எந்தகுறையும் இருக்காது. புதிய முயற்சியில்முன்னேற்றம் காண்பர்.

மாணவர்கள்: இந்த கல்வி ஆண்டுஅக்கறையுடன் படிப்பது நல்லது. அதிக உழைப்பு கூடுதல் மதிப்பெண்ணுக்கு வழிவகுக்கும்.

விவசாயிகள்: பொருளாதாரவளத்தில் எந்த குறையும்இருக்காது. ஆனால் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

பெண்கள்: புத்தாடைஅணிகலன் வாங்கிமகிழ்வீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். அமைதியும், பொறுமையும் தேவை. அக்கம்பக்கத்தாரிடம் வீண் வாக்குவாதம்வேண்டாம்.  உடல்நலம் சிறப்படையும்.மருத்துவச் செலவு குறையும்.

சூரியனை ஆட்சி நாயகனாக கொண்டசிம்ம ராசி அன்பர்களே!

வாழ்க்கையில் எப்பொழுதும் பிரகாசமாகவே காணப்படுவீர்கள். ஆண்டின் தொடக்கத்தில்குருபகவான் மிதுன ராசியில் உள்ளார். அவரால் பொருளாதார வளம் மேம்படும். ஆண்டு முழுதும் மனம் போல ஆடம்பர வாழ்வு வாழ்வீர்கள். தொழில், உத்தியோகம் சிறப்படையும். ஜூன்13ல் குருபகவான் மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு பெயர்ச்சிஆவதால், நன்மை குறையும். உடல் அலைச்சலும், மனதில் உளைச்சலும் உருவாகலாம்.ராகு சனி பகவானோடு இணைந்து நன்மை தந்து கொண்டிருக்கிறார். இதனால், ஜூன் 21 வரை நன்மை நீடிக்கும். அதன்பின் அவர் கன்னி ராசிக்குபெயர்ச்சியாவதால், பொருளாதார இழப்பும் உண்டாகலாம்.  கேது ஆண்டு தொடக்கத்தில்மேஷத்தில் உள்ளதால் முயற்சியில் தோல்வியைஏற்படுத்தலாம். ஜூன்21ல் கேது மீனத்திற்குசெல்கிறார். அதன்பின் அவரால் வந்த தடை நீங்கும்.சனிபகவான் தற்போது 3-ம் இடமான துலாமில் உள்ளார். அவர் பொருளாதார வளம், குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழில் விருத்தியை தந்து கொண்டுஇருக்கிறார். டிசம்பர் 16ல் சனிபகவான் விருச்சிகத்திற்கு மாறுகிறார். இது அவ்வளவு சிறப்பானதல்ல. குடும்பத்தில் வீண் விரோதம் வளரும். ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகலாம். சனி சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 3-ம் இடத்துப்பார்வை சிறப்பானஇடத்தில் விழுகிறது. இது மிகசாதகமான நிலையே. மேலும் தற்போது சனிபகவான் வக்கிரத்தில் இருக்கிறார். கெடுபலன் தரும்நிலையில் ஒரு கிரகம் வக்கிரம் அடைந்தால் நன்மையே உண்டாகும்.குடும்பத்தில் ஜூன்13க்கு பிறகு தம்பதியர் இடையே கருத்துவேறுபாடு வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். புதிய வீடு மனை வாங்கும் யோகம் உண்டு. ஆனால் அதற்காக கடன் வாங்க நேரிடலாம். ஜூன் முதல் வீட்டில் செலவு அதிகரிக்கும். ஆடம்பர செலவைத் தவிர்ப்பது நன்மை தரும். சுபவிஷயத்தில்தாமதம் உண்டாகலாம்.

தொழில், வியாபாரம்: நல்லவளர்ச்சியும், அதற்கேற்ப அதிகலாபமும் கிடைக்கும். புதிய தொழில்தொடங்கும் வாய்ப்புண்டு. அதற்கு வக்கிர காலம் உகந்ததாகஅமையும். பொதுவாகதொழிலுக்கு அதிகமாக முதலீடு செய்வதை விட புத்தியை செயல்படுத்தி அதிக வருமானம் பெறலாம். குடும்பபிரச்னையை மறந்து தொழில் செய்து வந்தால்நல்ல முன்னேற்றம் காணலாம். ஆண்டின்பிற்பகுதியில் அதிகமாக உழைக்க  வேண்டியது இருக்கும். சிலர் வியாபாரத்தை ஊர்விட்டு ஊர்மாற்றும் நிலையும் உருவாகும். எதிரிகளால்இடையூறு அவ்வப்போது வரலாம். ஆனால்,எளிதில் முறியடித்து விடுவீர்கள். யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம்.

பணியாளர்கள்:  பணியில் நல்ல முன்னேற்றம்உண்டாகும். அதிகாரிகளின் ஆதரவு சீராகக்கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம்கிடைக்கும். சம்பள உயர்வும் உண்டு. வேலை இன்றி இருப்பவர்கள் நல்ல வேலை கிடைக்கப்பெறுவர். ஜூன்13க்கு பிறகு பணிச்சுமையைச்சந்திக்க வேண்டியதிருக்கும். அதிகாரிகளிடம்அனுசரித்து போவது நல்லது. உங்கள் பொறுப்புகளை வேறு யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். சிலர் வேலை நிமித்தமாக தற்காலிகமாககுடும்பத்தை விட்டு பிரியும் நிலை உருவாகும்.

கலைஞர்கள்: சிறப்பான முன்னேற்றம் காண்பர்.புதிய ஒப்பந்தம் கிடைக்கும். ஆண்டின் பிற்பகுதியில்கலைஞர்கள் தொழிலில் கடின முயற்சி எடுக்கவேண்டியதிருக்கும்.

அரசியல்வாதிகள்: மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். பலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும்.

மாணவர்கள்: இந்த கல்வி ஆண்டில் முதல் மாணவராகத் திகழ்வர். நல்ல மதிப்பெண் கிடைக்கும். அடுத்த கல்வியாண்டில் முயற்சி எடுத்து படிக்க
வேண்டியதிருக்கும்.ஆசிரியர்  அறிவுரையைப் பின்பற்றி  நடப்பதுநல்லது.

விவசாயிகள்: உழைப்புக்கு ஏற்ப வருமானம் காண்பர். நெல், கோதுமை, கடலை,எள் போன்ற பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும். மே மாதத்திற்கு பிறகு வழக்கு விவகாரத்தில் சாதக பலன் கிடைக்காது. புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம்.

பெண்கள்: உற்சாகமாக வாழ்வில் ஈடுபடுவர். குழந்தைகளின் வளர்ச்சி கண்டு பெருமிதம் கொள்வர். விருந்து,விழா என சென்று வருவீர்கள். உறவினர்களிடம் கொஞ்சம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உடல் நலம் சுமாராக இருக்கும். உஷ்ணம், தோல், தொடர்பான நோய் உண்டாகலாம்.

புதனை ஆட்சி, உச்சனாக கொண்டகன்னி ராசி அன்பர்களே!


உங்களின் மென்மையான போக்கால்அனைவரையும் கவருவீர்கள். பசுமை நிறைந்தஉங்கள் வாழ்வில், கடந்த சில ஆண்டுகளாக எண்ணற்ற கஷ்டத்தை அனுபவித்து வந்தீர்கள். அதற்கு காரணம் முக்கிய கிரகங்கள் எதுவும் சாதகம் இல்லாமல் இருப்பதே. இந்த ஆண்டு பிற்பகுதியில் நன்மை வரத் தொடங்கும்.ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் மிதுன ராசியில் இருக்கிறார். அவரால் பொருள் நஷ்டம், மன சஞ்சலம் ஏற்படலாம். ஜூன்13ல் குருபகவான் மிதுனத்தில் இருந்து லாபஸ்தானமான கடகத்திற்கு மாறுகிறார். இது சிறப்பான இடம். இதனால், பொருளாதார வளம் மேம்படும். உத்தியோகம் சிறக்கும். புதிய பதவி கிடைக்க யோகமுண்டு.நிழல் கிரகமான ராகு தற்போது சனிபகவானோடு 2-ம் இடத்தில் இணைந்திருக்கிறார். இதனால் அவரால் நன்மை தர முடியாது. ஆனால் குருபகவானின் பார்வை அவர்கள் மீது விழுவதால் கெடுபலன்உண்டாகாது. ஜூன் 21ல் ராகு உங்கள் ராசிக்குவருகிறார். அதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. இதனால், உடல் உபாதையும், உறவினர் வகையில் மனக்கசப்பும் ஏற்படலாம்.கேது தற்போது 8-ம் இடமான மேஷத்தில்இருக்கிறார். இதுவும் நல்லதல்ல. உஷ்ணம், பித்தம், மயக்கம், சளி போன்ற தொந்தரவு அடிக்கடி வரலாம். ஜூன் 21ல் கேது 7-ம் இடத்திற்கு வருகிறார். அங்கும் அவரால் நன்மை கிடைக்காது. அலைச்சல் அதிகரிக்கும். மனவேதனை உண்டாகும். மனைவி வகையில் பிரச்னை வரலாம். அதேநேரம் குருவின் பார்வை கேது மீது விழுவதால் கெடுபலன் குறையும்.சனிபகவான் 2-ம் இடமான துலாமில் உள்ளார். அவர் குடும்பத்தில் பிரச்னை ஏற்படுத்துவார். பொருள் களவுபோக நேரிடும். பொருளாதார இழப்பு உண்டாகும். தற்போது சனிபகவான் வக்கிரத்தில் சிக்கி இருப்பதால் அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. வக்கிரநிலையிலும், அதே துலாம் ராசியிலேயே இருப்பதால் கெடுபலன் நடக்காது. டிச. 16ல் சனிபகவான் துலாமில் இருந்து விருச்சிகத்திற்கு இடப்பெயர்ச்சியாகிறார். இது சிறப்பான வகையில் நன்மை வாழ்வில் ஏற்படும். முயற்சி அனைத்தையும் வெற்றி அடைய செய்வார். பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் சிறந்தோங்கச் செய்வார்.

தொழில், வியாபாரம்:  தொழிலில் அலைச்சலுக்கு குறைவிருக்காது. புதிய வியாபாரத்தை ஆரம்பிக்கலாம். தொடக்கத்தில் பொருள் விரயம்ஏற்பட வாய்ப்புண்டாகும். அரசிடம் எதிர்பார்த்த சலுகை கிடைக்காது. ஜூன் மாதம் முதல் வருமானம் அதிகரிக்கும். பகைவர் கூட உங்களை உணர்ந்து சரண் அடைவர். கொடுக்கல் வாங்கல் சிறப்பாகஇருக்கும். திறமை மேம்படும். அரசின் உதவிகிடைக்கும். வேலை இன்றி இருப்பர்கள் சுய தொழிலை ஆரம்பிக்க வாய்ப்புண்டு. ஆண்டின் இறுதியில் லாபம் பன்மடங்கு அதிகரிக்கும்.

பணியாளர்கள்: பணிச்சுமை அதிகரிக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலருக்கு விரும்பாதஇடமாற்றம் ஏற்படலாம். ஜூன் மாதத்திற்குப் பிறகு நன்மையான பலனை எதிர்பார்க்கலாம். வேலையில் இருந்து வந்த தடை, திருப்தியின்மை அடியோடு மறையும். வேலையில் புதிய தெளிவு பிறக்கும்.அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களும் உதவிகரமாக இருப்பர். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். சிலர் அதிகாரஅந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். வேலை இன்றி இருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் புதியவேலை கிடைக்கும்.

கலைஞர்கள்:  தொடக்கத்தில் சுமாரான பலனைகாணலாம். புதிய ஒப்பந்தம் பெற விடா முயற்சி தேவைப்படும். ஜூன் மாதம் முதல் கலைஞர்கள் எளிதில் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். பாராட்டு, விருது போன்றவை கிடைக்கும்.

அரசியல்வாதிகள்:  அரசியல்வாதிகள் சீரான நிலையில் இருப்பர். தொண்டர்களின் ஆதரவு நல்ல முறையில் கிடைக்கும். பொது மக்களிடையே நற்பெயர்கிடைக்கும்.

மாணவர்கள்:  இந்த கல்வி ஆண்டில் அக்கறையுடன் படிக்க வேண்டும். முயற்சிக்கு தகுந்த பலன்கிடைக்காமல் போகாது. அடுத்த கல்வி ஆண்டுசிறப்பானதாக அமையும். விரும்பிய நிறுவனத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெறுவீர்கள். படிப்பில் பளிச்சிடுவீர்கள். சிலர் வெளிநாடு சென்றுபடிக்கும் யோகத்தைப் பெறுவர்.

விவசாயிகள்:  விவசாயத்தில் சிறப்பானமகசூலும், நல்ல வருமானமும்கிடைக்கும். புதிய சொத்து வாங்க யோகமுண்டு. வழக்கு விவகாரங்கள் சாதகமாக சூழல் அமையும். எதிர்பார்த்த நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

பெண்கள்:  குடும்ப வாழ்வில் குதூகலம் காண்பர். குழந்தை பாக்கியம் பெறுவர். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். ஆண்டின் பிற்பகுதியில் முன்னேற்றமான பலன் கிடைக்கும். பிறந்த வீடு, உறவினர் வகையில் இருந்த பிரச்னை மறையும். உடல்நலம் சிறப்பாகஇருக்கும். உஷ்ணம், தோல்,தொடர்பான நோய் பூரண குணம் அடையும். பயணப்பீதி மறையும்.

சுக்கிரனை ஆட்சி கிரகமாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே!

நீங்கள் கலை ஆர்வம் மிக்கவர்களாகஇருப்பீர்கள். நீதி, நேர்மை எப்பக்கம் இருக்கிறதோ அப்பக்கம் சாய விரும்புவீர்கள். உங்கள் நட்புகிரகங்களான செவ்வாய், கேது ஆகியோர் சாதகமற்ற சூழ்நிலையில் இருக்க, இந்த புத்தாண்டுபிறக்கிறது. ஆனால், ஜூலை முதல் சுப மங்களமாக இருக்கும். இந்த ஜய வருடத்தில் உங்கள் ராசிக்குதற்போது 9-ம் இடமான மிதுனத்தில் குரு உள்ளார். அவர் குடும்பத்தில் பல்வேறு முன்னேற்றங்களை தந்து மகிழ்ச்சி அடையவைப்பார். ஜூன்13ல், குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு மாறுகிறார். 10ம் இடமான அங்கு அவர் பொருள் நஷ்டத்தையும், மன சஞ்சலத்தையும் ஏற்படுத்தலாம். சவால்களை சமாளிக்க வேண்டியிருக்கும்.ராகு தற்போது சனிபகவானோடு இணைந்து உங்கள் ராசியில் இருக்கிறார். அவர் உடல் உபாதையையும், உறவினர்கள் வகையில் வீண்மனக்கசப்பையும் தரலாம். ஆனால், அவர்கள் மீது குருபகவானின் பார்வை விழுவதால் பெரிய அளவு கெடு பலனை தரமாட்டார்கள். ஜூன்21ல், ராகு 12-ம் இடமான கன்னிக்கு மாறுகிறார். அதனால்வெளியூர் பயணம் ஏற்படலாம். கேது தற்போது 7-ம் இடமான மேஷத்தில் இருக்கிறார். அவரால் அலைச்சல், மனவேதனை, மனைவி வகையில் தொல்லை வரலாம். ஜூன்21ல், அவர் மீனத்திற்கு சென்று நன்மை தருவார். பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர்களின் தொல்லையில் இருந்து விடுபடலாம். அபார ஆற்றல் பிறக்கும்.சனிபகவான் உங்கள் ராசியில் இருக்கிறார்.இது ஏழரை சனியின் உச்சகட்ட காலம்தான். இதனால் உடல் உபாதைகள், உறவினர் வகையில் வீண்மனக்கசப்பு வரலாம். ஆனால், தற்போது அவர்வக்கிரத்தில் இருக்கிறார். வக்கிர காலத்தில் அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. சாதகமற்ற நிலையில் இருக்கும் அவரால்சிறப்பாக செயல்பட முடியாதது உங்களுக்கு சாதகமான பலனையே தரும். சனிபகவான் தான்நிற்கும் இடத்தில் இருந்து 3,7,10-ம் இடங்களை பார்ப்பார். அந்தவகையில் அவரது 3-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்துள்ளது. டிசம்பர் 16ல், சனிபகவான் விருச்சிகத்திற்கு மாறுகிறார். சனி 2-ம்இடத்தில் இருக்கும் போது குடும்பத்தில் பிரச்னைகளை உருவாக்குவார். பொருளாதார இழப்பு ஏற்படும். ஆனால், சனிபகவானின் 10-ம் இடத்துப் பார்வை உங்களுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. அதன் மூலம் சில நற்பலன்கள் கிடைக்கும்.எந்தச் செயலையும் வெற்றிகரமாக நிறைவேற்றலாம். தடைகள் அகலும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். செலவுகளும் ஏற்படும். உங்கள் மீதான அவப்பெயர்மறையும். செல்வாக்கு மேலோங்கும். அக்கம்பக்கத்தினர் உங்களைப் புகழ்வர். ராகுவால் வரும் தடைகளை எளிதில் முறியடிக்கலாம்.குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கலாம். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஆண்டின் தொடக்கத்தில் கைகூடும். அதுவும் நல்ல வரனாக அமையும். தம்பதியினரிடையே அன்பும், பாசமும் மேம்படும்.குழந்தை பாக்கியம் கிடைக்கும். விருந்து, ஜூன்13 முதல் வீட்டில் சிற்சில பூசல்கள் வரலாம். விட்டுக் கொடுத்து போகவும். செப்டம்பர், நவம்பரில் வீடு, மனை வாங்க யோகம் உண்டு.

தொழில், வியாபாரம்: வியாபாரிகள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். உங்களிடம் வேலை பார்ப்பவர்கள் நம்பிக்கையுடன் இருப்பர். அரசிடம் எதிர்பார்த்த உதவிகள் தொடக்க காலத்தில் கிடைக்கும். இது ஏழரை சனி காலம் என்பதால், புதிய தொழில் வேண்டாம். யாரையும் நம்பி பணத்தைஒப்படைக்காதீர்கள். அரசு வகையில் சலுகைகளை எதிர் பார்க்க முடியாது.

பணியாளர்கள்: உத்தியோக மாற்றம் கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். ஜூன் முதல் வேலைப்பளு மேலும் அதிகரிக்கும். மேல்அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலர் வீண் மனக் குழப்பத்தினால் வேலையில் ஆர்வமில்லாமல் இருப்பர். போலீஸ், ராணுவத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பர்.

கலைஞர்கள்: புதிய ஒப்பந்தம், புகழ், பாராட்டு கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: ஓரளவே மேம்பாடு காணலாம். பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும்.

மாணவர்கள்: இந்த கல்வி ஆண்டு சிறப்பாக இருக்கும். நல்ல மதிப்பெண் பெறலாம். அடுத்த கல்வியாண்டில்அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டும்.

விவசாயிகள்: நெல், கோதுமை சோளம், மொச்சை சிறப்பைத் தரும். ஜூன் முதல் அதிக செலவு பிடிக்கும் பயிர்களை தவிர்க்கவும்.செப்டம்பர் முதல் நவம்பர் வரை நிலக்கடலை மற்றும் கிழங்குபயிர்கள் நல்ல மகசூலைத் தரும்.இந்தக் காலக்கட்டத்தில் புதிய நிலம் வாங்கலாம்.

பெண்கள்: பணநிலையில்முன்னேற்றம் காண்பர்.பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.


செவ்வாயை ஆட்சி நாயகனாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!

வீரத்திற்கும், தீரத்திற்கும் சளைக்காதவர்கள்நீங்கள். எதிரிகளை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளும் வல்லமை படைத்தவர்கள். பரபரப்பும், சுறுசுறுப்பும் உங்கள் உடன்பிறப்பு. இந்த ஜயவருடத்தில், குரு பகவான் 8-ம் இடமான மிதுன ராசியில் இருக்கிறார். இது சிறப்பானது அல்ல. அங்கு பொருள் விரயத்தையும், வீண்விரோதத்தையும் தரலாம். ஜூன்13ல், அவர்மிதுனத்தில் இருந்து 9ம் இடமான கடகத்திற்குமாறுகிறார். அப்போது, அவர் குடும்பத்தில்பல்வேறு முன்னேற்றங்களை தந்து மகிழ்ச்சி அடைய வைப்பார்.ராகு தற்போது சனிபகவானுடன்இணைந்திருக்கிறார். அவருடன் சேர்ந்துபிற்போக்கான பலனையே தருவார். ஆனால்,அவர் மீது  குருவின் பார்வை விழுவதால்கெடுபலன்களின் தாக்கம் இருக்காது. மேலும், ஜூன் 21ல், ராகு இடம்மாறி 11-ம் இடமானகன்னிக்கு செல்கிறார். அங்கு சென்ற பின்நன்மைகள் தருவார். பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர்.கேது தற்போது 6-ம் இடத்தில் இருப்பது உங்களுக்கு சிறப்பானது. அவரால் பொன்னும் பொருளும் தாராளமாக கிடைக்கும். காரியஅனுகூலம் ஏற்படும். ஜூன் 21ல் அவர் இடம்மாறி மீனத்திற்கு வருவார். இது சிறப்பான இடம் அல்ல. அங்கு அவரால் எதிரிகளின் தொல்லை வரலாம். உடல்நலம் லேசாக பாதிக்கப்படலாம். சனிபகவான் 12ம் இடமான துலாம்ராசியில் உள்ளார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. சனி 12-ம்இடத்தில் இருக்கும் போது பொருளாதார இழப்பு வரலாம். வெளியூர் பயணம்ஏற்படும். எதிரிகளின் இடையூறுஅவ்வப்போது வரலாம். இதனால்நீங்கள் அஞ்ச வேண்டாம். காரணம் இப்போது சனிபகவான் வக்கிர நிலையில் உள்ளார். வக்கிர காலத்தில் அவரால் சிறப்பாக செயல்பட முடியாது.சாதகமற்ற கிரகம் செயல்படமுடியாமல் போவது உங்களுக்கு சாதகம்தானே!. சனி சாதகமற்ற நிலையில் இருந்தாலும், அவரது 7-ம் இடத்து பார்வை மூலம் அவர் நல்ல பொருளாதார வளத்தைக் கொடுப்பார்.பகைவர்களை எதிர்கொள்ளும்ஆற்றல் கிடைக்கும். டிசம்பர் 16ல், சனிபகவான்  துலாமில் இருந்து உங்கள் ராசிக்கு  மாறுகிறார். இது ஏழரை சனியின்  உச்கட்ட காலம். இதனால் உடல் உபாதைகள் வரலாம். உறவினர்கள் வகையில் வீண்மனக்கசப்பு ஏற்படும். வெளியூரில் வசிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும்  ஜோதிடம் கூறுகிறது. சனிபகவான் தான் நிற்கும் இடத்தில் இருந்து 3,7,10-ம் இடங்களை பார்ப்பார். அந்த வகையில் அவரது 3-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்துள்ளது.

தொழில், வியாபாரம்: தொழில், வியாபாரத்தில் தற்போதைய வருமானத்திற்கு பாதிப்பிருக்காது. அதேநேரம், ஏழரை சனி காலம் என்பதால் எதிலும் அதிக முதலீடு போடவேண்டாம். புதிய தொழிலும் வேண்டாம். இருப்பதை சிறப்பாக நடத்தினாலே போதும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமைஏற்படும். ஜூன் 21க்கு பிறகு அரசு வகையில்
எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்கும். எதிரிகள்தொல்லை இருக்கத்தான் செய்யும்.

பணியாளர்கள்: சம்பள உயர்வு உள்ளிட்டவற்றை இப்போது எதிர்பார்க்க முடியாது. டிரான்ஸ்பர் கிடைக்கும். குடும்பத்தை விட்டு வேறு இடத்தில் பணியாற்ற வேண்டி வரும்.

கலைஞர்கள்: தொடக்க காலத்தில் சுமாரானபலனையே காண்பர். சிரத்தை எடுத்தே புதியஒப்பந்தங்களை பெற வேண்டியதிருக்கும். ஆனால் ஜூன்13க்கு பிறகு வசதியுடன் வாழ்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புகழ் பாராட்டு வரும். சிலர் அரசிடம் இருந்து விருது பெறவாய்ப்பு உண்டு.
 
அரசியல்வாதிகள்: மேம்பாடு ஏற்படும். பதவியும், பணமும் கிடைக்கும்.

மாணவர்கள்:  இந்த கல்வி ஆண்டு கஷ்டப்பட்டு படிக்க வேண்டியதிருக்கும். அடுத்த கல்வி ஆண்டில் வெற்றி எளிதாகும். நல்ல மதிப்பெண் வாங்கலாம்.

விவசாயிகள்: சிறப்பான ஆண்டு. நெல், சோளம் போன்ற வகைகளில் அதிக மகசூல் கிடைக்கும். ஜூன் மாதத்திற்குப் பிறகு கிழங்கு வகைகள், நிலக்கடலை போன்ற பயிர்களில் நல்ல மகசூலை பெறலாம். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.

பெண்கள்: வேலைக்கு செல்லும் பெண்கள்மிகவும் பளுவை சுமக்க வேண்டிய திருக்கும். ஜூன் 13க்கு பிறகு குதூகலமான பலனைக் காணலாம்.கணவரின் அன்பு கிடைக்கும். உடல்  நலனில் அக்கறைகாட்டவும். ஆண்டின்பிற்பகுதியில்சரியாகி விடும். சிலர் மனத்தளர்ச்சியுடன் காணப்படுவர்.


குரு பகவானை ஆட்சி கிரகமாக கொண்ட தனுசு ராசி அன்பர்களே!

 இந்த ஆண்டு சீரான பலனை காணலாம். அதிக ஏற்றமும் இல்லாமல், தாழ்வும் இல்லாமல் இருக்கும். உங்கள் ஆட்சி நாயகனான குரு, உங்கள் ராசிக்கு7-ம் இடமான மிதுனத்தில் உள்ளார். இது சிறப்பான அம்சம். அங்கு அவரால் பல நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுப நிகழ்ச்சியைத் தருவார். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். ஜூன்13ல், அவர் மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு மாறுகிறார். இது சிறப்பானது அல்ல. அங்கு பொருள் விரயத்தையும், வீண் விரோதத்தையும் தரலாம்.ராகு தற்போது 11ம் இடமான துலாமில், சனிபகவானோடு இணைந்து இருக்கிறார். அவரோடு இவரும் சேர்ந்து நன்மை தருவார். அவரால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிக உறுதுணையாகஇருப்பர். ஜூன் 21ல், ராகு 10-ம் இடமான கன்னிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் அல்ல. அங்கு பொல்லாப்பையும், பெண்கள் வகையில்தொல்லைகளையும் தரலாம். கேது தற்போது 5-ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. இதனால் எதிரிகளின் தொல்லை வரலாம். உடல்நலம் லேசாகபாதிக்கப் படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவைப்படும். கேது ஜூன் 21-ந் தேதி கேது 4-ம் இடமான மீனத்திற்கு மாறுகிறார். இதன் மூலம் தீயோர்  சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். உடல் நலம் பாதிப்பு வரலாம்.பயணத்தின் போது சற்று கவனம் தேவை. சனிபகவான் தற்போது 11ம் இடமான துலாமில் உள்ளார். இது சாதகமான இடம். பல்வேறுநன்மைகளைத் தர உள்ளார். அவரால் பொன், பொருள் கிடைக்கும். தற்போது  சனிபகவான் வக்கிரம் அடைந்துள்ளார். இதனால் அவரால்  உங்களுக்கு சாதகமாக முழுமையாக செயல்பட முடியாமல் போகும். அதேநேரம், அவர் வக்கிரம் அடைந்தாலும் துலாம் ராசியில்தான் இருக்கிறார். இதனால் பாதக முடிவு அதிகம் இருக்காது. எனவே கவலை வேண்டாம். டிசம்பர் 16ல், இவர் துலாமில் இருந்து விருச்சிகத்திற்கு  மாறுகிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது.சனி 12-ம் இடத்தில் இருக்கும் போது பொருளாதார இழப்புவரலாம். வெளியூர் பயணம்ஏற்படும். எதிரிகளின்இடையூறு அவ்வப்போதுவரலாம். அதற்காக, நீங்கள் அஞ்ச வேண்டாம்.காரணம், சனி சாதகமற்ற நிலையில் இருந்தாலும்சனியின் 7-ம் இடத்து பார்வை மூலம் நல்ல பொருளாதார வளத்தைக் கொடுப்பார். பகைவர்களை எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும். கணவன்- மனைவி இடையே அன்பும், பாசமும் நீடிக்கும். மனைவி வகையில் இருந்து வந்த ஊடல் மறையும். உறவினர்கள் வகையிலும் பிரச்னை அகன்றுஅன்யோன்யம் பிறக்கும். ஜூன் மாதத்திற்கு பிறகு வீட்டில் சில பிரச்னைகள் வரலாம். உறவினர்கள் வகையில் அனுகூலமான போக்கு காணப்படும்.திருமணம் போன்ற சுப காரியங்கள் தடைபடலாம்.

தொழில், வியாபாரம்: வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். ஆனால் ஓய்வின்றி உழைத்துக் கொண்டே இருக்க வேண்டியிருக்கும். போட்டியாளர்கள் சதியை எளிதில் முறியடிக்கலாம். எதிலும் அதிகமுதலீடு செய்ய வேண்டாம். இருப்பதை சிறப்பாக நடத்தினால் போதும். பணவிரயம், பணம் திருட்டு போன்றவை தடுக்கப்படும். வெளியூர் பயணம் அனுகூலம் தரும். ஜூன் முதல் அரசின் உதவி கிடைப்பது அரிதாகும். புதிய தொழில் தொடங்க வேண்டாம்.

பணியாளர்கள்: ஜூன் வரை சிறப்பான நிலை இருக்கும். புதிய பதவி கிடைக்கப் பெறலாம். மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். ஜூலை முதல் வேலைப்பளு அதிகரிக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காமல் போகலாம். கோரிக்கைகளை அதிக முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியது இருக்கும்.

கலைஞர்கள்: புதிய ஒப்பந்தம் கிடைக்கும். புகழ் செல்வாக்கு உயரும்.

அரசியல்வாதிகள்: கடும் முயற்சி செய்தாலும், பதவி கிடைப்பது சிரமமாகவே இருக்கும்.

மாணவர்கள்: இந்த கல்வி ஆண்டில் மேன்மையும், ஜூன் முதலான அடுத்த கல்வி ஆண்டில் சிரத்தை எடுத்தும் படிக்க வேண்டியிருக்கும்.

சனி பகவானை ஆட்சி நாயகனாக கொண்ட மகர ராசி அன்பர்களே!

 கடந்த சில ஆண்டுகளாக உங்கள் ஆட்சி நாயகன் சனி பகவான், பல்வேறு இன்னல்களையும், இடையூறுகளையும் தந்து கொண்டிருப்பார். குறிப்பாக, தொழிலில் சிறுசிறு பின்னடைவு, உங்கள் செல்வாக்கில் தளர்ச்சி உருவாக்கி இருப்பார். குரு, ராகு-கேது என முக்கிய கிரகங்கள் எதுவுமேசாதக மாக இல்லாததும் ஒரு காரணம். இந்த ஆண்டு பின்தங்கிய நிலையில் இருந்து விடுபட்டு முன்னேற்றத்திற்கு வழிவகை காண்பீர்கள்.ஜய ஆண்டின் தொடக்கத்தில், குரு 6-ம் இடமான மிதுன ராசியில் இருக்கிறார். அங்கு அவரால் நன்மை தரமுடியாது. அவர் மனதில் தளர்ச்சியையும், உடல் உபாதைகளையும் தரலாம். ஜூன்13ல், குரு, மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு மாறுகிறார். 7-ம் இடமான அங்கு குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுப நிகழ்ச்சியைத் தருவார். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். பணியாளர்களுக்கு உயர்வு கிடைக்கும்.ராகு தற்போது 10-ம் இடமான துலாமில் சனிபகவானோடு இணைந்துள்ளார். அங்கு பொல்லாப்பையும், பெண்கள் வகையில் தொல்லைகளையும் தரலாம். ஆனால், குரு பார்வை படுவதால் அவரால் கெடுபலனை தர முடியாது. ஜூன் 21ல், ராகு 9-ம் இடமான கன்னிக்கு மாறுகிறார். அவரால் முயற்சிகளில் தடை,எதிரிகளின் இடையூறு வரலாம்.கேது தற்போது 4-ம் இடத்தில் இருந்துஉங்களை தீயோர் சேர்க்கைக்கு ஆளாக்கி தொல்லைகளை தரலாம். அவர் ஜூன்21ல் மீனத்திற்கு வருகிறார். இது சிறப்பான இடம். இறை அருளையும் காரிய அனுகூலத்தையும் தருவார். பொருளாதார வளத்தை மேம்படுத்துவார். சனி பகவான், உங்கள் ராசிக்கு 10ம் இடத்தில் இருக்கிறார். துலாம் ராசியில் இருக்கும் அவரால், சிறப்பானபலனைத் தர இயலாது. அவரால் தொழிலில் சிறுசிறு பின்னடைவுஏற்படலாம். உடல் உபாதைகள் லேசாக நோகச் செய்யலாம். இதைக் கண்டு நீங்கள் அச்சம் கொள்ள வேண்டாம். காரணம் தற்போது அவர் வக்கிரம்அடைந்துள்ளார். பொதுவாக எந்த கிரகம் வக்கிரம் அடைந்தாலும் அவர்களால் பழைய பலனை தர இயலாது. அந்த வகையில் சனிபகவானால் உங்களுக்கு கெடு பலனை தர இயலாது. டிசம்பர் 16ல், இவர் விருச்சிகத்திற்கு மாறுகிறார். இது சாதகமான இடம். பல்வேறு நன்மைகளை தர உள்ளார். அவரால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்களால் முன்னேற்றம் காணலாம்.வீட்டுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும்.கணவன்- மனைவி இடையே அன்பு மேம்படும். குழந்தை பாக்கியம் பெறுவீர்கள். ஜூன் 21க்கு பிறகு தடைபட்ட திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். புதிய வீடு வாங்கும் யோகம் தொடரும்.தொழில், வியாபாரம்: எதிரிகளின் தொல்லையை சாமர்த்தியமாக முறியடிப்பீர்கள். சனி வக்கிரமாகி இருப்பதால் சற்று முன்னெச்சரிக்கை வேண்டும். டிசம்பர் 16க்கு பிறகு முதல் அதிக வளர்ச்சி காணலாம். புதிய தொழில் தொடங்கலாம். அரசிடமிருந்து எதிர்பார்த்த சலுகைகள் வந்து சேரும்.  வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மறையும். லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் வெற்றி அடையும். அரசு வகையில் உதவி கிடைக்கும்.

பணியாளர்கள்: சீரான முன்னேற்றம் காணலாம்.அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். மேல்அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். ஜூன் முதல் நல்ல முன்னேற்றம் காணலாம். உங்களை புரிந்து கொள்ளாத அதிகாரிகள், இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பர். பதவி உயர்வு கிடைக்கும். சிலர் மிக அதிகாரமிக்க பதவிக்கு உயர்த்தப்படுவர். சம்பள உயர்வு எதிர்பார்த்ததைவிட அதிகமாக கிடைக்கும். வெகு நாட்களாக எதிர்பார்த்தஇடமாற்றம் கிடைக்கும்.

கலைஞர்கள்: ஜூன் முதல் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். நல்ல மனிதர்களின் தொடர்பு கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: நல்ல வளத்தோடு புதியபதவியும் கிடைக்கப் பெறுவர்.

மாணவர்கள்: அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டும். ஜூனில் துவங்கும் அடுத்த கல்வி ஆண்டில் சிறப்பான முன்னேற்றம் காணலாம். போட்டி,பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள்.

விவசாயிகள்: புதிய சொத்து வாங்கலாம். வழக்கு விவகாரங்கள் சாதகமாகஇருக்கும்.

பெண்கள்: புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். குடும்பம் மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஆண்டின்பிற்பகுதியில், குழந்தை பாக்கியமும், மன நிம்மதியும் பெறலாம். உடல் நலம் சிறப்பாகஇருக்கும். பிள்ளைகள்உடல்நலனில் சற்றுகவனமாக இருக்கவும்.

சூரியன், புதன், குரு, சுக்கிரன் ஆகியோரை நட்பாக கொண்ட  கும்ப ராசி அன்பர்களே!

குரு-கேதுவால், இந்த ஆண்டு தொடக்கம்உங்களுக்கு பிரகாசமாக அமையும். குருபகவான் தற்போது 5-ம் இடமான மிதுன ராசியில் இருக்கிறார். அங்கு பொருளாதார வளத்தையும், சுபங்களையும் தருவார். ஜூன்13ல், அவர் மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு மாறுகிறார். 6-ம் இடமான அங்கு அவர் மனதில் தளர்ச்சியையும், உடல் உபாதைகளையும் தரலாம். செலவு அதிகரிக்கும். உங்கள் முயற்சியில் தடைகள் வரலாம். மதிப்பு,மரியாதை சுமாராகத்தான் இருக்கும். வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.ராகு தற்போது 9-ம் இடமான துலாமில் சனிபகவானோடு உள்ளார். அவரால் முயற்சிகளில் தடை, எதிரிகளின் இடையூறு போன்றவை இருக்கும். ஜூன்21ல் இவர் 8-ம் இடமான கன்னிக்கு மாறுகிறார். அங்கு முயற்சிகளில் பல்வேறு தடைகளை உருவாக்குவார். உறவினர்கள் வகையில் மனக்கசப்பை ஏற்படுத்தலாம். கேது தற்போது 3-ம் இடமான மேஷத்தில் இருந்து இறை அருளையும், காரிய அனுகூலத்தை யும் கொடுத்து கொண்டிருக்கிறார். அவர் ஜூன்21ல் இடம் பெயர்ந்து மீனத்திற்கு வருகிறார். இதனால் பொருள் களவு ஏற்பட வாய்ப்புண்டு. பகைவர் வகையில் தொல்லை வரும்.சனி பகவான் 9-ம் இடமான துலாம் ராசியில் உள்ளார். இது சிறப்பான இடம் என்றுசொல்ல முடியாது. இங்கு அவர் இருக்கும்போது, உங்கள் முயற்சிகளில் தடைகள் வரலாம்; எதிரிகளின் இடையூறு தலைதூக்கும்; பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். இந்த கெடுபலன்களை கண்டு அஞ்ச வேண்டாம். சனிபகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது பார்வையால் நன்மை கிடைக்கும். அவர் தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10-ம் இடங்களை பார்ப்பார். அந்த மூன்று பார்வைகளும் உங்களுக்கு சிறப்பாக உள்ளது. டிசம்பர் 16ல், அவர் துலாமில் இருந்துவிருச்சிகத்திற்கு மாறுகிறார். 10-ம் இடமான அங்கு அவரால் சிறப்பான பலனை தர இயலாது. தொழிலில் சிறுசிறு பின்னடைவுகள் ஏற்படலாம். உங்கள் செல்வாக்கு முன்பு போல் இல்லாமல் போகலாம். உடல் உபாதைகள் லேசாகநோகச் செய்யலாம்.ஆண்டின் தொடக்க காலத்தில் மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே அன்பும் நிலவும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி நடக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். வீட்டுக்கு தேவையான சகல வசதிகளையும் பெறுவீர்கள். சிலர் முயற்சி எடுத்து வீடு, மனை வாங்கலாம். ஜூனுக்கு பிறகு திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தாமதம் ஆகலாம்.தொழில், வியாபாரம்: ஜூன் வரை தொழில்,வியாபாரத்தில் தடையில்லா வளர்ச்சி இருக்கும். லாபத்துக்கு குறை இருக்காது. அரசிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம். ஜூலை முதல் லாபம் பெற அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். பணவிரயம் ஆகலாம். யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். புதிய வியாபாரம் வேண்டாம். போட்டியாளர்களின் இடையூறு தலைதூக்கலாம்.

பணியாளர்கள்:
ஜூன் வரை பணியில் முன்னேற்றம் இருக்கும். உங்கள் திறமை மேம்படும். இடமாற்ற பீதி இருக்காது. புதிய பதவிகளை பெறலாம். மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். சிலர் அதிகாரமிக்க பதவிக்கு உயர்த்தப்படுவர். ஜூலை முதல் வேலைப்பளு அதிகரிக்கும். அலைச்சல் இருக்கும். மேல் அதிகாரிகளிடம்அனுசரித்து போகவும். இடமாற்றம் ஏற்படலாம்.

மாணவர்கள்: இந்த ஆண்டு சிறப்பான பலனைகாணலாம். போட்டிகளில் வெற்றிகாணலாம். ஜூனில் துவங்கும் அடுத்த கல்வி ஆண்டில்தீவிர முயற்சி எடுத்தால்தான் நல்ல முன்னேற்றம் காணலாம். இந்த ராசி மாணவர்களின் பெற்றோர்,தங்கள் மகனின் நண்பர்கள் வட்டாரம் நல்லது தானா என்பதை கவனித்து வரவேண்டும்.

கலைஞர்கள்: ஜூன் வரை பெயரும், புகழும்கிடைக்கப் பெறுவர். புதிய ஒப்பந்தம்கிடைக்கும். ஜூலை முதல் புதிய ஒப்பந்தங்கள் முயற்சியின் பேரில் பெறலாம்.

அரசியல்வாதிகள்: பிரதிபலனைஎதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். அதிக லாபம் இராது.

விவசாயிகள்: அதிகமாக உழைக்கவேண்டியதிருக்கும். நெல், கோதுமை, கடலை பயிர்களில் நல்ல விளைச்சல் காணலாம். வழக்கு விவகாரங்கள்சாதகமாக அமையும்.

பெண்கள்: குடும்பத்தில் மகிழ்ச்சிகாண்பர். பிறந்த வீட்டில்இருந்தும் பொருட்கள் வரும்.உறவினர்கள்  ஒன்று சேருவர்.விருந்து, விழா என்று சென்று வருவீர்கள். சிலருக்கு  கோயில்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். வயிறு தொடர்பான உபாதை
வரலாம். பிள்ளைகள்உடல் நலம் தேறும்.

குருவை ஆட்சி நாயகனாக கொண்டமீன ராசி அன்பர்களே!


இந்த ஆண்டு பிற்பகுதியில் கூடுதல் பலனை எதிர்பார்க்கலாம். குருபகவான் ஆண்டின் தொடக்கத்தில் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும், அவர் உங்கள் ராசி நாயகன் என்பதால் அதிக கெடுபலன்கள் நடக்காது. தற்போது குரு 4-ம் இடமான மிதுன ராசியில் உள்ளார். இது சிறப்பான இடம் என்று சொல்லமுடியாது. மன உளைச்சலையும், உறவினர் வகையில் வீண் பகையையும் உருவாக்கலாம். ஜூன்13ல், குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு மாறுகிறார். 5-ம் இடமான அங்கு அவர் நன்மை தருவார். பொருளாதார வளத்தையும், சுபங்களையும் தருவார்.நிழல் கிரகமான ராகு 8-ம் இடத்தில் சனிபகவானோடு இணைந்துள்ளார். அவர் தடைகளையும், உறவினர்கள் வகையில் மனக்கசப்பையும் ஏற்படுத்துவார். ஜூன்21ல், ராகு 7-ம் இடமான கன்னிக்கு மாறுகிறார். அப்போது, அவர் குடும்பத்தில் சிற்சில பிரச்னைகளைஉருவாக்குவார். அலைச்சல் அதிகரிக்கும்.வெளியூர் வாசம் நிகழும்.கேது 2-ம் இடமான மேஷத்தில் உள்ளார்.அங்கு பொருள் விரயத்தையும், பகைவர் வகையில் தொல்லையையும் தந்து கொண்டிருக்கிறார். ஜூன்21ல்இடம் பெயர்ந்து, உங்கள் ராசிக்குவருகிறார். உங்கள் முயற்சிகளில் தடைகள் வரலாம். பகைவர்களின் தொல்லை அதிகரிக்கும். உடல்நலம் பாதிக்கப்படலாம்.சனி பகவான்உங்கள் ராசிக்கு 8ம் இடமானதுலாம் ராசியில் உள்ளார். அஷ்டமத்தில் சனி பகவான், உங்கள் முயற்சிகளில் பல்வேறு தடைகளை உருவாக்குவார். உறவினர்கள் வகையில் மனக்கசப்பும், கருத்துவேறுபாடும் ஏற்படும். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். இவையெல்லாம் பொதுவான பலன்தான். ஆனால், இந்த கெடு பலன்கள் அப்படியே நடக்கும் என்று கவலை கொள்ள வேண்டாம். தற்போது சனிபகவான் வக்கிரம் அடைந்துள்ளதால் அவரால் கெடுபலனை செய்ய முடியாது. மாறாக நன்மை ஓரளவு கிடைக்கும். டிசம்பர் 16ல், அவர் துலாமில் இருந்து விருச்சிகத்திற்கு மாறுகிறார். 9-ம் இடமான அதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. இங்கு அவர் இருக்கும்போது எதிரிகளின் இடையூறு தலைதூக்கும்; பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். இந்த கெடுபலன்களை கண்டு அஞ்ச வேண்டாம். சனிபகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும், தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10-ம் இடங்களை பார்ப்பார். அந்த மூன்று பார்வைகளும் உங்களுக்கு சிறப்பாக உள்ளது.குடும்பத்தில் குதூகலம் இருக்கும். கணவன்-மனைவியிடையே அன்பு பெருகும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தாமதமாகலாம். பிள்ளைகளால் பெருமைகிடைக்கும். விருந்து, விழாவென சென்று வருவீர்கள். தூரத்து உறவினர்கள் வகையில் இருந்து விரும்பத்தகாத செய்தி வரலாம். ஜூன் மாதம் முதல் வீட்டிற்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். சிலர் முயற்சி எடுத்து புதிய வீடு கட்டலாம். வாகனங்கள் வாங்கவும் வாய்ப்பு உண்டு.

தொழில், வியாபாரம்: பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். தொழிலில் லாபம் அதிகமாக கிடைக்கும். சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். போட்டியாளர்களின் இடையூறு கட்டுக்குள் இருக்கும். தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டு வந்தவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர். பெண்களால் இருந்து வந்த தொல்லை மறையும். புதிய தொழிலை தொடங்க நினைப்பவர்கள் குறைந்த முதலீட்டையே போடவும். ஜூன் மாதம் முதல் அரசு வகையில் உதவி கிடைக்கும்.

பணியாளர்கள்: பணியில் உள்ளவர்கள் முன்னேற்றம் காண்பர். வேலைப்பளு இருக்கும். ஜூன் முதல் வேலையில் முன்னேற்றம் இருக்கும். வேலை இன்றி இருப்பவர்கள் முயற்சி செய்தால் வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. ஆண்டின் பிற்பகுதியில் தெய்வ அனுகூலம் இருப்பதால் உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்.

கலைஞர்கள்: நல்ல புகழும், பெயரும் கிடைக்கப் பெறுவர். பண வரவு பரவாயில்லை. போட்டிகளை சமாளிக்கும் திறமையும் இருக்கும்.

அரசியல்வாதிகள்: திருப்தியான நிலைஇருக்கும். ஜூன் முதல் பதவிகள், புகழ், பாராட்டு கிடைக்கும்.

மாணவர்கள்: ஜூன் வரை முயற்சி எடுத்து படித்தால் வெற்றிகிட்டும். அடுத்த கல்விஆண்டில் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாடம் கிடைக்க பெறலாம்.

விவசாயிகள்: உழைப்புக்கு தகுந்த பலன் உண்டு. மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல மகசூலைபெறுவர். புதிய சொத்து வாங்கலாம். வழக்கு விவகாரங்கள் திருப்திகரமாக இருக்கும்.

பெண்கள்: குடும்பத்தில் முக்கியத்துவம் ஏற்படும். பணப்புழக்கம் போதுமான அளவு இருக்கும். உடல்நலம் சிறப்படையும்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
பரிஸ் ஈழநிலா
Live Music Group
Tel.: 06 20 31 24 90
உங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்  Tél.: 09 83 06 14 13   தமிழில் தொடர்பு கொள்ள:  Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26