Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
கவர்ச்சியான உடையால் ஆண்களை கவர முடியுமா?
30 January, 2014, Thu 9:22 GMT+1  |  views: 6966

உங்களுடைய மனதுக்கு பிடித்த காதலரை கவருவதற்கு எண்ணற்ற வழிமுறைகள் உள்ளன.

நீங்கள் பருவ வயதில் இருந்தாலும் சரி, 25 வயதடைந்த பக்குவமான பெண்ணாக இருந்தாலும், ஆண்களை கவருவதற்காக இருக்கும் அணுகுமுறை ஒன்று தான்.

வாழ்நாள் முழுவதும் தன்னுடன் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஒவ்வொரு பெண்ணும் தன்னால் இயன்ற வரையிலான மிகச்சிறப்பான வழிமுறைகளை பின்பற்றுவார். ஆனால், இவ்வாறு அவரை கவரும் போது, நீங்கள் செய்யக் கூடாத செயல்கள் சிலவும் உள்ளன.

பெண்கள் ஆண்களிடமிருந்து மறைக்க வேண்டிய விஷயங்கள் இதுதான்...

ஒன்றும் தெரியாதது போன்று இருக்க வேண்டாம்

பெரும்பாலான பெண்கள் ஆண்களுக்கு முன்னால் தங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று நடிப்பார்கள். இவ்வாறு நடிப்பதன் மூலம், தங்களுடைய மனதுக்குப் பிடித்தவரை எளிதில் கவர முடியும் என்று நினைக்கிறார்கள். இது தவறான அணுகுமுறை என்பதில் சந்தேகம் இல்லை. ஒரு ஆணாக இருப்பவர் பெண்ணிடம் அறிவையும், உணர்வையும் மிகவும் எதிர்பார்ப்பார். எனவே, முதிர்ச்சியுடனும், அறிவை ஆதாரமாகவும் கொண்டு செயல்படுங்கள், பையன் பின்னால் வரத் தொடங்குவான்.

உடலை ஒட்டியபடி மற்றும் கண்ணாடி போன்ற உடைகள் வேண்டாம்

சில பெண்கள் அவர்கள் அணியும் உடைகளாலேயே ஆண்களுடனான நட்பை இழந்து நிற்பார்கள். தங்களுடைய உடலை காட்டும் குட்டையான உடைகள், கவர்ச்சியான பேண்ட்கள் போன்றவற்றை அணிந்தால் தங்களுக்கு பிடித்த ஆடவரை கவர முடியும் என்று பெண்கள் நினைப்பார்கள். இதனால் இழப்புகள் தான் மிஞ்சும்... ஜாக்கிரதை. தங்களுடைய பெண்கள் இது போன்ற உடைகளில் இருக்க வேண்டும் என்று ஆண்கள் விரும்புவார்கள், ஆனால் எப்பொழுதும் அப்படியே இருக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். நீங்கள் அது போன்ற உடைகளையே தொடர்ந்து அணிந்து வந்தால், உங்களுக்கு விருப்பமான அவர் மனதில் காதலியாகவோ அல்லது மனைவியாகவோ இடம் பிடிக்க முடியாது. எனவே, சாதரணமான, கண்ணியமான உடைகளையே அணிய முயற்சி செய்யுங்கள். காதல் கூடும்.

நடத்தையை கவனியுங்கள்

நல்ல நடத்தையும், ஒழுக்கமும் உடைய பெண்களிடம் ஆண்கள் எளிதில் விழுந்து விடுவார்கள். மற்றவர்களிடம் எளிமையாக நடந்து கொள்வது உங்களை வளமானவராக காட்டும். ஒரு பெண்ணாக இருப்பவள் எளிமையின் அடையாளமாகவும், அவள் புதியவர்களிடம் எப்படி பேசுகிறாள் என்பதைப் பொறுத்துமே மதிப்பிடப்படுவாள். எனவே, உங்களைச் சுற்றியுள்ளவர்கள் யாராக இருந்தாலும் மதித்து நடக்கத் தொடங்குகள், அது தெருவில் உள்ள பிச்சைக்காரனாக இருந்தாலும் சரி, உங்களுடைய அப்பாவாக இருந்தாலும் சரி!

சபிக்க வேண்டாம்!

பெரும்பாலான பெண்களிடம் இந்த பிரச்சனை உள்ளது. உங்களிடம் இந்த குணம் இல்லை, அது இல்லை, இது இல்லை என்று சொல்லும் பழக்கம் பெண்களுக்கு எங்கிருந்து தான் வந்ததோ தெரியாது. ஆனால் இதை பயன்படுத்தாத பெண்கள் யாரும் கிடையாது. அவரை பாராட்டாமல் இருந்தால் கூட சரி, சபிக்க வேண்டாம். நீங்கள் சரியாக தான் பேசுகிறீர்கள் என்றாலும் கூட, அவரை சபிக்கும் போது அவமானப்படுத்தி விடுகிறீர்கள். இந்த செய்கையின் மூலமாக பொது இடங்களிலும் அவருக்கு தலைகுனிவை ஏற்படுத்தி விடுகிறீர்கள். இது பின்னாளில் உங்கள் விரிவில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, இது போன்ற குறை கூறும் செய்கைகளை தவிர்த்து விட்டு, அமைதியை கடைப்பிடியுங்கள்.

இடைவெளி வேண்டும்

ஆண்களை கவர விரும்பும் பெண்கள் செய்யும் பெரிய தவறு இதுதான். அவனுடைய நண்பர்கள் அனைவரிடமும் இருந்து விலகி இருப்பது, குடும்பத்தினரிடம் இருந்து அவரை பிரித்து வைக்க முயற்சிப்பது போன்ற விஷயங்கள் குடும்ப உறவுகளுக்கே உலை வைக்கும் வேலையை செவ்வனே செய்து விடுகின்றன. இது போன்ற தவறான செயல்பாடுகள் உங்களுடைய உறவை எந்த வகையிலும் மேம்படுத்தப் போவதில்லை என்பதையும், மாறாக உறவை துண்டிக்கச் செய்து விடும் என்பதையும் மறந்து விடாதீர்கள். நீங்கள் மட்டுமல்லாமல், வேறு சில முக்கியமான மனிதர்கள் அவருடைய வாழ்வில் உள்ளார்கள் என்பதையும் மற்றும் அனைவருக்காகவும் அவர் தன்னுடைய நேரத்தை செலவிட வேண்டும் என்பதையும் உணருங்கள்.

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய பாலைவனம் எது? 
  சஹாரா பாலைவனம் (ஆபிரிக்கா)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
உறவுகளை உதறி தள்ளிவிட்டு எதற்காக இந்த ஓட்டம்?
எதற்காக இந்த ஓட்டம் எல்லோரும் அதிவேகமாக ஓடுகிறார்கள். நவீனம் நடத்தும் பொருளாதார பந்தயத்தில் ஓடுவதற்கு தடங்கலாக இருந்த சொந்த ஊர்கள
17 September, 2018, Mon 15:42 | views: 499 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அந்த நேரத்தில் பெண்களை வெறுப்பேற்றும் விஷயங்கள்
முன்விளையாட்டுக்கு பெண்களை அவசரப்படுத்துவது பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. முன்விளையாட்டுகள் பெண்களின் உணர்ச்சியை தூண்டுவதோடு,
4 September, 2018, Tue 11:09 | views: 1695 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெண்கள் வயதான ஆண்களை விரும்புவது ஏன்?
பெண்கள் தங்களை விட வயது அதிகமான ஆண்களை விரும்புகிறார்கள். தங்களை வழி நடத்தும் திறமை அவர்களுக்கு இருப்பதாக நம்புகிறார்கள். அதோடு த
8 August, 2018, Wed 17:36 | views: 3258 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெண்கள் அதிகம் விரும்புவது நட்பு என்னும் உறவை
ஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற் கதவுகள். நட்பு என்பது ஒரு கொண்டாட்டம். இன்பத்தில் மட்டுமல்ல துளையிடும் வலிகளைப் பகிர்ந
1 August, 2018, Wed 16:53 | views: 1105 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
திருமணத்திற்கு முன் நெருக்கம் வேண்டாமே
திருமணத்திற்கு முன்னான உறவு, எதிர்கால திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடக் கூடும். (love relationship tips) இதில் ஆண்
20 July, 2018, Fri 13:29 | views: 1324 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS