Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
மீண்டும் தடுமாறும் இந்திய அணி
7 February, 2014, Fri 9:02 GMT+1  |  views: 5842

நியூசிலாந்து எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்களை எடுத்துள்ளது. நியூஸிலாந்தின் ஓட்ட எண்ணிக்கையை விட 373 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது இந்திய அணி.

ஆக்லாந்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று, நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்க்ஸைத் தொடர்ந்து ஆடியது. களத்தில் இருந்த மெக்கல்லம், ஆண்டர்சன் இருவருமே அதிரடியான ஆட்டத்துடன் நாளை துவக்கினர். நேற்று 42 ரன்கள் எடுத்திருந்த கோரே ஆண்டர்சன் இன்று அரை சதத்தைக் கடந்தாலும், 77 ஓட்டங்களுக்கு இஷாந்த் சர்மாவின் பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த மற்ற வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறு முனையில் கேப்டன் மெக்கல்லம் மட்டும் நிலைத்தார்.

ரவீந்த்ர ஜடேஜா வீசிய ஆட்டத்தின் 114-வது ஓவரில், ஒரு சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்ததன் மூலம் தனது இரட்டைச் சதத்தைக் கடந்தார். 280 பந்துகளில் 28 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் அவர் இந்தியாவுக்கு எதிரான தனது இரண்டாவது இரட்டைச் சதத்தைக் கடந்தார்.

உணவு இடைவேளைக்குப் பிறகு 503 ரன்களுக்கு நியூஸி. அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மெக்கல்லம் 224 ரன்களுக்கு இஷாந்த் சர்மாவின் பந்தில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணி மீண்டும் தடுமாற்றம்

தனது முதல் இன்னிங்க்ஸைத் துவங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே தடுமாற்றமாக இருந்தது. முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே ஷிகர் தவான் ரன் ஏதும் எடுக்காமல் போல்ட் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். அதே ஓவரின் கடைசி பந்தில் புஜாராவும் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

இந்தத் தொடரில் இந்தியத் தரப்பில் தொடர்ந்து ரன்கள் சேர்த்து வரும் கோலி, முரளி விஜய்யுடன் கைகோர்த்தார். ஆனால் 6-வது ஓவரில் சவுத்தியின் பந்தில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து விராட் கோலி வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ரோஹித் சர்மாவும், விஜய்யுடன் இணைந்து நிலைத்து ஆட முயற்சி செய்தார்.

இந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 20-வது ஓவரில் வாக்னரின் பந்தில் 26 ரன்களுக்கு முரளி விஜய் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ரஹானே களமிறங்கினார். இவரும், சர்மாவும் சேர்ந்து நியூஸி. அணியின் பந்துவீச்சை சமாளித்து ரன் சேர்க்கத் தொடங்கினர். 74 பந்துகளில் ரோஹித் சர்மா தனது அரை சதத்தைக் கடந்தார். அணியின் ஸ்கோர் 125 ரன்களாக ஆக இருந்த போது, 39-வது ஓவரில், போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தடைபட்டது.

இன்றைய நாளில் இன்னும் 17 ஓவர்கள் மிச்சமிருந்த நிலையில் ஆட்டம் முடிந்ததாக போட்டி நடுவர்கள் அறிவித்தனர். நாளைய ஆட்டம் முன்கூட்டியே ஆரம்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இன்னும் 174 ரன்கள் எடுத்தால் மட்டுமே ஃபாலோ ஆனைத் தவிர்க்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் இந்திய அணி உள்ளது. நாளைய ஆட்டம் இந்த டெஸ்ட் போட்டியின் வெற்றியை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென் ஆப்பிரிக்கத் தொடரில் தடுமாறியதைப் போலவே, இந்திய அணி மீண்டும் நியூஸிலாந்தில் தடுமாறி வருகிறது. டெஸ்ட் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியா, வெளிநாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வருகிறது. அணியின் துவக்க வீரர்களும், பந்து வீச்சாளர்களும் சூழலுக்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக் கொள்ளத் தவறுவதே தொடர் தோல்விகளுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* பூச்சி இனங்களில் அறிவு மிக்கது

  எறும்பு

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மைதானத்தில் கதறி அழுத ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்!
ஆசியக் கோப்பை தொடரின் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது, போட்டி முடிந்ததும் ஆப்கான் வீரர்
23 September, 2018, Sun 3:15 | views: 365 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆப்கானிஸ்தான் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போராடி வீழ்த்திய பாகிஸ்தான்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 3
22 September, 2018, Sat 6:39 | views: 380 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!
நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிய்யின் சூப்பர் 4 ஆட்டம் ஒன்றில் இந்திய அணி வங்கதேச அணி 7
22 September, 2018, Sat 6:36 | views: 236 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆப்கானின் பந்து வீச்சில் சின்னாபின்னமானது பங்களாதேஷ்...!!
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் லீக் போட்டியில் பங்களாதேஷ் அணி
21 September, 2018, Fri 4:49 | views: 628 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி
20 September, 2018, Thu 4:41 | views: 678 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS