Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

புதிய வகுப்புகள்

ஊழியர்கள் தேவை

Bail விற்பனைக்கு

Villeneuve-Saint-Georgesஇல் 50m² அளவுகொண்ட இந்திய உணவகம் Bail விற்பனைக்கு.
மாத வாடகை : 980€ click to call 07 51 57 72 14

வேலையாள் தேவை

வேலையாள்த் தேவை

வேலையாள்த் தேவை

ஆங்கில வகுப்புக்கள்
(Cambridge Exams)

Bail 3/6/9 விற்பனைக்கு

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
22
ஞாயிற்றுக்கிழமை
செப்டம்பர்
துர்முகி 2047
திதி: திருதியை
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

இந்திய பெண் ராஜதந்திரியை நடு வீதியில் கைது செய்த அமெரிக்க பொலிசார்: உண்மையான காரணம் என்ன?

19 December, 2013, Thu 13:27   |  views: 6846

இந்திய ராஜதந்திரி தேவயானியை நியூயார்க் நகரில்லுள்ள வீதி ஒன்றில் வைத்து பொலிசார் கைதுசெய்துள்ளார்கள். இது இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, உலகளாவிய ரீதியில் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.

ஒரு நாட்டு ராஜதந்திரி (டிப்ளோமெட்) பயணிக்கும் காரை, மற்றும் அன் நபரை கைதுசெய்ய பொலிசாருக்கு அதிகாரம் கிடையாது. அப்படி கைது செய்ய வேண்டும் என்றால் அதற்காக ஸ்பெஷல் பர்மிட் வாங்கவேண்டு. பொலிசார் தமது நாட்டு வெளிநாட்டு மற்றும் உள்துறை அமைச்சரோடு பேசியே இம் முடிவை எடுக்கவேண்டும் என்று பல கட்டுப்பாடுகள் உள்ளது. ஆனால் எதனையும் மதிக்காமல் அமெரிக்க பொலிசார் தடாலடியாக இப்படிச் செய்ய ஒரு வீட்டு வேலைக்காரி தான் காரணம் என்றால் நீங்கள் நம்புவீர்களா ? ஆம் சாட்சாத் அதுவேதான்! வாருங்கள் இந்த சுவாரசியமான விடையத்திற்குச் செல்லலாம்.

சீனியர் இந்திய ராஜதந்திரி 39 வயதான தேவயானி கொப்ராகேட் நியூயார்க் நகர வீதியில் வைத்து கைது செய்யப்பட்டு கைவிலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம், இருவித சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை வட்டாரங்களில் ஒருவிதமாக கூறப்படுகிறது. அமெரிக்கா வாழ் இந்தியர்கள் சிலர் மத்தியில் வேறு விதமாக கூறப்படுகிறது. “இந்த கைது, எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று” என்று தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை, இது தொடர்பாக அமெரிக்காவுக்கு தமது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். இதேவேளை அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவழி செல்வந்தர்கள் பலர், மீடியாக்களை வைத்திருக்கிறார்கள். அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால் , இந்திய சீனியர் ராஜதந்திரி ஒருவர், விசா மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டது, இந்தியர்களுக்கு மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள்.

நடந்தது என்ன ?

தேவயானி கொப்ராகேட், நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்தின் அரசியல், பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் மகளிர் விவகாரங்களுக்கு பொறுப்பான ராஜதந்திரி. வயது குறைவாக இருந்தாலும் (39 வயது), இந்திய வெளியுறவு சேவையில் இந்தப் பதவி, சீனியர் ராஜதந்திரி என்ற தரத்தில் உள்ளது. இரு குழந்தைகளுக்கு தாயான இவர், நியூயார்க்கில் உள்ள தமது வீட்டில் வீட்டுப் பணிகளை கவனிக்க இந்தியாவில் இருந்து தருவித்த பணியாளர்தான், சங்கீதா. ஏ - 3 விசாவில் இந்திய பணியாளரை தருவிக்கும் விண்ணப்பத்தில், பணியாளருக்கு மாதச் சம்பளம் 4,500 டாலர் கொடுக்கப்படும் என் குறிக்கப்பட்டு, விசா பெறப்பட்டுள்ளது. அத்துடன், தேவயானிக்கும், சங்கீதாவுக்கும் இடையிலான முதல் ஒப்பந்தத்திலும் அந்த 4,500 டாலர் தொகையே குறிப்பிடப்பட்டது. (வீட்டுப் பணிக்கு அந்தளவு சம்பளம் யாரும் கொடுக்க மாட்டார்கள் என்பது வேறு விஷயம்)

விசா கிடைத்தபின், சங்கீதாவுக்கு மாதச் சம்பளம் 30,000 இந்திய ரூபா என பிக்ஸ் பண்ணிக் கொண்டார்கள் (அநேகமாக தொடக்க டீலே அதுவாகத்தான் இருக்கலாம். விசா எடுப்பதற்காக 4,500 டாலர், எனக் காட்டி இருக்கிறார்கள்) இந்த மாற்றத்தில், 4,500 டாலர் மாத ஊதியம், 30,000 ரூபாவாக மாறியதில், அப்போதைய பண மதிப்பில் 573.07 டாலராக சுருங்கியது. ஆரம்ப ஒப்பந்தத்தில், வாரம் 40 மணி நேர வேலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி சங்கீதா, தேவயானி வீட்டில் காலை 7 மணி முதல் 12.30 மணி வரையும், அதன்பின் மாலை 6.30 மணியில் இருந்து, இரவு 8.30 மணி வரை பணிபுரிய வேண்டும். ஆனால், அதைவிட அதிக நேரம் பணிபுரிந்ததாகவும், அப்படி பார்த்தால் சங்கீதா பணி புரிந்ததற்கு மணிக்கு $3.31 ஊதியமே கிடைத்தது என்றும் பொலிஸ் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது (அனேகமாக பணிப்பெண் சங்கீதா தான் இதனைச் செய்திருக்கவேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது)

இந்த தொகை அமெரிக்க குறைந்தபட்ச ஊதிய தொகையைவிட குறைவானது. நவம்பர் 2012-ம் ஆண்டில் இருந்து பணிபுரிந்த சங்கீதா, ஜூன் 2013-க்கு பிறகு வேலைக்கு வரவில்லை. விவகாரம் சட்டத்துறைக்கு சென்றதில், தேவயானியை கைது செய்யும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நியூயார்க்கில் தனது இரு குழந்தைகளை பள்ளியில் விடுவதற்காக அவர் சென்றபோது, நியூயார்க் போலீஸால் கைது செய்யப்பட்டு, கைகளில் விலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது, இரண்டரை லட்சம் டாலர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதேவேளை அமெரிக்காவில் உள்ள ஐ.நா காரியாலயம் இரு நாடுகளுக்கும் இடையோ தோன்றவுள்ள பதட்டத்தை தவிர்க்க, பொலிஸ் நிலையத்திற்கு தலைதெறிக்க ஓடிச்சென்று தேவயானியை விட்டுவிடும்படி கெஞ்சியுள்ளார்கள். மொத்தத்தில் அங்கே ஐ.நா அதிகாரிகள் நாண்டு பிடித்துள்ளார்கள்.

இதில் மற்றொரு தமாஷ் என்னவென்றால், கடந்த வாரம் இந்திய வெளியுறவு செயலர் சிங் வாஷிங்டனுக்கு விஜயத்தை மேற்கொண்டபோது, அவருடன் அமெரிக்க டாப் அதிகாரிகளை சந்தித்த இந்திய குழுவில், தேவயானியும் இருந்தார். இவர்கள், அமெரிக்க ராஜாங்க செயலர் ஜான் கெரி, துணை செயலர் வில்லியம் பர்ன்ஸ், மற்றும் ராஜாங்க அமைச்சு அதிகாரிகளை சந்தித்தார். அந்த சந்திப்பு நடந்து ஒரு வாரத்துக்குள், தேவயானி நியூயார்க் வீதியில் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் மற்றொரு விவகாரம் என்னவென்றால், இந்த கைது விஷயத்தை சென்சேஷன் செய்தி ஆக்க(பரபரப்பு) சில மீடியாக்கள், தேவயானி கையில் ஒயின் கிளாஸூடன் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டன. அத்துடன் கைதுசெய்த பொலிசார் அவரை நிர்வாணமாக்கி சோதித்தார்கள் என்று வேறு பொய் கதைகளை கட்டவிழ்த்துவிட்டார்கள்.(அமெரிக்காவில் உள்ள இந்திய செல்வந்தர்களின் மீடியாக்கள் தான்)

தேவயானி மீது பதிவாகிய வழக்கில் இரு குற்றப்பிரிவுகள் உள்ளன. ஒன்று, visa fraud. மற்றையது, making false statements. குற்றம் நிரூபிக்கப்பட்டால், முதலாவது குற்றத்துக்கு 10 ஆண்டுகள், இரண்டாவது குற்றத்துக்கு 5 ஆண்டுகள் அதிகபட்ச சிறைத்தண்டனை கொடுக்கப்படலாம். இந்திய வெளியுறவு அமைச்சு, இந்த விவகாரத்தில் அமெரிக்க முடிவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அதே நிலைப்பாட்டையே தொடருவார்கள் என டில்லி வெளியுறவு வட்டாரங்களில் கூறுகிறார்கள்.

அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக வட்டாரங்களிலுள்ள ராஜதந்திரிகள் இது பற்றி தமது தரப்பு நியாயங்களை தெரிவித்தார்கள். “தேவயானி கொப்ராகேட் இந்திய தூதரகத்தில் பணிபுரிவதற்காக வழங்கப்படும் அடிப்படை மாத ஊதியமே, 4,000 டாலர்தான். இதில் அவர் எப்படி மாதம் 4,500 டாலர் தனது பணியாளருக்கு கொடுக்க முடியும்?” என்பது ஒரு கேள்வி (A-3 விசா எடுப்பதற்கு அதிக ஊதியம் காட்டுவது என்பது அமெரிக்காவில் ஊரறிந்த ரகசியம்)

அமெரிக்காவில் உள்ள இந்திய ராஜதந்திரிகள் கூறும் மற்றொரு விவகாரம் சுவாரசியமானது. “டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் அமெரிக்க ராஜதந்திரிகளின் மனைவிகள், டில்லி இன்டர்நேஷனல் பள்ளிகளில் ஆசிரியைகளாக பணிபுரிகிறார்களே… அவர்களில் யாரிடமாவது இந்திய work permit இருக்கிறதா ? யாரிடமும் கிடையாது. ஒருவித புரிந்துணர்வு அடிப்படையில் நாம் அதை கண்டுகொள்வதில்லை. மத்திய வெளியுறவுத்துறை டில்லியின் கடும் நடவடிக்கை எடுக்க தொடங்கினால் என்னாகும் தெரியுமா?” என்பதே அந்த விவகாரம்.

அப்படி என்றால் இன்னும் சில தினங்களில் அமெரிக்க அதிகாரிகளின் மனைவிமார் கைது என்ற செய்தி இந்தியாவில் இருந்து வெளிவருமா? வரலாம் யார் கண்டது?

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


SHAMROCK EDUCATION CENTRE
Tel. : 06 08 02 68 21 / 01 45 48 82 40
shamrock-education-centre-paris14
புதிய வகுப்புகள்
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

APPARTEMENT A VENDRE
130 000 €
Paristamil Annonce
A VENDRE RENAULT MEGANE SCENIC
1100 €
Paristamil Annonce
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்  Tél.: 09 83 06 14 13   தமிழில் தொடர்பு கொள்ள:  Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26