எழுத்துரு விளம்பரம் - Text Pub |
15 January, 2014, Wed 19:13 | views: 7346
தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. இராமசந்திரன் தொடர்பில் நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்ரீகாந்த் வீரவல்லியினால் எழுதப்பட்ட இந்த நூலில், எம்.ஜி.இராமச்சந்திரன் தொடர்பில் பல தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மருதூர் கோபாலன் இராமசந்திரன் என்ற இயற்பெயர் எம்.ஜி.ஆர். என்ற குறும் பெயரால் பிரபல்யமடைந்தது..
நூலாசிரியர் தமது நூலில், எம்.ஜி.ஆர். புரிந்து கொள்ள முடியாத கடினமான மனிதர் என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பிறந்த எம்.ஜி.ஆர். இந்தியாவில் மாவோ போராளிகளை அடக்கும் கொள்கையைக் கொண்டிருந்த போதிலும், தமிழீழ விடுதலைப் புலிகளை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.
மலையாளி என்ற போதிலும், தமிழர்கள் மத்தியில் அன்பானவராக கருதப்பட்டார்.
அவருடைய அரசாங்கத்தில் ஊழல்கள் இடம்பெற்ற போதிலும், அது அவரின் புகழைப் பாதிக்கவில்லை.
பல்லாயிரக் கணக்கானவர்கள் அவரை கடவுளாக போற்றிய போதிலும், எம்.ஜி.ஆர். இன் வாழ்வில் உண்மையான நண்பர் ஒருவர் இருக்கவில்லை.
இரண்டரை வயதாக இருக்கும் போதே இலங்கையில் வைத்து, தமது தந்தையை எம்.ஜி.ஆர். இழந்தார்.
இதனையடுத்து தாயாரினால் அவர் தமிழகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதன்போது, வறுமை காரணமாக தொழிலுக்கு உந்தப்பட்ட அவர் நடிப்புத் திறமையால் மாதம் ஒன்றிற்கு 5 ரூபாவினை வேதனமாக பெற்றார்.
பொருளாதார நெருக்கடியால் எம்.ஜி.ஆர். இந்திய இராணுவத்தில் இணைய முயற்சி செய்தார்.
இதற்காக அவருக்கு மாதம் ஒன்றிற்கு 125 ரூபா வேதனமாக வழங்க இணங்கப்பட்டது.
எனினும், முருகன் டோக்கீஸ் நிறுவனம் மாதம் ஒன்றிற்கு 350 ரூபா வேதனத்தை வழங்க முன் வந்ததை அடுத்து, எம்.ஜி.ஆரின் வாழ்க்கை திரைப்பட துறைக்கு மாறியது.
இந்த நிலையில், இந்திய இராணுவம் வீரர் ஒருவரை இழந்த நிலையில், தமிழ்த் திரை உலகம் ஒரு மாமேதையைப் பெற்றுக் கொண்டது.
சுமார் 130 திரைப்படங்களில் நடித்த எம்.ஜி.ஆர். தமிழகத்தை இறக்கும் வரை ஆட்சி செய்தார்.
முன்னாள் முதல்வர் முத்துவேல் கருணாநிதியால் புரட்சி நடிகர் என பெயரிடப்பட்ட எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கி இறக்கும் வரை அதன் தலைவராக செயல்பட்டார்.
உதவும் மனப்பான்மையை அதிகம் வெளிக்காட்டிய எம்.ஜி.ஆர். ஏழைகள் மத்தியில் கடவுளாக மதிக்கப்பட்டார்.
1987 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். காலமானபோது, தமிழகம் ஸ்தம்பித்தது.
அவரின் மறைவை தாங்கிக் கொள்ள முடியாத 37 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த நிலையில், எம்.ஜி.ஆர். மறைந்தாலும் கூட அந்த நாமம் உயிர் வாழ்வதாக நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
![]() | அடுத்த ![]() |
|
![]() சபிக்கப்பட்ட தீவின் மர்மம் நிறைந்த சம்பவங்கள்....30 March, 2023, Thu 11:11 | views: 595
![]() உலகின் சோகமான 10 நாடுகளின் பட்டியல்28 March, 2023, Tue 7:58 | views: 1009
![]() உலகிலேயே மிக மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடு21 March, 2023, Tue 8:24 | views: 2577
![]() உலகின் சிறந்த விமான நிலையம்17 March, 2023, Fri 9:30 | views: 3669
![]() அமெரிக்காவில் பச்சை நிறமாக மாறிய சிகாகோ ஆறு13 March, 2023, Mon 10:30 | views: 2696
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |