Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வீடு வாடகைக்கு

வேலையாள்த் தேவை

ஊழியர்கள் தேவை

Ivry sur Seineஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Alimenattion) விற்பனையாளர்கள் (vendeur) தேவை.
click to call 06 56 87 38 77
Le 06/12/2019 15 days

வேலையாள் தேவை

சிகையலங்கார நிபுணர் தேவை

PARIS பகுதியில் அமைந்துள்ள சிகையலங்கார நிலையத்திற்கு அனுபவமுள்ள (coiffeur) சிகையலங்கார நிபுணர் தேவை.
click to call 06 61 06 80 70
Le 01/12/2019 15 days

ஊழியர்கள் தேவை

PARISஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Alimenattion) விற்பனையாளர்கள் (vendeur) தேவை.
click to call 06 95 54 11 06
Le 01/12/2019 15 days

அழகுக்கலை நிபுனர் தேவை

CUISINIER INDIEN தேவை

Laon 02000 இல் உள்ள இந்திய உணவகத்திற்கு CUISINIER தேவை. வேலை செய்யக்கூடிய அனுமதி (Visa) தேவை..
click to call 06 51 89 02 00
Le 01/12/2019 15 days

ஊழியர்கள் தேவை

SHANU MULTISERVICE

Entrepôt வாடகைக்கு

இணைய சேவை

ஓம் சக்தி ஜோதிட நிலையம்

நடனப் பயிற்சி பள்ளி

Anne Abi Auto பயிற்சி நிலையம்

பிரெஞ்சு/ஆங்கில வகுப்பு

புதிய வகுப்புகள்

ஆங்கில வகுப்புக்கள்
(Cambridge Exams)

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
12
வியாழக்கிழமை
டிசம்பர்
துர்முகி 2047
திதி: ஏகாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஹஷிம் அம்லா!

10 August, 2019, Sat 4:13   |  views: 739

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஹஷிம் அம்லா, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுப் பெற்றுள்ளார்.
 
ஒருநாள் போட்டிகளில் பல சாதனைகளுக்கு சொந்தக் காரரான 36 வயதான ஹஷிம் அம்லா, தனது வயது மற்றும் உடற் தகுதியை கருத்திற் கொண்டும், இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையிலும் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
 
உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள ஹஷிம்; அம்லாவுக்கு தற்போது இன்னாள் மற்றும் முன்னாள் வீரர்களும், இரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 
எனினும், தொடர்ந்தும் தென்னாபிரிக்காவில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவார் என தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
 
அண்மையில் இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலகக் கிண்ணத் தொடரில் இறுதியாக இலங்கை அணியுடன் நடைபெற்ற போட்டியே அவரது இறுதி சர்வதேச ஒருநாள் போட்டியாக அமைந்துள்ளது.
 
தனது இறுதி ஒருநாள் போட்டியில் ஹசீம் அம்லா, ஆட்டமிழக்காகது 80 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்து தென்னாபிரிக்க அணியை 9 விக்கெட்டுக்களால் வெற்றிபெறுவதற்கு காரணமாக இருந்தார்.
 
1983ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி தென்னாபிரிக்காவின் டேர்பன் நகரில் பிறந்த ஹஷிம் அம்லா, 1999ஆம் ஆண்டு தனது 16 ஆவது வயதில் முதல் தர போட்டிகள் மூலமாக கிரிக்கெட் வாழ்க்கையில் தடம் பதித்தார்.
 
தனது சிறப்பான துடுப்பாட்டத்தின் மூலம் தென்னாபிரிக்க அணிக்காக 2004ஆம் ஆண்டு இந்திய அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் போட்டி மூலமாக தனது 21 ஆவது வயதில் முதல் முதலாக சர்வதேச அரங்கிற்கு அறிமுகமானார்.
 
தான் அறிமுகமான கால கட்டத்தில் இருந்தே, தனது அமைதியின் மூலம் பலரையும் வெகுவாக கவர்ந்த அம்லா, நீண்ட கால இடைவெளியின் பின்னர் 2008ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணியுடன் நடைபெற்ற போட்டியில் ஒருநாள் கிரிக்கெட் சர்வதேச அறிமுகம் பெற்றுக்கொண்டார்.
 
அதன் பின்னர், அடுத்த ஓராண்டு இடைவெளியில் ரி-20 கிரிக்கெட் சர்வதேச அறிமுகமும் பெற்றுக்கொண்டார்.
 
ஒருநாள் சர்வதேச போட்டிகளில், அதிவேகமாக ஓட்டங்களை குவித்த வீரர் என்றால் அது ஹஷிம் அம்லா தான்.
 
தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 124 போட்டிகளில் 215 இன்னிங்சுகளில் விளையாடியுள்ள ஹஷிம் அம்லா 28 சதங்கள் மற்றும் 41 அரைச்சதங்கள் உள்ளடங்களாக மொத்தமாக 9,282 ஓட்டங்களை குவித்துள்ளார்.
 
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிகூடிய ஓட்டங்களை குவித்தவர்கள் வரிசையில் அம்லா 14 ஆவது இடத்தில் உள்ளார்.
 
இதுவரை 181 ஓருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அம்லா 27 சதங்கள் மற்றும் 39 அரைச்சதங்களுடன் 8,113 ஓட்டங்களை குவித்துள்ளார்.
 
ஒருநாள் சர்வதேச அரங்கில் அதிக ஓட்டங்களை குவித்தவர்கள் வரிசையில் அம்லா 29 ஆவது இடத்தில் உள்ளார்.
 
இதேவேளை, இந்திய அணியின் தலைவரான, விராட் கோஹ்லி ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2,000, 3,000, 4,000, 5,000, 6,000, 7,000 ஓட்டங்களை பெற்றார் எனும் சாதனைகளை, ஹஷிம் அம்லா ஒரு சில போட்டிகள் வித்தியாசத்தில் தொடர்ச்சியாக முறியடுத்ததோடு, அச்சாதனைகளை அவர் பெயரில் வைத்துள்ளார்.
 
ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்தவரையில் தனது 2000 ஓட்டங்களை 40 இன்னிங்சுகளில், 3000 ஓட்டங்களை 57 இன்னிங்சுகளில், 4000 ஓட்டங்களை 81 இன்னிங்சுகளில், 5000 ஓட்டங்களை 101 இன்னிங்சுகளில், 6000 ஓட்டங்களை 123 இன்னிங்சுகளில், 7000 ஓட்டங்களை 150 இன்னிங்சுகளில் கடந்து குறித்த ஓட்டங்களை விரைவாக கடந்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் அம்லா உள்ளார்.
 
அத்துடன் வேகமான 8,000 ஓட்டங்களை கடந்த விராட் கோஹ்லியின் சாதனையை ஒரு இன்னிங்சில் தவறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும், இதுவரை 44 ரி-20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள ஹஷிம் அம்லா 8 அரைச்சதங்களுடன் 1,277 ஓட்டங்களை குவித்துள்ளார்.
 
டெஸ்ட் போட்டியில் அதிகூடிய ஓட்டங்களாக 311 ஓட்டங்களை அவர் பதிவு செய்துள்ளார். இதுவே தென்னாபிரிக்க அணி வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்டமாகும். மேலும் ஒருநாள் போட்டிகளில் அதிகபட்சமாக 159 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
 
அதுமட்டுமல்லாமல், ஒரு நாள் மற்றும் டெஸ்ட் ஆகிய இரண்டிலும் தலா 25 சதங்களை பெற்ற வீரர்கள் பட்டியலில் ஹஷிம் அம்லா நான்காவதாக இணைந்தார்.
 
மேலும் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்கள் வரிசையில் மிகச்சிறந்த சராசரியை வைத்துள்ள வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் ஹஷிம் அம்லா, இரண்டாவது இடத்தில் உள்ளார்.
 
அத்துடன், தென்னாபிரிக்கா சார்பில் முச்சதங்களை பெற்ற ஒரே வீரராக அம்லா திகழ்வதோடு, அவ்வணி சார்பில் அதிகூடிய ஒரு நாள் சதங்களை பெற்ற வீரராகவும் அம்லா திகழ்கிறார். அம்லா 27 சதங்களை அடித்துள்ளார்.
 
தென்னாபிரிக்க அணியின் அதிகூடிய ஒரு நாள் இணைப்பாட்டமான ஆட்டமிழக்கப்படாது 282 ஓட்டங்களை கடந்த 2017ஆம் ஆண்டு குயின்டன் டி கொக் உடன் இணைந்து பங்களாதேஷ் அணிக்கு எதிராக பதிவு செய்திருந்தார்.
 
அத்துடன் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தர வரிசைகளில் ஒரே நேரத்தில் முதலிடத்தை பெற்ற 10 வீரர்கள் பட்டியலில் அம்லாவும் உள்ளடங்குகிறார்.

 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


SHAMROCK EDUCATION CENTRE
Tel. : 06 08 02 68 21 / 01 45 48 82 40
shamrock-education-centre-paris14
புதிய வகுப்புகள்
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
SHANU MULTISERVICE
Tel.: 07 55 00 03 63 / 07 53 28 87 64
shanu-multiservice-bondy-93140
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Vends fonds de commerce Lavage voiture

Paristamil Annonce

SPONSER AD

மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்  Tél.: 09 83 06 14 13   தமிழில் தொடர்பு கொள்ள:  Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26