Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு / விற்பனைக்கு
05122018
வேலையாள்த் தேவை
05122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
வேலைக்கு ஆள் தேவை
28112018
வேலையாள்த் தேவை
24112018
ஸ்ரீ அம்மன் ஜோதிடம்
28112018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
கட்டிட வரைப்படம்
28112018
மணமகள் தேவை
24112018
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
Bail விற்பனைக்கு
02112018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தீர்வுகளிற்காகக் கூடிய மக்ரோனும் அமைச்சர்களும் தொழிற்சங்கங்களும் - எந்தத் தீர்வும் எட்டவில்லை - காணொளி!
France Tamilnews
பரசின் மஞ்சள் ஆடைப் போராட்டத்தில் போராளிகளுடன் ஹொலிவூட் நடிகர்கள்!!
France Tamilnews
காவற்துறையினரின் மோசமான வன்முறை - நாம் எதிர்பார்க்கவில்லை - காயப்பட்டவர்கள் வைத்தியசாலையில் வாக்குமூலம் - காணொளி
France Tamilnews
பிரதமர் - உள்துறைஅமைச்சர் - இணைந்த அறிக்கை - அதிகரித்துச் செல்லும் காயங்களும் கைதுகளும்!!
France Tamilnews
பரிசை உலுக்கிய இன்றைய கலவரம் - இடங்கள் குறிக்கப்பட்ட ஒரு படத்தொகுப்பு!!
France Tamilnews
பாரிய நெருக்கடியில் சிறிலங்கா! அமெரிக்கா விடுத்துள்ள அறிவிப்பு
6 December, 2018, Thu 5:00 GMT+1  |  views: 739
தற்போதைய அரசியல் நெருக்கடியை  வெளிப்படையான முறையில்,  ஜனநாயக வழியில் உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க வலியுறுத்தியுள்ளது.
 
 சிறிலங்காவையும், அதன் தலைவர்களையும் ஒரு நண்பராகவும், பங்குதாரராகவும், நாங்கள் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளோம் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்க தூதுவராகப் பதவியேற்ற பின்னர் முதல்முறையாக அளித்துள்ள ஊடகச் செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
“இந்த மோதல்களில் நாங்கள் ஈடுபாடு கொள்ளவில்லை. இந்த அரசியல் போட்டியில் எங்களுக்குப் பிடித்தமானவை என்றும் கிடையாது.
 
அரசியலமைப்பு நடைமுறைகளையும், வெளிப்படைத்தன்மையையும் மதிக்கும் ஒரு சட்டபூர்வமான அரசாங்கம் உருவாக்கப்படுவதைத் தான், நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
 
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், அரசியலமைப்பு கட்டமைப்புக்குள் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம்.
 
இந்த நெருக்கடியைத் தீர்க்குமாறு  அரசியல் தலைமைக்கும் சிறிலங்கா அதிபர் சிறிசேனவும் நாம் அழைப்பு விடுத்துள்ளோம்.
 
நாட்டின் அரசியல் நற்பெயரை சிறிலங்கா மீட்டெடுக்க வேண்டும். அதற்கு  வாய்ப்பு உள்ளது.  இது மிகவும் முக்கியமானது. தற்போதைய அரசியல் நெருக்கடி இந்த நற்பெயரை குறைக்கலாம்.
 
இந்த நெருக்கடியினால், சில மோசமான பொருளாதார விளைவுகள் ஏற்படுகின்றன. சிறிலங்காவின் அரசியல் மற்றும் ஜனநாயக நிறுவனங்களுக்கு சில சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன்.
 
சிறிலங்காவின் ஒரு பங்காளியாகவும் நண்பராகவும் நாம் அக்கறை கொண்டுள்ளோம். மிலேனியம் சவால் நிதிய உதவிகள்,  சட்டத்தின் ஆட்சி மற்றும் நல்லாட்சி போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது.
 
தற்போதைய நெருக்கடி எவ்வாறு தீர்க்கப்படும் என்பதைப் பொறுத்தே, நாங்கள் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு முன்னோக்கி செல்லமுடியும். அதற்காக காத்திருக்கிறோம்.
 
எனவே, எமது இருதரப்பு வாய்ப்புகள் சிலவற்றில், இந்த நெருக்கடி நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நெருக்கடி குறுகிய காலத்துக்குள், விரைவாக தீர்த்துக் கொள்ளப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.
 
சட்டபூர்வமான, வெளிப்படையான மற்றும் ஜனநாயக வழிமுறைகளில் இருந்து வரும் எந்தவொரு அரசாங்கத்துடனும் நாங்கள் வேலை செய்ய தயாராக உள்ளோம்.
 
எமது அக்கறை, முறையான அரசாங்கத்துடனும், பரந்தளவில் பேசுபவர்களுடனும், மக்களுடனும் கொண்டுள்ள நட்பாகும், ஜனநாயகக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதும் இதில் அடங்கும்.
 
தேர்தல் நடத்துவதற்கு யாரையும் நாங்கள் தடுக்கவில்லை. இந்த நெருக்கடியை ஒரு தேர்தல் தான் தீர்க்கும் என்றால், அதற்கான ஜனநாயக நடைமுறைகள் கடைபிடிக்கப்படுவதை மதிக்கிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே பரப்பளவில் மிகச் சிறிய நாடு எது? 
  வத்திகான்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வடக்கில் குவிக்கப்பட்ட படையினர்: பீதியில் மக்கள்!
வடக்கின் பல முக்கிய வீதிகளில் திடீரென பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தின் ஸ்ரான்லி வீதி, யாழ். நகர் பக
10 December, 2018, Mon 13:29 | views: 480 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கொழும்பில் பதற்றத்தை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூடு! பெண் ஒருவர் உட்பட பலர் காயம்
கொழும்பு - மட்டக்குளி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்
10 December, 2018, Mon 12:11 | views: 320 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஐரோப்பிய நாடொன்றில் இலங்கை சிறுமிக்கு நேர்ந்த துயரம்!
இத்தாலியின் வெரோனா நகரில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 12 வயது சிறுமியொருவர் அவர்களது வீட்டின் நான்காவது மாடியிலிருந்து தவறி
10 December, 2018, Mon 10:40 | views: 1039 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உண்மையை கூறியதால் ஏற்பட்ட சிக்கல்! மைத்திரியின் சர்ச்சைகுரிய காணொளியை நீக்கிய ஊடகம்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடகமொன்று அகற்றியுள்ளது
10 December, 2018, Mon 6:48 | views: 404 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிறந்த நாளுக்கு கேக் வாங்கச் சென்றவருக்கு காத்திருந்தத அதிர்ச்சி! மட்டக்களப்பில் சம்பவம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்
10 December, 2018, Mon 5:02 | views: 523 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
  Annonce
கடை BAIL விற்பனைக்கு
à négocier  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS