Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள்அடைப் போராளிகளுடன் நடனமாடிய கன்னியாஸ்திரிகள் -சமூவகலைத்தளங்களில் வேகப்பகிர்வு!!
France Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
சர்கார் படத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. போராட்டம் சர்ச்சை காட்சிகளை நீக்க முடிவு
9 November, 2018, Fri 1:57 GMT+1  |  views: 559
நடிகர் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
 
அந்தப் படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட நாளில் இருந்தே சர்ச்சைக்குள் சர்கார் சிக்கியது. நடிகர் விஜய் புகை பிடிக்கும் காட்சியை நீக்க வேண்டும் என்று எதிர்ப்புக் குரல்கள் வந்ததைத் தொடர்ந்து பல இடங்களில் அதுபோன்ற போஸ்டர்கள் அகற்றப்பட்டன.
 
 

படம் வெளியான பிறகு மேலும் பல எதிர்க் கருத்துகள் கூறப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் இலவச திட்டங்களை குறை கூறுவது போன்ற காட்சிகள் அந்தப் படத்தில் வருகின்றன.

அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், கடம்பூர் ராஜூ ஆகியோர் சர்கார் படத்தில் இலவச திட்டங்கள் பற்றி கூறப்படும் கருத்தை அப்பட்டமாக எதிர்த்துள்ளனர். அதுபோன்ற காட்சிகளை படக்குழுவினரே தாமாக முன்வந்து நீக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர்.

அமைச்சர் சி.வி.சண்முகம் பேசும்போது அந்தப் படம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் சி.வி.சண்முகத்தை அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் நேற்று பிற்பகலில் சந்தித்து சர்கார் படத்துக்கு எதிராக வழக்கு தொடருவது பற்றி பேசினார்.

இதற்கிடையே தமிழகம் முழுவதும் சர்கார் படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் முன்பு அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினார்கள்.

சென்னையில் காசி திரையரங்கம் முன்பு திரண்ட அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டதோடு அங்கு வைக்கப்பட்டு இருந்த விஜய் பேனரையும் கிழித்து எறிந்தனர்.

இதுபோல கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, கடலூர், விழுப்புரம், ஊட்டி உள்ளிட்ட இடங்களிலும் போராட்டம் நடந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தியேட்டர்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது ஆத்திரம் அடைந்த அ.தி.மு.க.வினர் சிலர் விஜய் பட பேனர்களை கிழித்தனர். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினார்கள்.

விழுப்புரத்தில் போராட்டம் நடத்தியவர்கள் தியேட்டருக்கு பூட்டு போட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

போராட்டம் காரணமாக சில இடங்களில் சர்கார் பட காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

இதற்கிடையே எதிர்ப்பு வலுப்பதால் சர்ச்சை காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் தரப்பில் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று சர்ச்சை காட்சிகள் நீக்கப்படலாம் என்றும், இதற்காக மீண்டும் தணிக்கை குழுவுக்கு படம் அனுப்பப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

‘சர்கார்’ படத்தில் உள்ள சர்ச்சை காட்சிகளை நீக்குவதற்கு பட தயாரிப்பு நிறுவனம் விண்ணப்பித்தால், அந்த படத்தை மறுதணிக்கை செய்வதற்கு தயாராக இருக்கிறோம் என்று தணிக்கை குழு அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை நகர திரையரங்கு உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன், ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

சர்கார் படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சை காட்சிகளுக்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. இந்த பிரச்சினையில் படத்தின தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் சுமுகமான முடிவுக்கு வந்து இருக்கிறது. படத்தில் இடம் பெற்றுள்ள ஆட்சேபனைக்குரிய காட்சிகளை நீக்குவதாக அந்த நிறுவனம் கூறி இருக்கிறது. யாரையும் புண்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல.

இவ்வாறு அபிராமி ராமநாதன் கூறினார்.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம், நிருபரிடம் கூறியதாவது:-

சர்கார் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிடும்படி படத்தின் தயாரிப்பு நிறுவனத்தை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கேட்டுக்கொண்டு இருக்கிறோம். பிரச்சினைக்குரிய காட்சிகள் தேவை இல்லை என்பதுதான் தியேட்டர் அதிபர்களின் நிலைப்பாடு. தயாரிப்பு தரப்பிலும் அந்த காட்சிகளை நீக்க சம்மதித்து இருக்கிறார்கள்.

அவர்கள் நீக்கிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். நீக்கவில்லை என்றால் அடுத்தக்கட்டமாக என்ன முடிவு எடுப்பது என்பது குறித்து ஆலோசிக்க திரையரங்கு உரிமையாளர்களின் அவசர கூட்டம் நாளை சென்னையில் கூட்டப்படும். அந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுப்போம். சர்ச்சை காட்சிகளை நீக்குவதுதான் சிறந்தது என்று நினைக்கிறோம்.

இலவசம் கொடுக்கக்கூடாது என்றும், அரசு இலவசமாக கொடுத்த பொருட்களை தீயில் அள்ளிப்போட்டு எரிப்பது போன்றும் உள்ள காட்சியை நீக்க வேண்டும். இந்த காட்சி அரசின் இலவச பொருட்களை வாங்கும் மக்களை புண்படுத்துவதுபோல் உள்ளது.

அதனால் அந்த காட்சியை நீக்க தயாரிப்பாளர் தரப்பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். அவர்கள் மறுப்பு தெரிவித்தால் அடுத்தக்கட்டமாக என்ன செய்வது என்று நாளை முடிவு செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* 1941-ம் ஆண்டு இங்கிலாந்தில் முதல்முதலாக ஜெட் விமானம் பறக்கவிடப்பட்டது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கு, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இடைத்தேர்தல்
தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கு, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர்
20 November, 2018, Tue 3:37 | views: 256 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கஜா புயல் பாதிப்பால் மின்சாரம், குடிநீர் கிடைக்காமல் 4 நாட்களாக கிராம மக்கள் தவிப்பு
கஜா புயல் பாதிப்பால் மின்சாரம், குடிநீர் கிடைக்காமல் கடந்த 4 நாட்களாக கிராம மக்கள் தவித்து வருகிறார்கள். எனவே நிவாரண பணிகளை
20 November, 2018, Tue 3:36 | views: 162 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி! கால அவகாசம் கேட்கிறது திருவாங்கூர் தேவஸ்தானம்
சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பை அமல்படுத்த கூடுதல் கால அவகாசம் கேட்டு திருவாங்கூர்
20 November, 2018, Tue 3:34 | views: 153 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வங்கி மோசடியாளர்கள் பற்றிய விவரங்களை வெளியிடுங்கள் மத்திய தகவல் ஆணையம் உத்தரவு
வங்கி மோசடியாளர்கள் பற்றி விவரங்களை வெளியிட வேண்டும் என பிரதமர் அலுவலகத்துக்கும், ரிசர்வ் வங்கிக்கும் மத்திய தகவல் ஆணையம்
19 November, 2018, Mon 3:25 | views: 299 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வங்க கடலில் குறைந்த காற்றழுத் தாழ்வுப்பகுதி கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு
வங்கக்கடலில் உருவான கஜா புயல் தஞ்சை, திருச்சி, நாகை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை
19 November, 2018, Mon 3:20 | views: 275 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS