Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அழகை பாதுகாப்பது எப்படி?
4 September, 2018, Tue 11:06 GMT+1  |  views: 849

 அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக இளம்பெண்கள் பலர் எடைக் குறைப்பில் ஈடுபடுகின்றனர். அதன் காரணமாக காலை உணவை தவிர்க்கின்றனர். சிலர் கார்போஹைட்ரேட் உணவுகளையே முழுவதுமாக தவிர்த்து விடுகின்றனர். உணவை தவிர்க்கும்போதோ, இவ்வாறு உணவு முறையில் மாற்றம் கொள்ளும்போதோ வயதான தோற்றம் உண்டாகலாம். 

 
இவர்கள் இந்த மாதிரியான உணவுப்பழக்கத்தை இரண்டு வருடங்கள் பின்பற்றினால் தலைமுடி கொட்டிப்போதல், கண்களில் குழி விழுதல், கண்களைச் சுற்றிக் கருவளையம், இளநரை போன்ற காரணங்களால் இருபது, இருபத்தி ஐந்து வயதிலேயே நாற்பது வயதைப் போல தோற்றம் அளிப்பார்கள். உடல் சுருக்கம் மற்றும் மார்பகம் தளர்ந்து போதல் போன்றவையும் ஏற்படலாம். அதனால் உணவைத் தவிர்ப்பதை விட்டு முறையான உணவுப் பழக்கவழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.
 
அழகை பராமரிப்பதில் உணவை அடுத்து சுத்தம் பெரும் பங்கு வகிக்கிறது. நம் உடம்பில் 4 வாரங்களுக்கு ஒரு முறை பழைய செல்கள் இறந்து புது செல்கள் உற்பத்தியாகும். தலையில் நாள்தோறும் புது செல்கள் உருவாகும். உதிர்ந்த செல்களை நீக்கினால்தான் புது செல்கள் நன்கு வளர்ச்சி அடையும். அதற்கு ஒருநாள் விட்டு ஒருநாள் தலை குளிப்பது அவசியம். மண்டையோடு சுத்தமாக இல்லாமல் போனால் தலையில் பொடுகு அதிகரிக்கும். 
 
அதனால் முடி கொட்டும். பொடுகை சொறியும்போது முகத்தில் உதிர்ந்தால் சிலருக்கு முகத்தில் பொரி பொரியாக ஏற்படும். பொடுகினால் ஏற்படும் அந்த மாற்றம் முக அழகைக்கெடுக்கும். தலை சுத்தமாக இல்லாவிட்டால் முக அழகு பாதிக்கப்படும். தலைமுடி சுத்தத்தைப் பேணுவது போல் சருமத்தையும் பராமரிப்பதும் அவசியம். அதற்கு நம் சருமம் எப்படிப்பட்டது என்று நாம் முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். 
 
அதாவது எண்ணெய்ப் பசை கொண்ட சருமமா? உலர்ந்த சருமமா அல்லது சென்ஸிடிவ்வான சருமமா என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் விளம்பரத்தில் வரும் அழகு சாதனப்பொருட்களோ, நம் தோழிகள் பயன்படுத்தும் அழகுப்பொருட்களோ நமக்கும் பொருந்தும் என்று எண்ணக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக சருமம் மாறுபடும். நம் சருமத்துக்குத் தகுந்த அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்த வேண்டும். அதனால் நமது குடும்ப மருத்துவரிடமோ, ப்யூட்டிஷியன்களிடமோ சென்று நம் சருமம் எப்படிப்பட்டது என்று கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
 
நம் சருமத்தின் இறந்த செல்களை நீக்குவதற்கு ஃபேஷியல் செய்து கொள்ளலாம். நமது தோலுக்கு தகுந்த மாதிரியான பொருட்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். மாதத்திற்கொரு முறையாவது இறந்த செல்களை நீக்க வேண்டும். பார்லருக்கும் செல்லலாம். ஆனால் நாம் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள் தரமானதாக இருக்கவேண்டும். அந்த விஷயத்தில் நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும். 
 
பணத்துக்காகப் பார்த்தால் நம் சருமத்தின் அழகு பாதிக்கப்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.அதற்காக அதிக பணம் செலவழிக்க வேண்டியதில்லை. ஆனால் நாம் வாங்கும் காஸ்மெட்டிக்ஸ் தரமானதாக இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டியது அவசியம். வீட்டிலும் சருமப் பராமரிப்பு மேற்கொள்ளலாம்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலே ஆயிரம் ஏரிகளின் நாடு என்றழைக்கப்படும் நாடு எது?
  பின்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சர்க்கரை நோயை வென்றிடுவோம்...
சர்க்கரை நோயினால் பாதிக்கப்படும் நோயாளிகள் அதிகரித்து வருவதால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உலக நீரழிவு கூட்டமைப்பும், உலக
14 November, 2018, Wed 4:18 | views: 410 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய இயற்கை வழிமுறைகள்
வெயிலின் தாக்கம் காரணமாகச் முகச்சருமம் அதிகளவு பாதிக்கப்படும் இதனால், எப்போதும் களைப்பான தோற்றமாக இருக்கும். இதற்கு காரணம் சருமத்
13 November, 2018, Tue 8:18 | views: 332 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முகப்பரு என்றால் என்ன? ஏன் ஏற்படுகிறது?
தோலில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளில் ஏற்படும் மாற்றம் காரணமாக ஏற்படும் கொப்பளங்கள் மற்றும் தோல் முடிச்சுகள் முகப்பரு எனப்படுகிறது.
8 November, 2018, Thu 11:30 | views: 459 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கூந்தல் உதிர்வுக்கான காரணமும் - செய்யக்கூடாதவையும்
தலைமுடிதான் ஒரு மனிதனின் ஆளுமைத் தீர்மானிக்கிறது. ஆனால், முடி கொட்டி அதுவே பலரை தாழ்வு மனப்பான்மையில் தள்ளி விடுகிறது. முடி வளர்ச
2 November, 2018, Fri 10:00 | views: 941 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எண்ணெய் வழியும் சருமத்திற்கு...
* எண்ணெய்த் தன்மையான சருமத்தை உடையவர்கள் முகத்தில் மோரை பூசி சிறிது நேரத்திற்குப்பின் கழுவி வந்தால் எண்ணெய் தன்மை குறையும். * சோ
30 October, 2018, Tue 11:02 | views: 499 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS