Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
டீசல் விலை லிட்டருக்கு ரூ.75-ஐ நெருங்குகிறது பெட்ரோல் விலை 82 ரூபாயை எட்டுகிறது
3 September, 2018, Mon 4:16 GMT+1  |  views: 182

தற்போது தங்கத்தைப் போன்று பெட்ரோல், டீசல் விலையும் தினமும் நிர்ணயிக்கப்படுகிறது. பெட்ரோல்- டீசலுக்கு தினமும் விலை நிர்ணயிக்கிற முறையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமல்படுத்தின.

இந்த நிதி ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலை ஏறத் தொடங்கியது. இடையில் கர்நாடக சட்டசபை தேர்தல் நேரத்தில் 19 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை.

ஆனால் தேர்தல் முடிந்ததும், 19 நாட்கள் விலை உயர்த்தப்படாததை எல்லாம் ஈடு செய்யும் வகையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் கணிசமாக உயர்த்த தொடங்கின.

அதைத் தொடர்ந்து கடந்த மே மாதம் முதல்முறையாக பெட்ரோல் விலை ரூ.80-ஐ தொட்டது. அதேபோன்று டீசலும் லிட்டருக்கு விலை ரூ.72-ஐ கடந்தது. இந்த விலை உயர்வு பின்னர் சற்று தணிந்தது. ஆனால் இப்போது மீண்டும் பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகத்தில் பயணிக்கத் தொடங்கி இருக்கிறது.

கடந்த 10 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து வந்து, வரலாறு காணாத உச்சத்தை எட்டி உள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை தேதி வாரியாக வருமாறு:-

ஆகஸ்டு 24-ந் தேதி ரூ.80.69, 25-ந் தேதி ரூ.80.70, 26-ந் தேதி ரூ.80.80, 27-ந் தேதி 80.94, 28-ந் தேதி ரூ.81.09, 29-ந் தேதி ரூ.81.22, 30-ந் தேதி ரூ.81.35, 31-ந் தேதி ரூ.81.58, செப்டம்பர் 1-ந் தேதி ரூ.81.77 2-ந் தேதி ரூ.81.92

10 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.23 உயர்ந்து உள்ளது.
சென்னையில் கடந்த 10 நாட்களாக டீசல் விலையும் ஏறுமுகமாகவே இருந்து வந்து உள்ளது. இதன் நிலவரம் வருமாறு:-

ஆகஸ்டு 24-ந் தேதி ரூ.73.08, 25-ந் தேதி ரூ.73.09, 26-ந் தேதி ரூ.73.23, 27-ந் தேதி 73.38, 28-ந் தேதி ரூ.73.54, 29-ந் தேதி ரூ.73.69, 30-ந் தேதி ரூ.73.88, 31-ந் தேதி ரூ.74.18, செப்டம்பர் 1-ந் தேதி ரூ.74.42, 2-ந் தேதி ரூ.74.77. 10 நாட்களில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.69 அதிகரித்து உள்ளது.

பின்னணி என்ன?

பொதுவாக சர்வதேச சந்தையில் நிலவுகிற கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில்தான் பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கப்படுகிறது.

தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்து வருவது பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்து உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. ஏனென்றால், இந்த விலை உயர்வு அவற்றுடன் நின்று விடுவது இல்லை. சங்கிலித்தொடர்போல இவற்றின் விலை உயர்வு பல்வேறு வகையிலும் தாக்கத்தை ஏற் படுத்தி வருகிறது.

டீசல் விலை உயர்வால் லாரி வாடகை அதிகரிக்கிறது. இதன் காரணமாக அத்தியாவசியப்பொருட்கள், காய்கனிகள் விலை உயர்கிறது. இவற்றின் விலை உயர்கிறபோது ஓட்டல் உணவுப்பண்டங்களின் விலையை ஓட்டல் உரிமையாளர்கள் உயர்த்தி விடுகிறார்கள். இதில் என்ன கொடுமை என்றால் ஒருமுறை உயர்ந்தால் அது அப்படியே நிலைத்து விடுகிறது. திரும்ப அத்தியாவசியப்பொருட்கள், காய்கறிகள் விலை குறைகிறபோது பெரும்பாலான ஓட்டல்கள் விலை குறைப்பு செய்வது இல்லை.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஆட்டோ கட்டணம், கால்டாக்சி கட்டணம் உயர்ந்து விடுகிறது. இரு சக்கர வாகன ஓட்டிகளும் தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் போட சிரமங்களை சந்திக்கிறார்கள். இதனால் பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்துகிற சாமானிய மக்கள் மிகவும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

வரி குறைப்பார்களா?

பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.19.48, டீசல் மீது லிட்டருக்கு ரூ.15.33 உற்பத்தி வரியாக மத்திய அரசால் விதிக்கப்படுகிறது. இதே போன்று தமிழக அரசு பெட்ரோல் மீது 34 சதவீதமும், டீசல் மீது 25 சதவீதமும் மதிப்பு கூட்டு வரி (‘வாட்’ வரி) விதிக்கிறது.

தற்போதைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கு மத்திய, மாநில அரசுகள் வரியை குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது.

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* 1972-ம் ஆண்டு வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டாக கபடி அறிவிக்கப்பட்டது.
சஞ்சீவனி, காமினி மற்றும் அமர் ஆகிய பெயர்களில் 3 விதங்களில் கபடி ஆட்டம் நடைபெறுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஆந்திராவில் தெலுங்கு தேச எம்.எல்.ஏ. சுட்டுக்கொலை மாவோயிஸ்டுகள் வெறிச்செயல்
ஆந்திராவில் தெலுங்கு தேச எம்.எல்.ஏ. சுட்டுக்கொல்லப்பட்டார். வெறிச்செயலில் ஈடுபட்ட மாவோயிஸ்டு அமைப்பினரை போலீசார் தேடி வருகின்றனர்
24 September, 2018, Mon 4:14 | views: 287 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தி.மு.க.வை ஊழல் கட்சி என்பதா? எடப்பாடி பழனிசாமிக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்
தி.மு.க.வை ஊழல் கட்சி என்று பேசிய எடப்பாடி பழனிசாமிக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
24 September, 2018, Mon 4:13 | views: 166 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. கைது நீதிமன்ற உத்தரவின் பேரில் வேலூர் சிறையில் அடைப்பு
முதல்-அமைச்சர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. கைது
24 September, 2018, Mon 4:11 | views: 170 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஒருங்கிணைக்கப்பட்ட தேசிய மருத்துவ பாதுகாப்பு திட்டம் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்
முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட தேசிய மருத்துவ பாதுகாப்பு திட்டத்தை சுகாதாரத்துறை
24 September, 2018, Mon 4:10 | views: 126 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
10 கோடி ஏழை குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு : பிரதமர் தொடங்கி வைத்தார்
10 கோடி ஏழை குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் ஆண்டுக்கு
24 September, 2018, Mon 4:09 | views: 129 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS