Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
ஒவ்வொரு நலத்திட்டத்தையும் மோடி முத்துமாலை போல கோர்த்து வருகிறார் நிர்மலா சீதாராமன் பெருமிதம்
2 September, 2018, Sun 5:37 GMT+1  |  views: 224

சென்னை அண்ணா சாலையில் உள்ள தபால் அலுவலகத்தில் இந்திய அஞ்சலக பணப்பட்டுவாடா வங்கி சேவையை (இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க்) தொடங்கும் விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. விழாவுக்கு, மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார். தொடர்ந்து சென்னை கிளையில் அஞ்சலக பணப்பட்டுவாடா வங்கி சேவையையும் அவர் தொடங்கி வைத்தார்.

விழாவில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அஞ்சலக பணப்பட்டுவாடா வங்கியில் புதிதாக கணக்கு தொடங்கியவர்களுக்கும், முதியோர் உதவித்தொகை பெறுபவர்களுக்கும் அடையாள அட்டையை நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இணைந்து வழங்கினர். தமிழக முதன்மை தபால் தலைவர் எம்.சம்பத் அஞ்சலக பணப்பட்டுவாடா வங்கி சேவை தொடங்கப்பட்டதற்கான சிறப்பு தபால் உரையை வெளியிட அதை நிர்மலா சீதாராமன் பெற்றுக்கொண்டார்.

விழாவில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

எத்தனை தொழில்நுட்ப வளர்ச்சி வந்தாலும் தபால் சேவையையும், தபால்காரர்களையும் மக்கள் மத்தியில் இருந்து பிரிக்கமுடியாது என்பதற்கு இந்த அஞ்சலக பணப்பட்டுவாடா வங்கி சேவை திட்டம் முன்னோடி திட்டமாகும்.

ஜன்-தன் யோஜனா, முத்ரா, விவசாயிகள் காப்பீடு என்று மக்கள் நலனுக்காக தனது ஒவ்வொரு திட்டத்தையும் முத்துமாலை போல பிரதமர் மோடி மெல்ல மெல்ல கோர்த்து வருகிறார். தற்போது தபால்காரர் மூலம் வங்கி சேவை வீடு தேடி வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களுமே அஞ்சலக பணப்பட்டுவாடா வங்கி சேவை திட்டத்துக்கு மாற்றப்படும்.

இந்த சிறப்பு திட்டத்தால் இனி தனது வங்கி கணக்கு எண்ணை ஞாபகத்தில் வைக்க தேவையிருக்காது. அதற்காக ‘கியூ.ஆர்.’ என்ற அட்டை கொடுக்கப்படுகிறது. இதில் எந்த குறுக்கீடோ, தலையீடோ இருக்காது. கைரேகை காட்டி கூட தங்கள் கணக்கு விவரங்களை நடைமுறைப்படுத்திக்கொள்ளலாம். ஒரு காலத்தில் கைநாட்டு என்று கேலி செய்த காலம் உண்டு, இன்று கைரேகையின் மகத்துவத்தை அடையாளம் காட்டி வருகிறது, மோடி அரசு.

சில திட்டங்களில் வங்கி பணம் இடைத்தரகர்கள் மூலம் பயனாளர்களுக்கு கிடைக்கப்பட்டு வருகிறது. அதில் முறைகேடும் நடக்கிறது. அதை களையும் நோக்கில்தான் இந்த பேமண்ட் திட்டத்தை மோடி அறிமுகப்படுத்தி இருக்கிறார். இதன்மூலம் பயனாளர் கணக்கு ரூ.1 லட்சத்தை எட்டும்போது, அத்தொகை 4 சதவீத வட்டித்தொகையுடன் நேரடியாக அவரது வங்கி கணக்குக்கு அனுப்பப்படும். பொருளாதார சீர்திருத்தத்தின் அடிப் படையாகவே இத்திட்டத்தை பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசும்போது, “பிரதமர் மோடியின் இந்த சாதனை வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படவேண்டியது. தமிழகத்தில் விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்களுக்கான பல்வேறு திட்டங்களுக்கு அரசு மானியம் வழங்கி வருகிறது. மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆண்களுக்கு ரூ.85 கோடியும், பெண்களுக்கு ரூ.85 கோடியும் தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்த பண பரிமாற்றத்தை அஞ்சலக பணப்பட்டுவாடா வங்கி மூலம் கிடைக்க வழி செய்தால், இடைத்தரகர்கள் தவிர்க்கப்படுவார்கள். மீனவர்களும் அரசின் திட்டங்கள் மூலம் முழுமையாக பயன்பெற முடியும்” என்றார்.

விழாவின் முடிவில் சென்னை மண்டல தபால் துறை தலைவர் ஆர்.ஆனந்த் நன்றி கூறினார். சென்னை அண்ணா சாலை கிளையில் அஞ்சலக பணப்பட்டுவாடா கட்டண வங்கி சேவை தொடக்க விழாவில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கணக்கு தொடங்கியதாக தபால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

மேனோமீட்டர் (Manometer)

வாயுவின் அழுத்தத்தைக் கணக்கிடும் கருவி இது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தயே புயல்: சத்தீஷ்கர் மற்றும் மத்தியபிரதேச மாநிலங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
தயே புயலால் சத்தீஷ்கர் மற்றும் மத்தியபிரதேச மாநிலங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
22 September, 2018, Sat 8:04 | views: 286 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கருணாஸ் பேச்சுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
கருணாஸ் பேச்சுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
22 September, 2018, Sat 8:01 | views: 203 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சர்வதேச அளவில் மாநாட்டு அரங்கம்: பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்
டெல்லியில், சர்வதேச அளவிலான மாநாடுகள், கண்காட்சிகள் உள்ளிட்டவற்றை நடத்தும் வகையிலான அரங்கம் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டவுள்ளார்.
20 September, 2018, Thu 3:55 | views: 363 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அணைகளை பாதுகாக்க ரூ.3,466 கோடியில் திட்டம் தமிழகத்துக்கு ரூ.543 கோடி; மத்திய மந்திரிசபை ஒப்புதல்
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், மத்திய பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட், உத்தரகாண்ட் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 198 அணைகளை பாதுகாத்து பராம
20 September, 2018, Thu 3:54 | views: 220 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அமைச்சர் தங்கமணி பதவி விலக வேண்டும் : மு.க.ஸ்டாலின் அறிக்கை
காற்றாலை மின்சார ஊழல் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு வழிவிடும் வகையில் மின்துறை அமைச்சர் தங்கமணி பதவி விலக வேண்டும்
20 September, 2018, Thu 3:53 | views: 167 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS