Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஜோதிட நிலையம்
170818*15
வாடகைக்கு வீடு தேவை
170818*15
அழகுக் கலைநிபுனர் தேவை
100818*15
பிரெஞ்சுக் குடியுரிமை வழிகாட்டல்...
100818*15
வீட்டு வேலைக்கு ஆள் தேவை
100818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
Bail விற்பனைக்கு
230618
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
கருணாநிதியின் எல்லா கனவுகளையும் சாதித்து காட்டுவேன் மு.க.ஸ்டாலின் சபதம்
11 August, 2018, Sat 4:19 GMT+1  |  views: 828

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தொண்டர்களுக்கு கடிதம் வடிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆகஸ்டு 10 தலைவர் கருணாநிதியின் சாதனை வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டிருக்கும் நாள்களில் ஒன்று. அவரது முதல் பிள்ளையான ‘முரசொலி’ இதழ் பிறந்த நாள். தி.மு.க.வுக்கு வாளும், கேடயமுமாய் ‘முரசொலி’யை வார்ப்பித்துக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார் தலைவர் கருணாநிதி. தந்தையை இழந்து நான் நிற்பதைப் போலவே ‘முரசொலி’ என்ற மூத்த மகனும் தந்தையை இழந்து நிற்கிறான். காகிதக் கண்ணீர் வடித்து நிற்கிறது ‘முரசொலி’.

இப்படி ஒரு தலைவன் எந்த இயக்கத்துக்கும் வாய்த்தது இல்லை என்று நாம் பெருமையால் திளைக்கும் அளவுக்கு வாழ்ந்தவர் அவர். இப்படிப்பட்ட தொண்டர்கள் எந்த தலைவருக்கும் கிடைத்தது இல்லை என்கிற அளவுக்கு செயல்பட்டவர்கள் நீங்கள். தலைவன் - தொண்டன் என்ற பாகுபாடுகூட இல்லாமல் தந்தை - தனயனாய்த் தான் அனைவரையும் அன்பால் அரவணைத்தார். அதனால்தான், ‘என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே!’ என்ற ஒற்றைச் சொல்லைக் கேட்டதும் மந்திரத்துக்கு கட்டுப்பட்டவர்களாய் நாம் மயங்கி நின்றோம்.

“என் பொதுவாழ்வுப் பயணத்தில் இடர், துடர், இன்பம், துன்பம், எதிர்ப்பு, ஆதரவு, ஏச்சு, பேச்சு, இழிவு, பழி என எத்தனையோ விதவிதமான நிகழ்வுகளை எதிர்கொள்ளும்போது என்னை ஆளாக்கிய பெரியாரையும், அரவணைத்து வழிநடத்திய அண்ணாவையும் நினைத்துக்கொண்டு லட்சியத்தில் இம்மியளவும் சறுக்கல் இல்லாமல் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டிருக்கிறேன்” என்று தலைவர் கருணாநிதி எழுதினார். நமது பொது வாழ்வுப் பயணத்தில் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகிய 3 மாபெரும் சக்திகள் நம்மை வழிநடத்தும்.

உங்களில் ஒருவனான நான், ஏதோ ஒன்றை அல்ல, எல்லாவற்றையும் இழந்த மனநிலையில் இருக்கிறேன். அவர் கருவால் உருவானவன் நான். அவரது கதகதப்பில் தவழ்ந்தவன். அவரால் நடை பழகியவன். உடை அணிவிக்கப்பட்டவன். அவரால் அழைத்துச் செல்லப்பட்டு பள்ளியில் சேர்க்கப்பட்டவன். போராளியும், சோவியத் கட்டமைப்பை உருவாக்கியவருமான ஸ்டாலினின் பெயரை எனக்கு சூட்டியவர் அவர். அவசரநிலைப் பிரகடனம் அறிவிக்கப்பட்டு, தி.மு.க.வின் ஆட்சி கலைக்கப்பட்டபோது காவல்துறை என்னை கைது செய்ய வந்தபோது, கம்பீரத்தோடு என்னை மத்திய சிறைக்கு அனுப்பி வைத்த நெஞ்சுரத்தைப் பார்த்து வளர்ந்தவன் நான். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் என்னை வார்ப்பித்தார். வளர்த்தெடுத்தார். “ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு” என்று மும்முறை அவர் சொன்னதுதான் எனக்கு கிடைத்த மாபெரும் பாராட்டுப் பட்டயம்.

‘உழைப்பு, உழைப்பு, உழைப்பு’ என்ற அந்த 3 வார்த்தைகள்தான் எனக்கு அவர் விட்டுச் சென்ற மந்திரச் சொற்கள். 3 வேளையும் என்னை இயக்கப்போகும் சாவி அதுதான். அந்த உழைப்பு, திராவிட இயக்கத்தின் லட்சியங்களை வென்றுகாட்டும். அந்த உழைப்பு, தமிழ்நாட்டுக்கான உரிமைகளைப் பெற்றுத்தரும். அந்த உழைப்பு, தலைவர் கருணாநிதியின் எல்லாக் கனவுகளையும் நிறைவேற்றும். தி.மு.க.வின் லட்சோப லட்சம் தொண்டர்கள் துணையோடு இதை சாதித்துக் காட்டுவேன் என்று சபதம் ஏற்கிறேன்.

‘ஏடு’தான் கட்சியை வளர்க்கும். ‘கட்சி’தான் ஏட்டையும் வளர்க்கும். பல நூறு இதழ்களால் வளர்க்கப்பட்டது திராவிட இயக்கம். இதனை தி.மு.க. தொண்டர்கள் மறந்து விடக்கூடாது. கட்சி தொண்டர்களுக்கு ‘முரசொலி’ வாசிப்பது மூச்சு விடுவது போன்று இயல்பானதாக மாறினால்தான் தலைவர் கருணாநிதியின் மூத்த பிள்ளை ஆரோக்கியமாக இருப்பான். ‘முரசொலி’யை வளர்ப்பது என்பது தலைவர் கருணாநிதியின் மூத்த பிள்ளையை வளர்ப்பது போல் என்று நினைத்து வளர்த்தெடுக்க வேண்டும். முரசொலி, தலைவர் கருணாநிதியின் மூத்த பிள்ளை என்றால் எனக்கு ‘மூத்த அண்ணன்’.

தலைவர் கருணாநிதி என்ன நினைக்கிறார் என்று நேரில் பார்த்து தெரிந்து கொள்வதைவிட முரசொலியைப் பார்த்து தெரிந்துகொள்வதே அதிகம். அவர் இல்லாத சூழ்நிலையில் நித்தமும் வெளிவரும் முரசொலியைக் காலையில் பார்க்கும் போதும் கருணாநிதியின் முகம்தான் நினைவுக்கு வரும். கருணாநிதி நம்மோடு இருக்கிறார், எங்கும் போய்விடவில்லை என்பதை நித்தம் உணர்த்தும் ‘முரசொலி’யை வாழ்த்துகிறேன். வாழ்த்துங்கள். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

 வேவ்மீட்டர் (Wavemeter)

ரேடியோ அலைகளின் அலை நீளத்தை அளவிடும் கருவி.
 

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வாஜ்பாய் உடலுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அஞ்சலி
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
17 August, 2018, Fri 4:30 | views: 340 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் கேரளா : பலியானோர் எண்ணிக்கை 97 ஆக அதிகரிப்பு
கேரளாவில் கனமழை தொடர்ந்து கொட்டி தீர்த்து வருகிறது. மழை தொடர்பான சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது.
17 August, 2018, Fri 4:29 | views: 194 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம் டெல்லியில் இன்று மாலை உடல் தகனம்
மரணமடைந்த வாஜ்பாய் உடல் இன்று மாலை 4 மணி அளவில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.
17 August, 2018, Fri 4:27 | views: 175 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இந்திய வானத்தில் துருவ நட்சத்திரத்தை நாம் இழந்துள்ளோம் - பாஜக தேசிய தலைவர் அமித்ஷா
இந்திய வானத்தில் துருவ நட்சத்திரத்தை நாம் இழந்துள்ளோம் என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.
16 August, 2018, Thu 18:24 | views: 380 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வாழ்க்கை குறிப்பு
மக்களவைக்கு 10 முறையும் மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்வு செய்யபட்டவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வாழ்க்கை குறிப்பு
16 August, 2018, Thu 18:19 | views: 414 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi / crêpier

Paristamil Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
STUDIO A LOUER
500 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS