Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
220518
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
காசாளர் தேவை
160518
இடம் தேவை
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
முந்துங்கள்!!
050518
Seriga Seri bridal
020518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
கர்நாடக முதல் மந்திரியாக இன்று காலை பதவியேற்கிறார் எடியூரப்பா, 5 அமைச்சர்கள் பதவியேற்க வாய்ப்பு?
17 May, 2018, Thu 4:15 GMT+1  |  views: 277

கர்நாடகத்தில் கடந்த மே 12 ஆம் ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முன் தினம் நடைபெற்றது. தேர்தல் முடிவுகளின் படி எந்த ஒருக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 104 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக  வென்றது. இதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் 78 இடங்களிலும்,  ஜனதா தளம் (எஸ்) 38 தொகுதிகளிலும்  வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சைகள் 2 பேர் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

.இதைதொடர்ந்து 104 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பா.ஜனதாவை ஆட்சி அமைக்க விடக் கூடாது என முடிவு செய்த காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக அறிவித்தது. இதற்கு ஜனதாதளம் (எஸ்) கட்சியும் சம்மதம் தெரிவித்துள்ளது.

இதனிடையே சட்டசபை பா.ஜனதா கட்சி தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்ட எடியூரப்பா கவர்னரை நேரில் சந்தித்து, பா.ஜனதாவை ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதே போல் காங்கிரஸ் ஆதரவுடன் ஜனதா தளம் (எஸ்) கட்சி தலைவர் குமாரசாமியும் தனக்கு ஆட்சி அமைக்க அனுமதி வழங்குமாறு கோரி கவர்னரிடம் கடிதம் கொடுத்தார். இந்த சூழலில், எடியூரப்பாவை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்ப்பு விடுத்தார். மேலும், பதவியேற்ற 15 நாளில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

ஆளுநர் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் நள்ளிரவு காங்கிரஸ் முறையிட்டது. காங்கிரஸ் முறையீட்டை  ஏற்று மிகவும் அரிதாக இந்த வழக்கை நள்ளிரவே விசாரணை எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், விடிய விடிய விசாரணை நடத்தியது. பின்னர், எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம், நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு வழக்கை ஒத்திவைத்தது. மேலும், எடியூரப்பா ஆளுநருக்கு அளித்த கடித நகலை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இன்று காலை பதவியேற்பு:

பதவியேற்பதற்கு எந்த தடையும் இல்லாததையடுத்து, இன்று காலை 9 மணியளவில் கர்நாட முதல் மந்திரியாக எடியூரப்பா பதவியேற்க உள்ளார். கர்நாடகத்தின் 23-வது முதல் மந்திரியாக எடியூரப்பா பதவியேற்கிறார். ஆளுநர் மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில் நடைபெறும் எளிய விழாவில் எடியூரப்பா பதவியேற்க உள்ளார். அவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். எடியூரப்பாவுடன் 5 அமைச்சர்கள் பதவியேற்க கூடும் என்று தகவல்கள் கூறுகின்றன.

குருப்பாஸ் சமுதாயத்தைச்சேர்ந்த ஈஸ்வரப்பா, ஒக்களிக சமுதாயத்தைச்சேர்ந்த ஆர்.அசோக், எஸ்.சி சமுதாயத்தைச்சேர்ந்த கோவிந்த கரஜோலா, எஸ்.டி சமுதாயத்தைச்சேர்ந்த ஸ்ரீராமலு பதவியேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. எடியூரப்பா தரப்பில் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், பாஜக தலைமையின் அனுமதி கிடைத்தால் பதவியேற்பார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன.

 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* மேல் தாடையை அசைக்கும் விலங்கு

  முதலை

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மத்திய அரசின் 4 ஆண்டு கால சாதனை பட்டியல் வெளியீடு பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து பெருமிதம்
மத்திய அரசின் 4 ஆண்டு கால சாதனை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து மத்திய அரசு பெருமிதம் அடை
26 May, 2018, Sat 4:11 | views: 109 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தூத்துக்குடி சம்பவம் பற்றி சி.பி.ஐ. விசாரணை கோரி மனு: அவசர வழக்காக விசாரிக்க 28-ந் தேதி முறையிடலாம்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரும் மனுவை அவசர வழக்காக விசாரிக்க 28-ந் தேதி முறையிட மனுதாரருக்
26 May, 2018, Sat 4:10 | views: 112 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தூத்துக்குடியில் கலவரம் வெடித்தது தொடர்பாக அடுத்தடுத்து வழக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவுகள்
தூத்துக்குடி கலவரம் தொடர்பாக அடுத்தடுத்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து
26 May, 2018, Sat 4:08 | views: 111 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அந்தமானில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது
அந்தமான், நிக்கோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.
26 May, 2018, Sat 4:06 | views: 107 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக சட்டவிரோத காவலில் 95 பேர் சித்ரவதை நேரில் பார்த்த நீதிபதி அதிர்ச்சி
தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக 95 வாலிபர்களை சட்டவிரோத காவலில் வைத்து போலீசார் சித்ரவதை செய்தது தெரிய வந்துள்ளது.
26 May, 2018, Sat 4:04 | views: 111 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
ENGLISH/ TAMIL/ FRENCH CLASSES

Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS