Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
கரவை மக்கள் ஒன்றியம் - பிரான்சு
200618
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
Spoken English classes
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
முதல்-அமைச்சரின் டெண்டர் ஊழல்களை விசாரிக்க லஞ்சஊழல் ஒழிப்புத்துறை தானாகவே முன்வர வேண்டும்
14 June, 2018, Thu 4:19 GMT+1  |  views: 355

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க.வின் கீழ் செயல்படும் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளிலும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் டெண்டர் மோசடிகள் அணி அணியாக பேரணி வகுத்து நிற்கின்றன.

டெண்டர்களில் பங்கேற்பவர்கள் ‘ஏற்கனவே செய்த பணிகளுக்கு’ நிறைவுச்சான்றிதழ் வழங்க வேண்டும், ‘தர சான்றிதழுடன்’ டெண்டரை ஆன்-லைனில் ‘அப்லோடு’ செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை ஆட்சியாளர்களின் உறவினர்களுக்கு டெண்டர் வழங்குவதற்கு மிகவும் சாதகமாக பயன்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது.

ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம்போல், இன்றைய தினம் முதல்-அமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி வகிக்கும் நெடுஞ்சாலைத்துறையில், தன் பதவியை பயன்படுத்தி சம்பந்திகளுக்கும், பினாமிகளுக்கும், தன் குடும்ப உறுப்பினர்களுக்கும் பந்தி வைப்பதைப்போல, எப்படி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டர்களைக் கொடுத்திருக்கிறார்? வேலையின் மதிப்பீடுகளை எப்படி செயற்கையாக எவ்வித அடிப்படையுமின்றி உயர்த்தியிருக்கிறார்? என்பதை எல்லாம் விரிவாக விளக்கி, மாநில விஜிலென்ஸ் கமிஷனருக்கு தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ்.பாரதி புகார் கொடுத்து இருக்கிறார்.

இன்றைக்கு நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஊழல்களை தி.மு.க. அம்பலப்படுத்தி இருக்கிறது.

அனைத்துத்துறைகளிலும் அ.தி.மு.க. ஆட்சியின் 7 ஆண்டு காலத்திலும் குறிப்பாக எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சரான பிறகு நாள்தோறும் நடைபெற்றுவரும் இமாலய டெண்டர் ஊழல் மற்றும் அமைச்சர்களின் டெண்டர் ஊழல்களையும் விசாரிக்க லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறை தானாகவே முன்வரவேண்டும்.

லஞ்சஊழல் ஒழிப்புத்துறை தயங்கினால் நீதிமன்றத்தை நாட தி.மு.க. தயங்காது என்று தெரிவித்து அமைச்சர்களுக்கு சிவப்புக்கம்பளம் விரித்து ஊழலின் பச்சை சிரிப்புக்கு உற்சாகமாக உதவிடவேண்டும் என்ற ஒரு சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் விருப்பத்தால், நேர்மையாளர்கள் நிரம்பிய தமிழ்நாடு ஐ.ஏ.எஸ். நிர்வாகம் திசைமாறி சென்று சேற்றில் இறங்கிவிடக்கூடாது என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குனர், கண்காணிப்பு கமிஷனர் மற்றும் நிர்வாகசீர்த்திருத்த கமிஷனரிடம் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

உலக வங்கி நிதி உதவியுடன் ஒட்டன்சத்திரம்-தாராபுரம்-அவினாசிபாளையம் 4 வழிச்சாலை திட்டத்துக்கு ரூ.713.34 கோடி நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த திட்ட மதிப்பீடு ரூ.1,515 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்துக்கான ஒப்பந்தம் நெடுஞ்சாலைத்துறையை கைவசம் வைத்துள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தன் மருமகள் திவ்யாவின் உறவினருக்கு கொடுத்துள்ளார். நெல்லை-செங்கோட்டை-கொல்லம் 4 வழிச்சாலை திட்டத்துக்கு ரூ.179.94 கோடி நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்த பணியை எடப்பாடி பழனிசாமி தனது மகன் மிதுன் குமாரின் மாமனாருக்கு கொடுத்துள்ளார்.

அச்சுறுத்தும் தந்திரங்களை பயன்படுத்தி தன் உறவினர்களின் நிறுவனங்களுக்கு எடப்பாடி பழனிசாமி சட்ட விரோதமாக ஒப்பந்த பணிகளை வழங்கியுள்ளார். தகுதி வாய்ந்தவர்களுக்கு ஒப்பந்த பணிகள் வழங்கப்படவில்லை. பொது ஊழியரான முதல்-அமைச்சர் அரசு ஒப்பந்த பணியை தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி உறவினர்களுக்கு வழங்கியது சட்டவிரோதம் ஆகும்.

இது ஊழல் சட்டத்தின் கீழ் கிரிமினல் குற்றம் ஆகும். எனவே எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒப்பந்த பணிகள் பெற்ற அவருடைய உறவினர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

 போலோமீட்டர் (Bolometer)

வெப்பக் கதிர்வீச்சின் அளவை கணக்கிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக, சென்னையில் சி.பி.ஐ. விசாரணை தீவிரம்
லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட அதிகாரிகளின் பட்டியல் சேகரிப்பு டெல்லியில் இருந்து சென்னை வந்துள்ள சி.பி.ஐ. அதிகாரிகள், குட்கா ஊழல்
23 June, 2018, Sat 4:05 | views: 247 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது மதுரை ஐகோர்ட்டில் அட்வகேட் ஜெனரல் தகவல்
ஸ்டெர்லைட் ஆலையை மூட உயர்மட்ட அளவில் கொள்கை முடிவு எடுத்துத்தான் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசின்
23 June, 2018, Sat 4:04 | views: 178 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாராளுமன்ற தேர்தலின்போது மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்குமா? நடிகர் கமல்ஹாசன் பேட்டி
பாராளுமன்ற தேர்தலின்போது மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்து போட்டியிடுமா? என்பது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கலந்து பேசி
23 June, 2018, Sat 4:03 | views: 171 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தேர்தலில் தி.மு.க.வை தனித்துவிட சோனியா-கமல்ஹாசன் சந்திப்பா? மு.க.ஸ்டாலின் பேட்டி
சோனியாகாந்தியை கமல்ஹாசன் சந்தித்தது வரக்கூடிய தேர்தலில் தி.மு.க.வை தனித்து விடுவதற்காகவா? என்ற கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதில்
23 June, 2018, Sat 4:02 | views: 161 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆணையத்தின் உத்தரவுக்காக காத்திருக்க முடியாது: கர்நாடக விவசாய பாசனத்திற்கு காவிரி நீரை திறக்க குமாரசாமி உத்தரவு
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்காக காத்திருக்க முடியாது என கூறிய குமாரசாமி, கர்நாடக விவசாய பாசனத்திற்காக காவிரி நீரை
22 June, 2018, Fri 3:56 | views: 508 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
Offre d'emploi / vendeur ou vendeuse
SMIC €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS