Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
பந்தை சேதப்படுத்திய விவகாரம்! கடும் கோபத்தில் தென்னாப்பிரிக்க ரசிகர்கள்!
31 March, 2018, Sat 10:03 GMT+1  |  views: 1537
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் இருந்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ரசிகர்கள் மீளவில்லை என்பது நேற்றைய டெஸ்ட் தொடரின் போது தெரியவந்தது.
 
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங் கேற்றுள்ளது. முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், அடுத்த இரண்டு டெஸ்டுகளில் தென்னாப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. 
 
இந்த அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று தொடங் கியது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் சுமித், டேவிட் வார்னர், பேன்கிராஃப்ட் ஆகியோ ருக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் அவர்களுக்கு பதிலாக ஜோ பர்ன்ஸ், ரென்ஷா, ஹேன்ட்ஸ்கோம்ப் சேர்க்கப் பட்டனர். காய மடைந்த மிட்செல் ஸ்டார்க்குக்கு பதில் அறிமுக வீரர் சாட் சயர்ஸ் களமிறங்கினார். 
 
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கர் 19 ரன்களில் வெளியேறினாலும் மற்றொரு தொடக்க வீரர் மார்க்ராம் நிலைத்து நின்று அபார சதமடித்தார். அவர் 152 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இது அவ ருக்கு 4 வது டெஸ்ட் சதம்.
 
அம்லா 27 ரன்களிலும் கேப்டன்  டு பிளிசிஸ் ரன் ஏதுமின்றியும், டிவில்லியர்ஸ் 69 ரன்களிலும் ரபடா ரன் ஏதுமின்றியும் அவுட் ஆனார்கள். நேற்றைய ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி, முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் சேர்த்துள்ளது. பவுமாவும் 25 ரன்களுடன், டி காக் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், சாயர்ஸ் 2 விக்கெட்டும் லியான் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
 
இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
 
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டாலும் தென்னாப்பிரிக்க ரசிகர்கள் சிலர் அந்த கோபத்தில் இருந்து வெளிவரவில்லை. அந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஸ்மித், வார்னர், பேன்கிராப்ட் ஆகியோர் குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டதை அடுத்து அவர்களுக்கு ஆதரவாக கிரிக்கெட் வீரர்கள் பேசி வருகின்றனர். இந்திய வீரர் கள் அஸ்வின், ரோகித் சர்மா, ஹர்பஜன் சிங் ஆகியோரும் அவர்களுக்கு ஆதரவாக நெகிழ்ச்சி ததும்பும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
 
தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளிசிஸ் கூட, ’ஸ்மித் நல்லவர்’ என்று கூறியிருந்தார். ஆனால், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ரசிக ர்கள், ஆஸ்திரேலிய வீரர்களை மன்னிக்கத் தயாராகவில்லை. 
 
மணல் தாளை கொண்டு பேன்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தியதை நினைவுப்படுத்தும் விதமாக, 'Sandpaper special only R10!'  என்று எழுதப்பட்டிருந்த பதாகைகளை சிலர் ரசிகர்கள் தாங்கிப் பிடித்திருந்தனர்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய பாலைவனம் எது? 
  சஹாரா பாலைவனம் (ஆபிரிக்கா)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சாதனை வெற்றியை பதிவு செய்த இலங்கை அணி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றிக்கு காரணமாக இருந்த குசல் பெரேராவுக்கு பாராட்டுகள் குவிந்த
17 February, 2019, Sun 7:30 | views: 384 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கடும் போராட்டத்தின் பின் வெற்றியை சூடியது இலங்கை!
சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்
16 February, 2019, Sat 14:47 | views: 470 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கபில் தேவ்வின் சாதனையை முறியடித்த ஸ்டெயின்!
தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயின், இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கபில்தேவ்வின்
16 February, 2019, Sat 10:30 | views: 399 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடும் இந்திய அணி விபரம்!
அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. ஆரோ
16 February, 2019, Sat 7:29 | views: 387 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
5 விக்கெட்களை வீழ்த்தி இலங்கை பந்துவீச்சாளர் அசத்தல்!
இலங்கை - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 304 ரன்களை இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக நிர்
15 February, 2019, Fri 16:37 | views: 400 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS