EN FRANCAIS - IN FRENCH
 paristamil
தமிழ்வழிகாட்டிசெய்திபரிஸ்தமிழ்FM குழந்தைகள் பெயர்CHAT கானொளி திருமண சேவை
Tamilannuaire Paristamil Carte AnnoncePrénomJeuxChat ParistamilFmBlagues Nous contacter
முகப்பு இலங்கை பிரான்ஸ் இந்தியா வினோதம் உலகம் சினிமா விளையாட்டு தொடர்புகளுக்கு
  விளம்பரம்
  மின்னஞ்சலில்
பிணவாடை அடிக்கிறது
June 15, 2012, 5:01 pm|views: 5604
ParisTamil news

wtbt

 

ஒரு நைல் நதியாய்
வடிந்து கொண்டு
ஓடியது குருதி
கொலைக் களத்திலிருந்து

கறுப்பு மனிதர்களால்
அரைப் பிணங்களாய்
தெருவெங்கும் விரவி
பிச்சை கேட்கின்றது
எம் உயிர்கள்!

ஒவ்வொரு நாளும்
மலர்களுக்கு பதிலாக
மரணம் மலர்ந்தது !
மரணம் மரணம்
மரணமென்றானது - என்
மண்ணின் தேசிய கீதம்

அதிகாலையிலும்
ஐயோ ஐயோ ஐயோவென
சுப்ரவாதம் ஒலிக்கவே
ஊரடங்கு போட்டன
ஓல ஒப்பாரிகள்!

பிறந்த நாளுக்கு
இனிப்பு வழங்கி
சிரித்து சென்ற
என் பள்ளித் தோழி
பாவடையின்றி
செத்துக் கிடந்தாள்!

பாவம் அவள்
குருதி தோய்ந்த
வெள்ளை ரோஜாவாய்
உதிர்ந்து கிடந்தாள். 
அவள் குறிகளில்
பரிசோதனை
செய்யப்பட்டிருந்தது
சப்பாத்துக்காரனின் ஆண்மை !

அத்தனையும் யாரோ ஒரு
நடிகையின் எண்ணத்தில்
பார்த்தும் ரசித்தும்
கொடி பிடித்தும்
உண்ணாநிலையிருந்தும்
பேசிய கர கர குரல்கள்
பழரசம் அருந்திய நாடகம்
அறிந்தோம் !

எங்கள் கண்ணீரின் கனத்திலே
கதிரைகள் செய்யப்படுகின்றன
அரசியல் அரங்கில் !

நரிகளின் நாடகத்தில்
தமிழனின்
சாவு மூலக் கதை!
முள்ளிவாய்க்கால் தமிழனின்
சவப்பெட்டிகளை
வாக்குபெட்டியாய்
மாற்றுகிறீர்கள்
மானம் கெட்டவரே !

பிணவாடை அடிக்கிறது
என் கவிதைகளிலும்
முள்ளிவாய்க்கால் இருப்பதனால்!
முகருங்கள்
மானம் கெட்டவரே
இனியேனும்
பழரசம் அருந்த ரத்தம் கேட்காதீர்!

- கவிஞர் அகரமுதல்வன்

g+1ஐ அழுத்தி இச் செய்தியை Googleஇல் பரிந்துரைக்கவும்
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
• உங்கள் கருத்துப் பகுதி
 முன்னைய செய்திகள்
ஒரு முறையேனும்...!
விழி நீர் பெருக சங்கடம் எனை ஆழ்த்துகிறது வித்திட காதல் விதவையானதால் பசி பட்டினி அறிந்தவன் பாவையவள் எண்ணங்களை புரியாததால் பரிதவித்து நிற்கிறான் மனமோ தவிக்கிறது மாற்றான் தோ
April 13, 2014, 10:33 am | views: 339மேலும் »
அம்மா....!
கவிக்குள் அடங்கா காவியச்சொல் இது கவியர்கள் கூட அடக்கிட முடியா அசையாச்சொல் இது. ஆனால்..... அனைவரையும் அன்புடன் அரவணைக்கும் ஓர் அழகான சொல்... அம்மா...அம்மா..
April 5, 2014, 6:23 pm | views: 571மேலும் »
வலிகள் தந்தவன்....
வலிகள் தந்தவன் அமைதியாய் வாழ்கின்றான் மனதைக் கொடுத்தவள் மரணத்தை நாடுகின்றாள் காற்றினில் வந்தவன் கண்ணாம் பூச்சி ஆடுகின்றான் பாட்டினில் கடிதம் அனுப்பி வைத்தியம் செய்கிறான
March 17, 2014, 5:01 pm | views: 999மேலும் »
என் தேடலின் சுகமே...!
என் தேடலின் சுகம் நீயென்று கண்டேன்...! கலங்கரை விளக்கமாய் என் வாழ்வினில் வந்தாய்...! கலங்கிடும் வேளையில் உன் கரங்களால் என்னை அணைத்துக்கொள்கிறாய்...! என் வாழ்வில் வழிகாட்டியாய்
February 14, 2014, 1:08 pm | views: 999மேலும் »
நான் நனைந்த மழை...!
கார்மேகம் கழற்றி எறிந்துகொண்டிருந்தன தன் உடைகளை மண்ணில் மழையாய்...! குடையின்றி ஒதுங்கியதால் உடையும் நனைந்துவிட்டன இலையாய்...! நள்ளிரவு என்பதால் அக்கம்பக்கம் யாருமில்லை ஒ
January 18, 2014, 12:54 pm | views: 1170மேலும் »
Paristamil carte
60%SUMANGALI PARADIZES
50%Sumangaly Text
30%LITTLE INDIA SILK POINT
20%Autosur Mathavan
10%CAFE BHARATH
paristamil
இலட்சுமி வேலுப்பிள்ளை
லண்டன்
பிறப்பு:19-05-1922இறப்பு :09-04-2014
  Annonce
Appartement F2
Paristamil Annonce
142 000 €
Actif assurance
Advertisements Copyright © 2000 - 2014 ParisTamil