Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
கொல்கத்தாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்..!
15 April, 2018, Sun 3:54 GMT+1  |  views: 470
ஐ.பி.எல். போட்டியில் கேன் வில்லியம்சனின் பொறுப்பான ஆட்டத்தால் கொல்கத்தா அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. 
 
ஐ.பி.எல். போட்டியின் 11-வது சீசனில் இன்று கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
 
டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராபின் உத்தப்பாவும், கிறிஸ் லின்னும் களமிறங்கினர். ஆட்டத்தின் ஏழாவது ஓவரில் மழை குறுக்கிட்டது. ஐதராபாத் அணியினரின் சிறப்பான பந்துவீச்சில் சிக்கிய கொல்கத்தா அணி தடுமாறியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இதனால் கொல்கத்தா அணி நிர்ணயம் செய்யப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 138 ரன்கள் எடுத்தது.
 
அந்த அணியில் அதிகபட்சமாக கிறிஸ் லின் 34 பந்துகளில் ஒரு சிக்சர், 7 பவுண்டரியுடன்  49 ரன்களும், தினேஷ் கார்த்திக் 29 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.
 
ஐதராபாத் அணி சார்பில் புவனேஷ்வர் குமார் 3  விக்கெட்டும், பில்லி ஸ்டான்லேக், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
 
இதையடுத்து, 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விரித்திமான் சகா, ஷிகர் தவான் இறங்கினர். தவான் 7 ரன்னிலும், சகா 24 ரன்னிலும், மணீஷ் பாண்டே 4 ரன்னிலும் அவுட்டாகினர்.
 
அடுத்து களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சனும், ஷகிப் அல் ஹசனும் பொறுப்புடன் ஆடினர். இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். 4-வது விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்த்தனர். ஷகிப் அல் ஹசன் 27 ரன்னில் வெளியேறினார். சிறப்பாக விளையாடிய கேன் வில்லியம்சன் அரை சதமடித்து அவுட்டானார். ஹூடாவும், யூசுப் பதானும் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்
 
இறுதியில் ஐதராபாத் அணி 19 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹூடா 5 ரன்னுடனும், யூசுப் பதான் 17 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.
 
கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரேன் 2 விக்கெட்டும், குல்தீப் யாதவ், பியுஷ் சாவ்லா, ஜான்சன் ஆகியோர் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும்

  அது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
13 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்!
ஐபிஎல் தொடரில் ஐதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் தனது சிறப்பான பந்து வீச்சால் கிங்ஸ் லெவன் பஞ்சாப்
27 April, 2018, Fri 4:18 | views: 242 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள தோனி! வீடியோ இணைப்பு
ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள தோனி! வீடியோ இணைப்புபெங்குளுர் அணியை 5 விக்கட்டுக்களால்
26 April, 2018, Thu 9:03 | views: 1101 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது சென்னை அணி!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் அம்பதி ராயுடு, தோனியின் அதிரடியால் பெங்களூர் அணியை 5
26 April, 2018, Thu 3:46 | views: 412 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
31 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ஐதராபாத்!
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தனது சிறப்பான பந்துவீச்சால் 31 ரன்கள்
25 April, 2018, Wed 3:50 | views: 462 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
டெல்லி அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்!
ஐபிஎல் தொடரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 4 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி
24 April, 2018, Tue 3:54 | views: 423 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS