Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
100718*15
வேலைக்கு ஆள் தேவை!
070718*15
வேலைவாய்ப்பு
(5 ஊழியர்கள் தேவை)
030718*15
சாரதி அனுமதிப்பத்திரம்...
020718*15
கடை Bail விற்பனைக்கு
270618
கடை Bail விற்பனைக்கு
270618
வேலை வாய்ப்பு
260618
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
Spoken English classes
150518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!
11 April, 2018, Wed 3:54 GMT+1  |  views: 959

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

 
ஐ.பி.எல். 11-வது சீசனின் ஐந்தாவது ஆட்டமானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
 
இதில் நாணய சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவர் டோனி பந்து வீச்சை தெரிவு செய்தார். இதையடுத்து கொல்கத்தா அணி முதலில் துடுப்பெடுத்தான முடிவு செய்தது.
 
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின், சுனில் நரேன் ஆகியோர் களமிறங்கினர்.
 
நரேன் சந்தித்த முதல் மூன்று பந்தில் இரண்டு சிக்ஸர் அடித்தார். அவர் 4 பந்துகளில் 12 ஓட்டங்கள் எடுத்து ஹர்பஜன் சிங் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய உத்தப்பா நிதானமாக விளையாடி ரன் சேர்த்தார். லின் 22 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
 
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நிதிஷ் ராணா 16 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
 
அதைத்தொடர்ந்து சிறப்பாக விளையாடிய உத்தப்பா 29 ஓட்டங்களில் ரன் அவுட் ஆனார். ரிங்கு சிங் 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
 
அப்போது கொல்கத்தா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 89 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அதன்பின் அணித்தலைவர் தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரசல் ஜோடி சேர்ந்து பொறுப்பாக விளையாடி ஓட்டங்கள் குவித்தனர்.
 
ரசல் 26 பந்தில் அரைசதம் அடித்தார். தினேஷ் கார்த்திக் 26 ஓட்டங்கலில் ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 202 ஓட்டங்கள் எடுத்தது.
 
அதிரடியாக விளையாடிய ரசல் 36 பந்தில் 88 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். இதில் 11 சிக்ஸர்களும், ஒரு பவுண்டரியும் அடங்கும். சென்னை அணியின் வாட்சன் இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.
 
இதன்மூலம் சென்னை அணியின் வெற்றிக்கு 203 ஓட்டங்களை இலக்காக கொல்கத்தா அணி நிர்ணயித்தது.
 
இதனையடுத்து இமாலய இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் துவக்க வீரர்களாக வாட்ஸன் மற்றும் ராயுடு களமிறங்கினர்.
 
வாட்ஸன் துவக்கம் முதலே அதிரடி காட்ட 19 பந்துகளை சந்தித்து 42 ஓட்டங்கள் குவித்தார். ராயுடு 26 பந்துகளை சந்தித்து 39 ஓட்டங்கள் குவித்தார்.
 
தொடர்ந்து ரய்னா 12 பந்தில் 14 ஓட்டங்களுடன் நரேன் பந்தில் வெளியேற டோனியுடன் பில்லிங்ஸ் களம் கண்டார்.
 
டோனி நிதானத்துடன் விளையாடி 28 பந்தில் 25 ஓட்டங்கள் சேர்த்து வெளியேறினார்.
 
பில்லிங்ஸ் 23 பந்தில் 56 ஓட்டங்கள் குவித்து உத்தப்பாவிடம் கேட்ச் தந்து வெளியேறினார். கடைசி கட்டத்தில் ஜடேஜாவுடன் பிராவோ களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
 
ஜடேஜா 7 பந்துகளில் 11 ஓட்டங்களும், பிராவோ 5 பந்துகளில் 11 ஓட்டங்களும் குவித்து சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாடு,

  ஜெர்மனி

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகளின் 2வது டெஸ்ட் இன்று ஆரம்பம்!
இலங்கை, தென்ஆப்பிரிக்காவுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று
20 July, 2018, Fri 4:33 | views: 117 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் டோனி?
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோல்வி அடைந்த ஆட்டத்தில் டோனி பந்தை வாங்கி சென்றதால் அவர்
19 July, 2018, Thu 4:47 | views: 687 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து!
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள்
18 July, 2018, Wed 4:17 | views: 524 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கை அணி தலைவருக்கு விளையாட தடை!
இலங்கை அணி கேப்டன் தினேஷ் சண்டிமலுக்கு இரண்டு டெஸ்ட் மற்றும் நான்கு ஒருநாள் போட்டிகளில் விளையாட
17 July, 2018, Tue 4:40 | views: 603 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார் ஜோகோவிச்!
கெவின் ஆண்டர்சனை நேர்செட் கணக்கில் வீழ்த்தி விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்.
16 July, 2018, Mon 3:11 | views: 683 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
PARTITION LEGAL NOTICE
10 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS