சாதாரண குடும்பத்தில் பிறந்த டயானா பிரித்தானிய இளவரசர் சார்லஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் உலகையே திரும்பி பார்க்க வைத்தது.
டயானா சார்லஸ் தம்பதிக்கு வில்லியம், ஹரி என இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். இந்நிலையில் கடந்த 1997 ஆம் ஆண்டு பாரீஸில் நடந்த கார் விபத்து ஒன்றில் டயானா உயிரிழந்தார்.