Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
பொ‌ய்யான கோப‌ம்...!
20 October, 2017, Fri 15:12 GMT+1  |  views: 766
ஜிங்ஜுவுக்கு பொசுக்கு பொசுக்கென்று கோபம் வந்துவிடும். எங்கும், எதிலும், எப்போதும், எதற்கெடுத்தாலும் அவனிடம் கோபம்தான். 
 
அவன் தாயாரும் ஜிங்ஜுவின் கோபத்தை குறைக்க என்னென்னவோ மன வைத்தியம் எல்லாம் செய்து பார்த்தாயிற்று. முடிவு கடுகளவும் பிரயோஜனம் தரவில்லை. 
 
அப்போது அந்த ஊருக்கு புகழ் பெற்ற ஜென் துறவி வந்திருந்தார். அவரிடம் அனுப்பி வைத்தால் மகனின் கோபத்துக்கு நல்லதொரு நிவாரணம் கிடைக்கும் என்று ஜிங்ஜுவின் தாயார் நம்பினார். மகனை துறவியிடம் அனுப்பி வைத்தார்.
 
நேராக துறவியிடம் போய் "மாஸ்டர், என்னிடம் அடக்க முடியாத கோப உணர்வு இருக்கிறது. அதை நான் எப்படி சரி செய்வது?'' என்று கேட்டான்.
 
"உன்னிடம் ஏதோ மிகவும் வித்தியாசமான ஒன்று இருக்கிறது. அதுதான் கோபம்! எங்கே, அதை சற்று என்னிடம் காட்டு பார்க்கலாம்'' என்றார் துறவி.
 
`இப்பொழுது என்னால் காட்ட முடியாது.'- இது ஜிங்ஜு
 
`எப்போதுதான் என்னிடம் காட்ட முடியும்' - இது துறவி.
 
`அது எதிர்பாராமல் வரும். அப்போதுதான் கோபத்தை அடக்க என்ன செய்வது என்று தெரியவில்லை' என்றான் ஜிங்ஜு
 
"கோபம் என்பது உண்மையானது, இயல்பானது என்றால் எந்த சமயத்திலும் அதை என்னிடம் உன்னால் காட்ட முடியும். நீ பிறந்த போது கோபம் உன்னிடம் இருந்தது இல்லை. உன் பெற்றோரும் கொடுத்தது இல்லை. பிறகு எப்படி உன்னிடம் கோபம் வந்தது?'' என்று கேட்டார்.
 
ஜிங்ஜு குழம்பினான்.
 
துறவியே விளக்கினார், "கோபம் என்பது ஏமாற்றத்தில் விளைந்த ஒரு பின்செயல். எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிகிறது. ஏமாற்றத்திலிருந்து கோபம் உண்டாகிறது'' என்று புரியவைத்தார்.
 
நீதி: பொன், புகழ், செல்வம் என்று ஒவ்வொன்றின் மேல் எதிர்பார்ப்பு வைப்பதால் ஏமாற்றம் உருவாகிறது. ஏமாற்றம் கோபமாகிறது. வெறுங்கையுடன் வந்தோம். வெறுங்கையுடனேயே செல்கிறோம். இடையில் வந்து போகும் செல்வங்களின் மீது எதிர்பார்ப்பு வைக்காமல் வாழ்ந்தால் சலனமில்லாத நிம்மதியான வாழ்வு உருவாகும்.
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

கிரையோமீட்டர் (Cryometer)

குறைவான வெப்பநிலையை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கிரீடம் வெட்கி தலை குனிந்தது!
ஒரு சமயம் வைகுண்டவாசனான திருமாலின் தலையில் இருந்த கிரீடம், அவரது பாத அணிகளைப் பார்த்து ஏளனம்
10 November, 2017, Fri 3:57 | views: 616 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தியா பார்த்த பூதம்...!
தியா மூணாவது படிக்கும் பொண்ணு. அவள் எப்பவும் நல்ல மார்க் வாங்குவா. விளையாட்டுலயும் சுட்டி.
2 November, 2017, Thu 3:22 | views: 795 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குருடரின் விளக்கு..!!
ஒரு கிராமத்தில் கண் பார்வையற்ற முதியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் இரவு வேளையில் எப்போது வெளியே
24 October, 2017, Tue 14:55 | views: 1192 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிக்கனமே சிறந்தது...!!!
அமெரிக்காவின் ராக்பெல்லர் உலகப் பணக்காரர்களில் ஒருவர். ஒரு நாள் ராக்பெல்லரை பார்த்து தங்களது
15 October, 2017, Sun 13:39 | views: 1037 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தங்க நாணயம்...!
ஒரு ஊரில் ராமசாமி என்ற சுயநலமிக்க செல்வந்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் ஊருக்கு சென்று திரும்பும் வழியில்
7 October, 2017, Sat 14:53 | views: 1209 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS