Paristamil France administrationParistamil France administration
வர்த்தகர் பதிவு விளம்பரம் செய்ய வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
கடை Bail விற்பனைக்கு
090618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
Spoken English classes
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
டோனிக்கும், இலங்கைக்கும் முக்கியமான போட்டி இன்று!
31 August, 2017, Thu 10:13 GMT+1  |  views: 1833
இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான 4வது ஒருநாள் போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றுவருகின்றது.
 
ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என கைப்பற்றியிருந்தாலும், இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி மற்றும் இலங்கை அணிக்கு மிக முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது.
 
இந்திய அணியில் தற்போது விளையாடிவரும் முன்னாள் தலைவரான டோனி இன்று அவரது 300வது ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளார். இந்திய அணியின் பல முக்கிய வெற்றிகளுக்கு காரணமாகவிருந்த டோனியின் 300வது போட்டியை இந்திய அணி வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் களமிறங்கும்.
 
நடைபெற்றுவரும் இலங்கை அணிக்கெதிரான தொடரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பவர் டோனி. அவரது அனுபவத்தின் மூலமாக அணிக்கு வெற்றியை தேடித்தந்துள்ளார். இதனால் அவரது 300வது போட்டியான, இன்றைய போட்டி அவருக்கு புதியதொரு மைல் கல்லாக அமையவுள்ளது.
 
இதேவேளை தொடர்ந்து தோல்விகளை சந்தித்துவரும் இலங்கை அணி உலகக்கிண்ண வாய்ப்பை தக்கவைப்பதற்காக இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
 
இலங்கை அணிக்கு தொடரின் ஆரம்பத்திலிருந்து துரதிஷ்டம் துரத்திவருகின்றது. முதலாவது போட்டியை இலங்கை அணி தோல்வியடைந்திருந்தாலும். அடுத்த இரண்டு போட்டிகளிலும் சிறிய தவறுகளை விட்டதால் தோல்வியை தழுவியது.
 
அதுமாத்திரிமின்றி இலங்கை அணியின் ஒருநாள் போட்டி தலைவர் உபுல் தரங்கவுக்கு இரண்டு போட்டிகளில் தடை, குணதிலக, சந்திமாலுக்கு ஏற்பட்டுள்ள உபாதை, அணியில் தொடர்ந்து மாற்றங்கள் மற்றும் பல்லேகலையில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவம் என பல இன்னல்களுக்கு மத்தியில் இலங்கை அணி விளையாடிவருகின்றது.
இதேவேளை சனத் ஜயசூரியவின் தலைமையிலான தெரிவுக்குழுவின் இராஜினாமாவும், கிரிக்கெட் சபைக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இவ்வாறான பிரச்சினைகளுக்கு மத்தியில் இலங்கை அணி இன்று களமிறங்குகிறது. இன்றைய போட்டியை பொருத்தவரையில் இந்திய அணி பலமான அணி என்பதுடன், தொடரை ஏற்கனவே கைப்பற்றியுள்ளது. இதனால் இந்திய அணிக்கு அழுத்தங்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை.
 
எனினும் பல இன்னல்களுக்கு மத்தியில் இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணியின் பலம் என்று கூறினால், அது லஹிரு திரிமான்னேவின் வருகை, அகில தனஞ்சயவின் ஆச்சரியமூட்டும் பந்துவீச்சு, டிக்வெல்லவின் அதிரடி ஆரம்பம் என்பவைதான். இதேவேளை இந்த போட்டியில் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள லசித் மாலிங்கவின் பந்து வீச்சை இலங்கை அணி பெரிதும் எதிர்பார்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
 
இன்றைய போட்டியில் இந்தியாவுடன் மோதும் இலங்கை அணி தொடரின் முதல் வெற்றியை சுவைக்குமா? இல்லையென்றால் தொடர் தோல்விகள் தொடருமா? என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகவும் வரண்ட பாலைவனம் எது?  
  ஆடகாமா பாலைவனம் (சிலி)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
60 வருட மோசமான சாதனையை தகர்த்த ஸ்வீடன்!
உலகக்கோப்பை முதல் ஆட்டத்தில் தென்கொரியாவை 1-0 என ஸ்வீடன் வீழ்த்தி 60 வருட வறட்சிக்கு முற்றுப்புள்ளி
19 June, 2018, Tue 5:05 | views: 1016 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
துனிசியாவை வீழ்த்திய இங்கிலாந்து!
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்றைய மூன்றாவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல்
19 June, 2018, Tue 4:42 | views: 345 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பனாமாவை வீழ்த்திய பெல்ஜியம்!
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் பனாமாவை 3-0 என பெல்ஜியம் அணி
19 June, 2018, Tue 4:20 | views: 287 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜெர்மனியை வீழ்த்திய மெக்சிகோ!
உலகக்கோப்பை கால்பந்தில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ‘எஃப்’ பிரிவில் நடப்பு சாம்பியனான
18 June, 2018, Mon 4:54 | views: 827 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கோஸ்டா ரிகாவை 1-0 என வீழ்த்திய செர்பியா!
உலகக்கோப்பை கால்பந்தில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ‘ஈ’ பிரிவில் கோஸ்டா ரிகாவை 1-0 என வீழ்த்தியது
18 June, 2018, Mon 4:38 | views: 311 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS