Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
கடை Bail விற்பனைக்கு
090618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
Spoken English classes
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
நெத்திலி மீன் தொக்கு
21 August, 2017, Mon 17:22 GMT+1  |  views: 2937

 சம்பார் சாதம், பழைய சாதத்திற்கு தொட்டு கொள்ள நெத்திலி மீன் தொக்கு அருமையாக இருக்கும். இன்று இந்த தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
சூப்பரான நெத்திலி மீன் தொக்கு
தேவையான பொருட்கள் :
 
நெத்திலி மீன் - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 1/2 கிலோ
பச்சை மிளகாய் - 5
மிளகாய்த் தூள் - 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1/2 டீஸ்பூன்
பூண்டு - 10 பல்
கறிவேப்பிலை - சிறிதளவு
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
புளி - சிறிய எலுமிச்சை அளவு
தேங்காய்ப் பால் - அரை கோப்பை
உப்பு - தேவையான அளவு
 
 
 
செய்முறை :
 
நெத்திலி மீனில் இருந்து முள்ளெடுத்து, உப்பு போட்டு நன்றாக கழுவி, தண்ணீரை வடித்து வைக்கவும்.
 
புளியை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
 
சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 
அடுப்பில் அகன்ற பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வெந்தயத்தை போட்டு தாளித்த பின்னர் பூண்டை தட்டி போடவும்.
 
பூண்டு லேசாக வதங்கியதும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன் நிறமாக வதக்கவும்.
 
வெங்காயம் நன்றாக வதங்கியதும் எல்லா மசாலா தூள் வகைகளையும் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கிய, பின்னர் நறுக்கிய தக்காளி, நீளவாக்கில் இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடம் நன்கு வதக்கவும்.
 
தக்காளி நன்றாக வதங்கியதும் கரைத்த புளியை ஊற்றி பச்சை வாடை போகும் வரை கொதிக்க விடவும்.
 
 
 
நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் கழுவி வைத்திருக்கும் நெத்திலி, உப்பு சேர்க்கவும்.
 
அடுத்து அதில் தேங்காய்ப்பால் சேர்த்து குறைந்த தீயில் ஐந்து நிமிடம் வேக விடவும்.
 
நெத்திலி கொதித்து கெட்டியாகி தொக்கு பதம், வந்தவுடன் கொத்துமல்லித்தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
 
சூப்பரான நெத்திலி மீன் தொக்கு ரெடி. 
 
குறிப்பு :
 
1. நெத்திலியை கழுவும் போது தலை பகுதியை பிடித்து கொண்டு விரலால் நடுவில் கீறினால் முள்ளை அப்படியே எடுத்து விடலாம்.சாப்பிடும் போது ஒரு
முள் கூட இருக்காது.
 
2. நெத்திலி மீன் சீக்கிரம் வெந்து விடும் ஆகையால் கடைசியில் போட வேண்டும்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உடலில் ரத்தம் பாயாத பகுதி

  கருவிழி

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தேங்காய்ப்பால் சிக்க‍ன் கிரேவி
சப்பாத்தி, பரோட்டா, சாப்பாட்டிற்கு ஏற்ற தேங்காய்ப்பால் சிக்க‍ன் கிரேவி செய்வது எப்படி என்பதை விரிவாக பார்க்கலாம். தேங்காய்ப்பால்
18 June, 2018, Mon 11:36 | views: 233 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மட்டன் பிரியாணி
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ரம்ஜான் ஸ்பெஷல் மட்டன் பிரியாணியை செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.
16 June, 2018, Sat 11:16 | views: 591 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முட்டை இடியாப்பம்
காலையில் செய்து மீந்து போன இடியாப்பத்தை மாலையில் முட்டை சேர்த்து மசாலா இடியாப்பம் செய்து குழந்தைகளுக்கு கொடுத்து அசத்தலாம். இன்று
14 June, 2018, Thu 11:11 | views: 642 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புளியோதரை
அனைவருக்கும் பெருமாள் கோவில் புளியோதரை என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பெருமாள் கோவில் புளியோதரை / ஐயங்கார் புளியோதரை செய்முறைய
11 June, 2018, Mon 7:51 | views: 817 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சத்து நிறைந்த கோதுமை ரவா அடை
சத்து நிறைந்த கோதுமை ரவையை வைத்து ஏராளமான சத்தான உணவுகளை தயாரிக்கலாம். அன்று கோதுமை ரவையை வைத்து அடை செய்வது எப்படி என்று பார்க்க
9 June, 2018, Sat 17:40 | views: 705 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS