Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
வாடகைக்கு வீடுகள்
061017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
யூடியூபின் குழந்தைகள் பாதுகாப்பு செயற்பாடு தோல்வி!
8 August, 2017, Tue 15:41 GMT+1  |  views: 2181
யூடியூபில் குழந்தைகள் பாதுகாப்பை நிர்வகிக்கும் அமைப்பு தோல்வியடைந்து விட்டதாக அந்த நிறுவனத்தின் தன்னார்வக் கண்காணிப்புக் குழுக்கள் தெரிவித்துள்ளன.
 
குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்யும் நபர்கள் அல்லது அதற்கு விரும்பும் நபர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவார்கள் என்ற மனப்பான்மை இருந்து கொண்டேதான் இருக்கிறது. யூடியூபும் அதைத் தெரிந்து வைத்துள்ளது.
 
காணொளிகளைப் பகிரும் இந்தத்தளமானது தன்னுடைய வலைத்தளத்தில் வேண்டத்தகாத பதிவுகள் மற்றும் கருத்துக்களை இடுவதைக் கண்டறிவதற்காக ட்ரஸ்டட் ஃப்ளாக்கர்ஸ் என்ற சிறப்பு வாய்ந்த தன்னார்வக் குழுவைக் கொண்டுள்ளது.
 
ட்ரஸ்டட் ஃப்ளாக்கர்ஸ் என்ற இந்த அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் சில மாதங்களுக்கு முன் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளதாக பி.பி.சி. யிடம் தெரிவித்துள்ளனர்.
 
குழந்தைகளுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய சில பதிவுகள் இருப்பதாக அனுப்பிய பல்வேறு புகார்களில் குறைந்த அளவு புகார்களுக்கு மட்டுமே பதிலளித்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.
 
கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 9,000-க்கும் மேலான புகார்களை தான் அனுப்பியதாகவும், ஆனால் இதுவரை எதுவுமே தீர்க்கப்படவில்லை என்றும் ஒரு தன்னார்வலர் தெரிவித்துள்ளார்.
 
சமீபத்தில் அளிக்கப்பட்டுள்ள 526 புகார்களில் 15 பதில்கள் மட்டுமே திரும்பி வந்துள்ளது என்று கூறும் தன்னார்வலர்கள், இந்தத் தளத்தில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு இல்லை என்ற பெரிய பிரச்சனையை இது அடையாளப்படுத்தும் கணக்கீடாகவே இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
 
பதின்ம வயதுள்ளவர்கள் மற்றும் குழந்தைகள் பகிரும் சில காணொளிகளில் விரும்பத்தகாத, ஆட்சேபனைக்குரிய வகையில் கருத்துக்களை இடும் நபர்களின் கணக்குகளின் மீதும் புகாரளிக்கப்பட்டுள்ளன.
 
குழந்தைகள் வெளியிடும் இந்த காணொளிகளில் ஆபாசமோ அல்லது நிர்வாணத்தை வெளிப்படுத்தும் எந்த வித காட்சிகளும் இல்லாத போதிலும், பாலியல் ரீதியான கருத்துகள் வெளியிடப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
 
குறிப்பாக பதின்ம வயது குழந்தைகளை உடைகள் இல்லாத காணொளிகளை பகிருமாறும், தங்களின் தேகங்கள் குறித்து உரையாடத்தூண்டும் வகையிலும் காணொளிகளின் கீழ் கருத்துகள் இடப்படுகின்றன.
 
சில நேரங்களில் குழந்தைகளை தனிச்செய்தியில் உரையாட வருமாறும் அழைப்பு விடுக்கின்றனர்.
 
குழந்தைகள் மீது பாலியல் துஷ்பிரயோகத்தை வெளிப்படுத்தும் அல்லது பாலியல் துன்புறுத்தலை மேற்கொள்ள விரும்பும் பெடொஃபைல் எனப்படும் நோயுடைய நபர்கள் இந்த வலைத்தளத்தில் உலவுவதாகவும் புகாரளிக்கப்பட்டுள்ளது.
 
”எங்களுடைய தளத்தில் குழந்தைகள் மீது பாலியல் வக்கிரத்தை வெளிப்படுத்தும் எந்தவித உள்ளீடுகள் மற்றும் கருத்துகள் இடுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அவ்வாறு முறையற்ற செயலில் ஈடுபடும் நபர்களின் கணக்கை நீக்கிவிடுவோம்,” என கடந்த மார்ச் மாதம் யூடியூப் நிறுவனம் தெரிவித்தது.
 
ஆனால், அவர்கள் தங்கள் கொள்கைகளை நடைமுறையில் செயற்படுத்தவில்லை என தன்னார்வலர்கள் பிபிசி-க்கு தெரிவித்துள்ளனர்.
  முன்அடுத்த   
paristamil
மரண அறிவித்தல் Paristamil Marana Arivithalதிரு முருகேசு சரவணமுத்து
Paristamil Marana Arivithal
மண்ணில்:22-03-1950
விண்ணில்:10-11-2017
Paristamil Marana Arivithal

யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வதிவிடமாகவும் கொண்ட முருகேசு சரவணமுத்து

பிறந்த இடம் : யாழ். சுழிபுரம் இறந்த இடம்:  பிரான்ஸ் Bobigny
பொதறிவுத் துணுக்கு :

* உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம்,

  பனாமா கால்வாய்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Samsung Galaxy S9 மற்றும் S9 பிளஸ் தொடர்பான தகவல்கள் வெளியானது!
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S9 மற்றும் S9 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீடு சார்ந்த தகவல்கள்
17 November, 2017, Fri 11:47 | views: 607 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
டுவிட்டர் விதித்த புதிய கட்டுப்பாடு!
சமூக வலைத்தளங்களில் முன்னணி தளங்களில் ஒன்றாக இருக்கும் டுவிட்டர் புதிய கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது.
10 November, 2017, Fri 1:48 | views: 540 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பேஸ்புக்கில் 27 கோடி போலி கணக்குகள்: ஆய்வில் வெளியாகிய தகவல்
பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் இதுவரை சுமார் 27 கோடி போலி கணக்குகள் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள்
7 November, 2017, Tue 10:35 | views: 669 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
WhatsApp பயனர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!
வாட்ஸ்அப் செயலியின் பீட்டா பதிப்பில் சில பயனர்களுக்கு வழங்கப்பட்டு வந்த டெலீட் ஆப்ஷன் அனைத்து
2 November, 2017, Thu 2:14 | views: 1072 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Group voice calls அம்சத்தை அறிமுகம் செய்யும் Whats App
வாட்ஸ்அப் பீட்டா பதிப்பு செயலியில் குரூப் வாய்ஸ் கால் அம்சம் வழங்குவதற்கான சோதனை செய்யப்பட்டு
24 October, 2017, Tue 15:17 | views: 1069 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS