வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
040717
Bail விற்பனை Paris 12
050717
வீடுகள் வாடகைக்கு, விற்பனைக்கு
040717
தேவை
040717
வேலையாள்த் தேவை
040717
Bail விற்பனைக்கு
La Chapelle
270617
தேவை
270617
Bail விற்பனைக்கு
150617
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
குடியிருப்பு வரி - 2018 இல் 80% நீக்கப்படும் - அரசாங்கத்தின் வாக்குறுதி!!
France Tamilnews
அவதானம்!! உந்துருளிகளின் இலக்கத்தகடுகள் சனிக்கிழமைக்கு முதல்!!
France Tamilnews
மீளக்குடிறுயேம் நம்பிக்கையுடன் மயிலிட்டி மக்கள்
16 July, 2017, Sun 13:00 GMT+1  |  views: 1175
  • coffee-bharath
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
வலிகாமம் வடக்கில் உள்ள மயிலிட்டியைச் சேர்ந்த மக்கள் தாம் தமது சொந்த இடங்களுக்குச் செல்வோம் என தற்போது நம்புகிறார்கள். இவர்கள் தமது சொந்த இடத்தை விட்டு வெளியேறி 27 ஆண்டுகள் கடந்துள்ளன.
 
கடந்த 3ஆம் நாள், சிறிலங்கா அரசாங்கத்தால் மயிலிட்டியின் கரையோரத்தைச் சேர்ந்த 54 ஏக்கர் நிலப்பரப்பு பொதுமக்களின் பாவனைக்கு விடப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து இந்த இடத்தைச் சேர்ந்த மக்கள் நம்பிக்கை ஒளியைப் பெற்றுள்ளனர்.
 
மயிலிட்டியிலுள்ள மீன்பிடித் துறைமுகத்தையும் சிறிலங்கா அரசாங்கம் தற்போது விடுவித்துள்ளதானது மயிலிட்டியைச் சேர்ந்த மீனவ சமூகத்திற்கு நம்பிக்கையைத் தந்துள்ளது. மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ். பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெற்றியாராச்சி 54 ஏக்கர் நிலங்களை உத்தியோகபூர்வமாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ந.வேதநாயகனிடம் கையளித்தார்.
 
1980களில் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகமானது நாட்டின் மிகப் பெரிய துறைமுகங்களில் ஒன்றாகக் காணப்பட்டதுடன் இது மீன்பிடித் தொழிலிற்கு பக்கபலமாகவும் இருந்தது. நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக மயிலிட்டித் துறைமுகம் உட்பட காங்கேசன் துறைமுகம் உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது.
 
1990ல் தனது சொந்த இடமான மயிலிட்டியிலிருந்து இடம்பெயர்ந்த 70 வயதுடைய மீனவரான பிள்ளையான் தவம்,  17 ஆண்டுகளாக கோணப்புலம் மீள்குடியேற்றக் கிராமத்தில் வசித்து வருகிறார். மீன்பிடித் துறைக்கு அருகிலுள்ள தனக்குச் சொந்தமான நிலத்தை இராணுவத்தினர் தன்னிடம் கையளிப்பார்கள் என இவர் நம்புகிறார்.
 
‘நாங்கள் இங்கு மீன்பிடிக்க ஆரம்பிப்பதற்கு முன்னர், நாங்கள் எமது நிலத்தில் குடியேற்றப்பட வேண்டும். சொந்த நிலங்களில் குடியேறும் மக்களுக்கு தற்போது எவ்வித வசதிகளும் வழங்கப்படவில்லை’ என தவம் தெரிவித்தார்.
 
மயிலிட்டியைச் சேர்ந்த மக்கள் அவர்களின் சொந்த நிலங்களில் குடியேற்றப்படுவதற்கு முன்னர் அவர்களுக்கான அடிப்படை வசதி வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என சிவில் சமூகமும் கோரிக்கை விடுத்துள்ளது.
 
துறைமுகத்திற்கு அருகிலுள்ள கரையோரப் பகுதியைச் சேர்ந்த 54 ஏக்கர் நிலம் மட்டுமே தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் துறைமுகத்தின் ஏனைய பகுதி தற்போதும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலேயே வைக்கப்பட்டுள்ளதாகவும் மயிலிட்டி மீள்குடியேற்றக் குழுவின் பிரதித் தலைவர் பொன்னுச்சாமி ரஞ்சன் தெரிவித்தார்.
 
‘எமக்குச் சொந்தமான நிலம் முழுவதையும் எம்மிடம் கையளிக்குமாறு நாங்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இதன்மூலம் பல ஆண்டுகளாக தமது சொந்த நிலங்களுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்புடன் வாழும் மக்களின் எண்ணம் நிறைவேறும்’ என ரஞ்சன் தெரிவித்தார்.
 
எங்களுடைய பிள்ளைகள் பலருக்கு மயிலிட்டியில் வீடு உள்ளதே தெரியாது என ரஞ்சன் தெரிவித்தார்.
 
யாழ் மாவட்டத்தில் 5400 ஏக்கர் நிலப்பரப்பானது தற்போதும் சிறிலங்கா இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் இவற்றைக் கட்டம் கட்டமாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
 
சொந்த இடங்களில் மீள்குடியேறும் மக்களின் அவசியமான தேவைகள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்படுவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
 
பல ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பலப்படுத்தக் கூடியதும் வடமாகாணத்தின் பொருளாதாரத்திற்கு வலுச்சேர்க்கக்கூடியதுமான மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை மீளவும் நிர்மாணிப்பது தொடர்பாக மீன்பிடி அமைச்சு பல்வேறு வெளிநாட்டு உதவி வழங்கும் அமைப்புக்களுடன் பேச்சுக்களை நடாத்தி வருவதாகவும் அரசாங்க அதிபர் ந.வேதநாயகன் தெரிவித்தார்.
 
நன்றி - புதினப்பலகை
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சூஜியோகிராபி (Zoogerogrphy)

பூமிப் பரப்பில் விலங்கினங்கள் உருவான விதம் குறித்து அறியும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சிறிலங்கா அரசுக்கு கடுப்பை ஏற்படுத்திய ஐ.நா அறிக்கை
மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களைப் பாதுகாத்தலும் மேம்படுத்தலும் தீவிரவாத
25 July, 2017, Tue 13:55 | views: 671 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பௌத்த பிக்குகளின் எதிர்ப்பை மீறி தமிழர்களுக்கு சுயாட்சி உரிமைகள் வழங்கப்படுமா?
சிறிலங்காவின் சிறுபான்மை இனத்தவர்களான தமிழ்மக்களுக்கு, சுயாட்சி வழங்கும், அரசியல் சீர்திருத்தத்துக்கு பௌத்த மதகுரு
8 July, 2017, Sat 18:17 | views: 1278 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விக்னேஸ்வரனின் எழுச்சியும் வீழ்ச்சியும்
அன்று அவர் வடக்கிற்குச் சாத்தியமான ஒரு கதாநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார். ஆனால் இன்று அவர் தன்னை
21 June, 2017, Wed 3:18 | views: 2452 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
போர் முடிந்து பின்னரும் சிறிலங்கா திரும்புவதற்குத் தடுமாறும் அகதிகள்
சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த 100,000 இற்கும் மேற்பட்ட ஈழத்தமிழ்
13 June, 2017, Tue 14:16 | views: 1562 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறிலங்கா படைகளின் பாலியல் குற்றங்கள் மூடிமறைக்கப்பட்டது எப்படி? – அனைத்துலக ஊடகம்
ஹெய்டியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா இராணுவ வீரர் எவ்வித பாலியல் வன்புணர்வுச்
3 June, 2017, Sat 13:02 | views: 1520 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS