வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bondyயில் வீடுகள் விற்பனைக்கு
240517
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் ஐந்தாம் குடியரசின் முதற்பெண்மணிகள் - படங்களும் செய்திகளும் (பகுதி1)
France Tamilnews
உலகத்தின் இளைய தலைவர்கள் - எமானுவல் மக்ரோனின் பாதையில்...
France Tamilnews
அவதானம்!! மே1 முதல் 25யூரோவாகும் வைத்தியர் கட்டணம்!!
France Tamilnews
வார இறுதியில் மூடப்படும் மெட்ரோக்கள்!! அவதானம்!!
France Tamilnews
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
டி.டி.வி.தினகரனின் குரல் மாதிரியை பதிவு செய்ய டெல்லி கோர்ட்டு அனுமதி
19 May, 2017, Fri 4:51 GMT+1  |  views: 446
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரனின் குரல் மாதிரியை பதிவு செய்ய டெல்லி தனிக்கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதற்கிடையே இந்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

டி.டி.வி. தினகரன் கைது

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜூன், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், ஹவாலா ஏஜெண்டு நரேஷ் ஆகியோரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

விசாரணைக்கு பிறகு அவர்கள் டெல்லியில் உள்ள தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

குரல் மாதிரி ஆய்வு

டெல்லி போலீஸ் சார்பில் தனிக்கோர்ட்டு நீதிபதி பூனம் சவுத்ரி முன்பு கடந்த 11-ந்தேதி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தினகரன்-சுகேஷ் சந்திரசேகர் இடையேயான தொலைபேசி உரையாடல் தொடர்பான பதிவுகள் குறுந்தகடு வடிவில் உள்ளதாகவும், இந்த குரல் மாதிரிகளின் அடையாளங்களை உறுதி செய்யும் வகையில் அவற்றை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தின் தடயவியல் பரிசோதனை மையத்தில் ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி பூனம் சவுத்ரி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

கோரிக்கை

அப்போது டெல்லி போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் பல்பீர் சிங் வாதாடுகையில், தினகரன் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட குரல் மாதிரிகளை உறுதி செய்யும் வகையில் அதை அவரது குரலுடன் ஒப்பிட்டு சோதனை செய்வதற்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மேலும் போலீசாரிடம் உள்ள குரல் மாதிரி பதிவு பிரதியை தினகரன் தரப்புக்கு வழங்கவும் அவர் எதிர்ப்பு தெரிவித்தார். “இந்த வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்பட உள்ளனர். வழக்கு விசாரணை இன்னும் முடிவடையவில்லை. எனவே தினகரன் தரப்பு கூறுவது போல குரல் பதிவுகளை தினகரன் தரப்புக்கு வழங்க முடியாது. வழங்கினால் அதனை ஒப்பிட்டு பார்த்து அவர் மாற்றி பேசுவதற்கு வாய்ப்பு உள்ளது” என்றும் அப்போது அவர் கூறினார்.

எதிர்ப்பு

உடனே தினகரன் தரப்பில் ஆஜரான வக்கீல் நேகி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவர் வாதாடுகையில், குரல் மாதிரி சோதனைகளை சுப்ரீம் கோர்ட்டே பல வழக்குகளில் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அனுமதிக்கவில்லை என்றும், சட்டத்தில் இதற்கு இடமில்லை என்றும் கூறினார்.

மேலும் தற்போதைய நிலையில் டெல்லி போலீஸ் வசம் இருக்கும் குரல் பதிவுகள் தங்களுக்கு தேவை என்பதை இப்போது வலியுறுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.

நீதிபதி அனுமதி

இதைத்தொடர்ந்து, ஏற்கனவே உள்ள உரையாடல் பதிவுடன் தினகரன், சுகேஷ் ஆகியோரின் குரல் மாதிரிகளை ஒப்பிட்டு சோதனை நடத்துவதற்கு நீதிபதி பூனம் சவுத்ரி அனுமதி அளித்து உத்தரவிட்டார். தினகரன், சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரின் குரல் மாதிரியை பதிவு செய்ய விசாரணை அதிகாரி உரிய நடவடிக்கை தொடங்கலாம் என்றும், அதே நேரத்தில் கட்டாயப்படுத்தி குரலை பதிவு செய்யக்கூடாது என்றும் தெரிவித்தார்.

மேலும் தினகரனும், மல்லிகார்ஜூனும் ஜாமீன் கோரி தாக்கல் செய்து இருந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தன. அந்த மனுக்களின் மீதான விசாரணையை வருகிற 22-ந்தேதிக்கு (திங்கட்கிழமை) ஒத்திவைத்து நீதிபதி பூனம் சவுத்ரி உத்தரவிட்டார்.

மேலும் ஒருவர் கைது

இதற்கிடையே, இந்த வழக்கு தொடர்பாக டெல்லி போலீசார் லலித் குமார் கேஷா என்ற பாபுபாய் என்பவரை நேற்று தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.

அப்போது, பாபுபாய் டெல்லியைச் சேர்ந்த ஹவாலா ஏஜெண்டு என்றும், இவர் மூலமாகத்தான் சுகேஷ் சந்திரசேகருக்கு ஹவாலா பணம் ரூ.1 கோடி வழங்கப்பட்டது என்றும், எனவே இவரை 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிவேண்டும் என்றும் போலீஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி பாபுபாயை 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி போலீசுக்கு அனுமதி வழங்கினார். இதைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட பாபுபாயை, விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர்.

தள்ளுபடி

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் டெல்லியில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்தபோதுதான் கைது செய்யப்பட்டார். அப்போது எடுத்த விடியோ ஆதாரங்களை வழங்க வேண்டும் என்று கோரி சுகேஷ் சந்திரசேகர் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

சந்திப்பு

இதற்கிடையே, திகார் சிறையில் இருக்கும் தினகரனை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்க தமிழ்ச்செல்வன் (ஆண்டிப்பட்டி), வெற்றிவேல் (பெரம்பூர்), எஸ்.ஜி.சுப்பிரமணியன் (சாத்தூர்) ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.

அவர்களுடன் மேலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சாமியும் சென்று இருந்தார்.
 

பொதறிவுத் துணுக்கு :

* உலகிலே நதிகளே இல்லாத நாடு எது?
   சவுதிஅரேபியா

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 7-ந்தேதி திறக்கப்படும் கோடை வெயில் காரணமாக தள்ளிவைப்பு
கோடை வெயில் காரணமாக, தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன் 7-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
27 May, 2017, Sat 5:02 | views: 184 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நாட்டின் மிக நீளமான ஆற்றுப்பாலத்தை மோடி திறந்து வைத்தார்
அசாம்–அருணாசல பிரதேச மாநிலங்களை இணைத்து கட்டப்பட்டு உள்ள நாட்டிலேயே மிகவும் நீளமான ஆற்றுப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று
27 May, 2017, Sat 5:01 | views: 133 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மாட்டு இறைச்சி மீதான தடையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
நாட்டின் பன்முகத்தன்மையை பாதுகாக்க மாட்டு இறைச்சி மீதான தடையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி
27 May, 2017, Sat 4:59 | views: 142 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை மத்திய அரசு அதிரடி உத்தரவு
கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.
27 May, 2017, Sat 4:57 | views: 128 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மகாராஜா ரெயிலில் 8 நாள் சுற்றுலா செல்ல ரூ.5 லட்சம் கட்டணம்
தங்க தட்டில் சாப்பிடலாம், தங்க கப்பில் டீ குடிக்கலாம், மகாராஜா ரெயிலில் 8 நாள் சுற்றுலா செல்ல ரூ.5 லட்சம் கட்டணம் செலுத்த
26 May, 2017, Fri 4:30 | views: 744 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS