வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
140117
அறை வாடகைக்கு
130117
Bail விற்பனைக்கு
070117
வீடு விற்பனைக்கு
271216
Bail விற்பனை
271216
Bail விற்பனை
141216
Bail விற்பனைக்கு
091216
வீடு விற்பனைக்கு
091216
வீடுகள் விற்பனைக்கு
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - திங்கட்கிழமையில் இருந்து குற்றப்பணம்!!
France Tamilnews
கடுமையான எச்சரிக்கை!! குழந்தைகளிற்கு Uvestérol D வழங்குவதை உடன் நிறுத்தவும்!!
France Tamilnews
அவதானம்!! பெற்றோர்களிற்கு 135யூரோக்கள் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம்!! திசைமாறித் தவறாக வாகனம் செலுத்துபவர்களைக் கண்காணிக்கும் புதிய ரடார்!!!
France Tamilnews
வாகனச்சாரதிகள் அவதானம் - கருமையூட்டப்பட்ட கண்ணாடிகளிற்குத் தடை!!
France Tamilnews
குஜராத்தில் இந்தியாவின் முதல் சர்வதேச பங்குச் சந்தை: பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்
10 January, 2017, Tue 1:57 GMT+1  |  views: 273
  • Mohan Jewellery Mart
  • palais-de-lepi-dor
  • pavillon-europe
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

குஜராத் மாநிலம், காந்திநகரில் நாட்டின் முதலாவது சர்வதேச பங்குச் சந்தையை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.
காந்திநகரின் கிஃப்ட் சிட்டி (குஜராத் இண்டர்நேஷனல் ஃபைனான்ஸ் டெக்-சிட்டி) பகுதியில் "இந்தியா-ஐஎன்எக்ஸ்' என்ற பெயரில் சர்வதேச பங்குச் சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இதை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தொடக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
இந்திய நிதித் துறையில் இது மிகவும் முக்கியமான சம்பவமாகும். கிஃப்ட் சிட்டி தொடர்பான எனது திட்டம் மிகவும் பெரியது. இன்றிலிருந்து அடுத்த 10 ஆண்டுகளில், உலகில் இருக்கும் மிகப்பெரிய பங்குச் சந்தைகளில் இதுவும் ஒன்றாக, பண்டங்கள், செலாவணிகள், பங்குகள், வட்டி விகித பங்குகள் அல்லது பிற நிதிசார்ந்த சாதனங்களின் விலையை தீர்மானிக்கக்கூடிய சந்தையாக இருப்பதை நான் காண்பேன்.
தரமான சேவை வழங்குவதிலும், விரைந்து பரிவர்த்தனை செய்வதிலும் இந்த பங்குச் சந்தை புதிய அத்தியாயம் படைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். கிஃப்ட் சிட்டியிலுள்ள சர்வதேச நிதி சேவைகள் மையத்தின் (ஐஎப்எஸ்சி) ஒரு பகுதிதான் இந்த பங்குச் சந்தை.
இந்திய பங்குச் சந்தைகளில் செய்யப்படும் வணிகம் தொடர்பாக வெளிநாடுகளில் ஏராளமான குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன. அந்தக் குற்றச்சாட்டுகளை இந்த கிஃப்ட் சிட்டியின் மூலம் குறைக்க முடியும். உலகில் உள்ள பிற சர்வதேச பங்குச் சந்தை மையங்களுக்கு இணையான வசதியை ஐஎஃப்எஸ்சி அளிக்கும். இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் இதுபோன்ற மையத்தை ஏற்படுத்துவதும், நிர்வகிப்பதும் கடினமான காரியம்.
இந்தியாவை சிறிய நாடுகளுடன் ஒப்பிடக் கூடாது. நமது நாட்டில் உள்நாட்டுச் சந்தைகள் உள்ளன. சிறப்பு வரி மற்றும் முறைப்படுத்தும் மையமும் உள்ளது.
30 கோடி வேலைவாய்ப்புகள்: அடுத்த 20 ஆண்டுகளில் புதிதாக 30 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய தேவை இந்தியாவில் உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் கிஃப்ட் சிட்டி லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கிறேன் என்றார் பிரதமர் நரேந்திர மோடி.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள தேசிய பங்குச் சந்தைக்கு "இந்தியா-ஐஎன்எக்ஸ்' துணை நிறுவனமாகும். 4 மைக்ரோ விநாடிகள் இடைவெளியில் அடுத்தடுத்து தகவல்களை வெளியிடும் நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன. நாள்தோறும் 22 மணி நேரம் செயல்படக் கூடிய இந்த பங்குச் சந்தையில், உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள், வெளிநாடுவாழ் இந்தியர்கள் வர்த்தகம் செய்ய முடியும்.
"வைப்ரன்ட் குஜராத்' வர்த்தக கண்காட்சி தொடக்கம்: இதேபோல், காந்திநகரில் நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியில், "வைப்ரன்ட் குஜராத் குளோபல் டிரேட் ஷோ' எனப்படும் வர்த்தக கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 1,500 நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. 80 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
கண்காட்சி 2 பகுதிகளாக நடைபெறுகிறது. இதன் முதல்பகுதியாக, ஜனவரி மாதம் 10, 11ஆம் தேதிகளில் வர்த்தகம் தொடர்பான கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. ஜனவரி 12, 13ஆம் தேதிகளில் பார்வையாளர்களுக்கு கண்காட்சி திறந்து விடப்படுகிறது. இதை 15 லட்சம் பார்வையாளர்கள் கண்டுகளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நோபல் விருது கண்காட்சி: இதைத் தொடர்ந்து, நோபல் விருது கண்காட்சியையும் பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். இதில் நோபல் விருது பெற்ற டாக்டர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், டாக்டர் ரிச்சர்ட் ஜே. ராபர்ட்ஸ், டாக்டர் ஹரால்ட் வர்மஸ், டாக்டர் டேவிட் ஜே கிராஸ் உள்ளிட்ட 9 விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். அப்போது பிரதமர் மோடி பேசியபோது, அறிவியல், தொழில்நுட்பம் மூலம் வறுமையில் இருந்து மக்களை மீட்பதற்கு விஞ்ஞானிகள் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் நோபல் விருது பெற்ற விஞ்ஞானிகள் 9 பேரும், இந்திய மாணவர்களுடன் கலந்துரையாடினர்

பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பிளானிமீட்டர் (Planimeter)

பரப்பை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ரூபாய் நோட்டு விவகாரம்: ரிசர்வ் வங்கி ஆளுநர் 20-ஆம் தேதி ஆஜராக வேண்டும்: பொது கணக்குக் குழு
ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக பொது கணக்குக் குழு பிஏசி முன்பு ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ஏற்கெனவே அறிவித்தபடி
16 January, 2017, Mon 14:41 | views: 320 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு ரூ10 ஆயிரமாக உயர்வு
ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
16 January, 2017, Mon 14:39 | views: 546 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாலமேட்டில் தடையை மீறி ஜல்லிக்கட்டு; போலீஸார் தடியடி
மதுரை மாவட்டத்தில், 14 இடங்களில் தடையை மீறி ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. பாலமேட்டில் தடையை மீறி காளைகள் அவிழ்த்து
16 January, 2017, Mon 5:01 | views: 614 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சமூக வலைதளங்களில் கருத்து கூடாது: விபின் ராவத்
சமூக வலைதளங்களில் தங்களது குறைகளை வெளியிடும் வீரர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் எச்சரித்தார்.
16 January, 2017, Mon 4:56 | views: 362 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
என்எஸ்ஜி-யில் இந்தியா இணைய சீனாதான் தடை: அமெரிக்கா
அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியாவை சேர்த்துக் கொள்வதற்கு சீனாதான் முட்டுக்கட்டையாக இருப்பதாக அமெரிக்கா
16 January, 2017, Mon 4:54 | views: 225 |  செய்தியை வாசிக்க
  Annonce
parking வாடகைகஂகு
60 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Vt Cash & Carry
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS