வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
Bail விற்பனைக்கு
210917
தேவை
190917
தேவை
190917
வீடு வாடகைக்கு
180917
Bail விற்பனைக்கு
180917
அழகுக் கலைநிபுனர் தேவை
180917
தேவை
160917
தேவை
160917
வாடகைக்கு வீடுகள்
310817-15days
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
அவதானம் - உங்கள் உடலுறுப்புக்களை வைத்தியசாலைகள் எடுத்துக் கொள்கின்றனவா? - புதிய சட்ட நடைமுறை!!
14 December, 2016, Wed 14:00 GMT+1  |  views: 11005
பிரான்சில் 1956 ஆம் ஆண்டு முதன் முதலாக என்பு மச்சை மாற்று சிகிச்சை பிரான்சில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இருதயம், ஈரல், சிறுநீரகம், நுரையீரல், நுரையீரல் இருதய மையம், கணையம், என்பு-மச்சை, கண், தோல், குடல் (மிகவும் அரிதாக), என்பவை மாற்றீட்டு முறைப்படி பொருத்தப்பட்டு வருகின்றது.
 
 
சட்ட உரிமை
 
தேசிய ஒற்றுமையின் பெயரால் (Au nom de la solidarité nationale) ஒருவரின் இறப்பின் பின்னர், இந்த உடலுறுப்புக்களில் உபயோகிக்கும் நிலையில் உள்ளவற்றை, மாற்றீட்டுச் சிகிச்சைக்காக, எடுத்துக் கொள்ளும் உரிமை அரசாங்கத்திற்கு உள்ளது.
 
18 வயதிற்கு மேற்பட்டவர்களின் உடலுறுப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கத்திற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. 18 வயதிற்குக் குறைந்தவராக இருந்தால் பெற்றோரின் அனுமதி மிகவும் அவசியமானது.
 
 
உடலுறுப்புப் பெறப்படும் முறை
 
ஒருவரின் இறப்பானது, இரண்டுவிதத் தகமையில் உள்ள வைத்தியர்களால் உறுதிசெய்யப்படல் வேண்டும். அதன் பின்னர் குடும்ப உறுப்பினரிடம் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்படல் வேண்டும். ஆனால் அவர்களின்அனுமதி அவசியமில்லை.
 
இந்த உடலுறுப்புக்களை எடுப்பதானது இலவசமானதும், இரகசியமானதுமாகப் பேணப்படும். இந்த உறுப்புக்கள் யாரிற்குப் பொறுத்தப்படுகின்றது என்பதும், மருத்தவ இரகசியக் காப்பின் மூலம் பாதுகாக்கப்படும். ஆனால் வேண்டுமாயின், பெறப்பட்ட உடலுறுப்பானது வெற்றிகரமாக ஒருவரிற்குப் பயன்படுத்தப்படடுள்ளது என்பதை மட்டும் வைத்தியசாலை நிர்வாகம் குடும்பத்தினர்க்குத் தெரிவிக்கலாம். ஆனால் பெறுநரின் அடையாளம் இரகசியக் காப்பிற்குரியது.
 
பிரான்சில் இறக்கும் யாருடைய உடம்பிலிருந்தும், பயனுள்ள உடலுறுப்புக்களை அரசாங்கம் பெற்றுக்கொள்ளும் உரிமை இருப்பதைப்போல், உடலுறுப்புக்கள் அகற்றப்பட்ட பின்னர். உடலம் மீண்டும் கொளவரமான முறையில் முழுமையான நிலையில் உறவுகளிடம் வழங்கப்படல் வேண்டும் எனச் சட்டம் வலியுறுத்துகின்றது.
 
மறுப்புரிமை
 
ஆனால் 11ம் திகதி ஓகஸ்ட் மாதம் திருத்தியமைக்கப்பட்ட décret n°2016-1118 du 11 août 2016  சட்டத்தின் படி தேசிய மறுப்புப் பட்டியலில் (Registre National des Refus) உங்கள் பெயர் விபரங்களைப் பதிவு செய்வதன் மூலம், உங்கள் உடலுறுப்புக்கள் எடுக்கப்பட்டு, இன்னொரு உயிரிற்குப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க முடியும். இந்த மறுப்புரிமைச் சட்டமானது, மீண்டும் கடந்த 28ம் திகதி நவம்பர் மாதம், பிரதமரின் தலைமையில், யாப்பு உருவாக்க மையத்தினால் பரிசீலனை செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 
https://www.registrenationaldesrefus.fr/  தளத்தில் உங்கள் பெயரினைப் பதிவு செய்வதன் மூலம், உங்கள் உடலுறுப்புக்களை இறப்பின் பின்னர் அரசாங்கம் எடுத்துப் பயன்படுத்துவதைத் தடுத்துக் கொள்ள முடியும்.
 
இந்த மறுப்புரிமைச் சட்டமானது, 2017 ஆம் ஆண்டு, ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பெட்ரொலொஜி (Petrology)

பூமியில் பாறை உருவான விதம், அமைப்பு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மகிழுந்துக்குள் நிரப்பப்பட்ட எரிவாயு குடுவைகள்! - 200 பேர்வரை அவசர வெளியேற்றம்!!
சனிக்கிழமை இரவு, குடியிருப்பு பகுதி ஒன்றில், மகிழுந்துக்குள் எரிவாயு குடுவைகள் நிரப்பட்ட நிலையில்
25 September, 2017, Mon 9:00 | views: 1440 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நாசிப்படைகளுடன் அரசை ஒப்பிட்டு பேசிய Mélenchon! - பெரும் சர்ச்சை!!
சனிக்கிழமை, Jean-Luc Mélenchon தொழிலாளர் சட்டமூலத்துக்கு எதிராக, இம்மானுவல் மக்ரோனின் அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில்
25 September, 2017, Mon 7:00 | views: 992 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அதிரடியாக அதிகரித்த மக்ரோனின் செல்வாக்கு!!
தொடர்ச்சியான செல்வாக்கு சரிவின் பின்னர், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் செல்வாக்கு தற்போது
24 September, 2017, Sun 17:00 | views: 3015 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Vitry-sur-Seine - நபருக்கு நடுவீதியில் வைத்து துப்பாக்கிச்சூடு!
நபர் ஒருவருக்கு நடுவீதியில் வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
24 September, 2017, Sun 15:00 | views: 1916 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மருத்துவமனையில் இருந்து 7 மாத மகனைக் கடத்தியவர் - கைது!!
வெள்ளிக்கிழமை இரவு Yvelines மாவட்டத்தின் Chesnay பகுதியில் உள்ள மருத்துவமனையில் இருந்து 7 மாத குழந்தை ஒன்று
24 September, 2017, Sun 12:00 | views: 1113 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS