Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வேலையாள்த் தேவை
05022019
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
பரிஸ் நகரத்தில் இருந்துகொண்டு இந்த தெருக்களில் எல்லாம் நடக்காவிட்டால் எப்படி?
2 April, 2016, Sat 8:00 GMT+1  |  views: 16508
பாரிஸ் மிக அழகான நகரம் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. அதுவும் போக்குவரத்து துறையில் மிக பிரம்மாண்டமான வளர்ச்சியை கொண்டுள்ளது பிரான்ஸ். பெரு வீதிகள் தொடங்கி, சிறு குச்சு ஒழுங்கைகள் வரை அத்தனையையும் அழகாக வைத்திருக்கிறார்கள். 
 
இன்று பாரிசினுள் சிறிய இன்பச்சுற்றுலா போகலாம். நீங்கள் பாரிசினுள் வசிப்பவராக இருந்தால்.. இந்த தெருக்களில் எல்லாம் நடக்கவேண்டும். இந்த தெருக்களையெல்லாம் நீங்கள் ரசிக்க வேண்டும். வாருங்கள் பாரிசின் சிறந்த பத்து தெருக்களை பட்டியலிடுவோம்!!
 
Rue des Barres 
 
பாரிசின் மிக மிக அழகான தெருவும், அவசியம் பார்க்கவேண்டிய தெருவுமாக இந்த Rue des Barres இருக்கிறது. 15ம் நூற்றாண்டில் கட்டமைக்கப்பட்ட இந்த தெருவுக்குள் நீங்கள் நுளைந்தாலே ஒரு புராதன கோட்டைக்குள் நுளைந்த மாதிரியான எண்ணம் வரும். பல தெருவில் உள்ள கட்டிடங்கள் எல்லாம் மிக பழமையானவை. இந்த தெருவில் பல திரைப்படங்களில் காட்சி எல்லாம் படமாக்கியிருக்கிறார்கள். ஹொலிவூட் திரைப்படமான the ninth gate திரைப்படத்தில் இந்த தெருவை மிக அழகாக காட்டியிருப்பார்கள். மட்டுமல்லாது புகழ்பெற்ற Chez Julien உணவகமும் இந்த தெருவில் தான் உள்ளது. 
 
 
Rue de l'Abreuvoir
 
வைத்த கண் வாங்காமல் பார்த்து ரசிக்கக்கூடிய தெரு தான் இந்த Rue de l'Abreuvoir. கொள்ளை அழகு என்பார்களே.... அப்படி ஒரு அழகு. இந்த தெருவில் இருக்கும் வீடுகளும், விடுதிகள் அவ்வளவு ரசனையாக உருவாக்கியிருக்கிறார்கள். பாதசாரிகளுக்கான பிரத்யேகமான தெரு இது. ஒரு தடவை சென்று ஒரு செல்ஃபியை எடுத்து பேஸ்புக்கில் பகிர்ந்துகொள்ளுங்கள்!
 
 
Cour du Commerce-Saint-André
 
18ம் நூற்றாண்டின் மதிமயக்கும் சாலை. Coffee மற்றும் Hot Chocolate இற்கு பெயர் போன தெரு. அகலம் குறைவான தெரு.  பாரிசின் முதல் coffee house ஆன 'Le Procope' இந்த தெருவில் தான் உள்ளது.  மாலை வேளைகளில் இங்கு கூடி இருந்து பேசி, café அருந்துவதற்காகவே ஒரு கூட்டம் வரும். 
 
Rue Montorgueil
 
பிராஸ்சை தெரிந்துகொள்ள, நீங்கள் அவசியம் இந்த தெருவினுள் நுளைய வேண்டும். 'பூர்வீகம்' என்பார்களே... அதுபோல் பிரான்ஸ்சின் பூர்வீகமே இந்த தெருவில் தான் உள்ளது. பிரான்சின் பூர்வீக மக்களில் செயற்பாடுகளை இங்கு நீங்கள் அவதானிக்கலாம். எப்போதும் ஜனநடமாட்டம் நிறைந்த இந்த தெரு முனையில் உள்ள பூக்கள் விற்கும் சிறிய கடை மகா பிரபலம்!!
 
 Rue Crémieux
 
இந்த தெருவை பார்த்ததுமே நீங்கள் காதலில் விழுந்துவிடுவீர்கள். உங்கள் மனதில் உள்ள கவலைகள் அனைத்தும் தீர்ந்து, நீங்கள் குழந்தையாகிவிடுவீர்கள். இந்த தெருவிற்கு  அன்பாக  ' Notting Hill of Paris' என ஒரு செல்லப்பேரும் உண்டு. அழகிற்கும் அமைதிக்கும் பெயர்போன இத்தெருவை நீங்கள் அவசியம் பார்க்கவேண்டும். 
 
Rue des Rosiers
 
இங்கு மாலை வேளைகளில் கூட்டம் சொல்லிமளாது. எதற்கு என்கிறீர்கள்?? சாண்ட்விச் சாப்பிட. போய்தான் பாருங்களேன். 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த தெரு இந்த Rue des Rosiers. இரண்டு பக்கங்களில் பேக்கரி உள்ள சுவையான தெரு இது. 
 
 
Rue Lepic
 
இந்த தெரு பல பெருமைகளை கொண்டுள்ளது. நீங்கள் ஒரு 'பிரெஞ்சு பேகர்' விரும்பி என்றால் உங்களுக்கே உங்களுக்கானது இந்த தெரு. Café des Deux Moulins என்ற புகழ்பெற்ற café இந்த தெருமுனையில் தான் உள்ளது. இந்த தெருவிற்குள் நுளைந்ததும் 'இந்த தெருவை எங்கோ பாத்திருக்கோமே??' என்ற எண்ணம் தோன்றும். புகழ்பெற்ற பிரெஞ்சு திரைப்படமான Amélie திரைப்படத்தில் பார்த்திருப்பீர்கள்!!
 
Rue Saint-Antoine
 
மிக பிரபலமான 'பிஸி'யான தெரு இது. பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமான உள்ள இந்த தெரு 1780ம் ஆண்டுகளில் திருடர்களாலும், ரவுடி கூட்டங்களாலும் நிறைந்திருந்ததாம். இப்போது அநியாயத்திற்கு திருந்தி நல்லவர்களை மட்டும் கொண்ட தெரு இது. Saint-Paul-Saint-Louis தேவாலயத்தில் ஆரம்பித்து..., நீள்கிறது இந்த தெரு! 
 
 
Avenue Winston Churchill
 
ஆம்!! இந்தத்தெருவிற்குள் நீங்கள் நுளைந்துவிட்டால் வின்ஸ்டன் சர்ச்சில் உங்களை அவதானித்துக்கொண்டே இருப்பார். 1900ம் ஆண்டில் கட்டப்பட்ட Petit Palais கட்டிடம் இந்த தெருவில் தான் உள்ளது. பிரம்மாண்டமான Grand Palais கூட இந்த தெருவில் தான் உள்ளது. இரண்டும் போதாதா இந்த தெரு பிரபலமாவதற்கு. 
 
Quai de Jemmapes
 
உங்கள் அன்புக்காதலியுடன் நேரத்தை செலவிட இந்த தெருவை விட்டால் வேற 'ஒப்ஷன்' இருப்பதாக தெரியவில்லை.  ஒரு பக்கம் மரங்கள் நிறைந்து, மறுபக்கம் Saint-Martin கால்வாயினால் குளிர்ந்து ஜில்லிடுகிறது இந்த தெரு. 1938ம் ஆண்டு Hôtel du Nord என ஒரு பிரெஞ்சு திரைப்படம் வெளிவந்திருந்தது. அந்த திரைப்படத்தில் வந்த உணவகம் இந்த தெருவில் தான் உள்ளது. 
 
அவ்வளவு தான் பட்டியல். கிடைக்கும் லீவு நாட்களில் எல்லாம் iPod ஒன்றை எடுத்துக்கொண்டு.. இந்த தெருக்களில் காலாற நடந்து, ரசித்து வாருங்கள்!!!
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

 வேவ்மீட்டர் (Wavemeter)

ரேடியோ அலைகளின் அலை நீளத்தை அளவிடும் கருவி.
 

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
எதையும் தாங்கும் இதயம் ஈஃபிள்!!
வருடத்துக்கு எத்தனையோ மில்லியன் மக்கள் பார்வையிடும் இந்த ஈஃபிள் கோபுரம், ஒரே நேரத்தில் எத்த
16 February, 2019, Sat 11:30 | views: 881 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஈஃபிள் கோபுரமும் அந்த 70 கிலோமீற்றரும்!!
ஈஃபிள் கோபுரம் குறித்து எத்தனை எத்தனை தகவல்களை நாம் அறிந்திருப்போம்... இருந்தாலும் இன்னமும் ஆச்சரியம் குறையாத ஈஃபிள் குறித்து இன்றும் சில தகவ
15 February, 2019, Fri 11:30 | views: 998 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Grand Rex - சில அடடா தகவல்கள்!!
உங்களுக்கு மிக பரீட்சயமான Grand Rex திரையரங்கு குறித்து இன்று சில அடடா தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.
14 February, 2019, Thu 10:30 | views: 924 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இந்திய பிரபலங்களுடன் மெழுகு சிலை அருங்காட்சியகம்!!
மெழுகு சிலைகள் மூலம் பிரபலங்களுக்கு உயிரூட்டும் முயற்சி உலகம் முழுவதும் மிக பிரபலம். பிரபலங்கள் போ
13 February, 2019, Wed 10:35 | views: 918 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரண்டாக பிரிந்த Corsica! - ஒரு வரலாற்றுக்கதை!!
பிரான்சின் பிரதான நிலப்பரப்பில் 96 மாவட்டங்கள் உள்ளன. இது நீங்கள் அறிந்தது தான். கடல் கடந்த மாவ
11 February, 2019, Mon 10:32 | views: 1133 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS