இந்தக் கொடூரம் நடந்து நாளை சரியாக ஒரு வருடம். இன்னமும் இந்தக் கட்டத்தினைப் பார்க்கும் அந்தப் பகுதி மக்களின் மனங்களில் அச்சமும் வடுக்களும் மாறவில்லை.
Rosny-sous-Bois விலுள்ள Rue Victor-Hugo, Rue Léon-Gambetta ஆகிய வீதிகளின் சந்திப்பில் அமைந்துள்ள இந்தக் கட்டடத்தின் பாதி, 31ம் திகதி ஓகஸ்ட் மாதம், 2014ஆம் ஆண்டு பெரும் சத்தத்துடன் வெடித்து இடிந்து வீழ்ந்தது. இடிந்து வீழ்ந்த இந்த நான்கு மாடிக் கட்டடம், எட்டு உயிர்களைப் பலிவாங்கியதுடன் 14 பேர்களைப் படுகாயமடையச் செய்தது.
இன்னமும் இந்தக் கொடூர விபத்தின் முழுமையான காரணங்கள் விசாரித்து முடியவில்லை.
இந்த விபத்தில் பலியெடுக்கப்பட்ட உயிர்களிற்கான அகவணக்கம் எதிர்வரும் 5ம் திகதி செப்பெடம்பர் மாதம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவனத்திற்கு:இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.