நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை Le Havre (Seine-Maritime) நகரில் வைத்து 680 கிலோ எடையுள்ள கொக்கைன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
பிரேஸிலில் இருந்து போதைப்பொருள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். Le Havre நகர police judiciaire (PJ) மற்றும் Rouen நகர régional de la police judiciaire (SRPJ) ஆகிய அதிகாரிகளும் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர். ஒவ்வொரு வாகனங்களாக சோதனையிட்டு இறுதியில் கடத்திச் செல்லப்பட்ட கொக்கைன் போதைப்பொருளை மீட்டனர்.
இரண்டு இராட்சத கொள்கலனில் கடந்தப்பட்ட இந்த போதைப்பொருளை காவல்துறையினர் பின் தொடர்ந்து காத்திருந்து மீட்டுள்ளனர். முதலாவது கொள்கலனின் 300 கிலோ எடையுள்ள கொக்கைனும், இரண்டாவது கொள்கலனில் 380 கிலோ எடையுள்ள கொக்கைனும் மீட்கப்பட்டுள்ளன. தவிர, கைத்துப்பாக்கி, ஒரு குழல் துப்பாக்கியும் மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.