பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில், பேரூந்து ஒன்றுக்குள் இருந்து €15,000 க்கும் மேற்பட்ட ரொக்கப்பணம் கேட்பாரற்றுக்கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் 60 ஆம் இலக்க பேரூந்துக்குள் இருந்து இந்த பணம் மீட்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை காலை 7 மணிக்கு Porte de Montmartre இருந்து பேரூந்து புறப்படுவதற்கு முன்னர் அப்பேரூந்தின் RATP சாரதி, பேரூந்தை முற்றாக சோதனையிட்டார். பேரூந்தின் சக்கரங்கள் அனைத்தும் சோதனையிட்டு, அதன் பின்னர் பேரூந்துக்குள் சோதனையிட்டார். அப்போது அங்கு கைவிடப்பட்ட பை ஒன்று இருப்பதை கண்டுபிடித்தார். பின்னர் அதை நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார். அதன் பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
18 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த பைக்குள் €15,720 யூரோக்கள் ரொக்கப்பணமும், ஒரு கடவுச்சீட்டும் USB கேபிள் ஒன்று அதனோடு இருந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சாரதியின் இந்த செயல் 'பின்பற்றத்தக்கது' என பாராட்டப்பட்டுள்ளார்.
கவனத்திற்கு:இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.