நேற்று ஞாயிற்றுக்கிழமை Yvelines இல் இடம்பெற்ற குழு மோதலில் பலர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளனர். இதில் 17 வயதுடைய இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி அளவில் Vaux-sur-Seine பகுதியில் இந்த குழு மோதல் வெடித்துள்ளது. இரு குழுக்களாக நின்றிருந்த இளைஞர்கள் பலர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் பலர் கைகளில் கத்தி வைத்துக்கொண்டு மற்றவர்களை தாக்கினார்கள். இதனால் அப்பகுதி இரத்தவெள்ளத்தில் மிதந்தது. மோதலைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர். மோதலில் ஈடுபட்டவர்கள் தப்பியோடியுள்ளனர். 10.45 மணிக்கு சம்பவ இடத்தில் மோசமாக தாக்கப்பட்டு மயங்கிய நிலையில் 17 வயதுடைய இளைஞன் ஒருவர் கிடந்துள்ளான். அவனை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
வீதியில் சென்றுகொண்டிருந்த 29 வயதுடைய எண் ஒருவரும் இந்த தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். அவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். காவல்துறையினர் Vauréal நகர் முழுவதும் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தினர். சம்பவ முடிவில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 17 வயதுடைய இளைஞன் நள்ளிரவு 12 மணி அளவில் உயிரிழந்துள்ளான்.
கவனத்திற்கு:இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.