வாடகை துவிச்சக்கர வண்டியில் ஒரு வருடத்துக்கு சுற்றி வரலாம்! - புதிய வசதி!!
8 September, 2018, Sat 19:00 GMT+1 | views: 3153
இதுவரை வாடகை துவிச்சக்கர வண்டியை பெற்றுக்கொள்பவர்கள் 30 இல் இருந்து 180 நிமிடங்கள் வரை பயன்படுத்திவிட்டு மீண்டும் அதன் தரிப்பிடத்தில் விட்டுவிடவேண்டும். அந்த நடைமுறையை உடைத்து, தற்போது புதிய சேவைகள் ஆரம்பித்துள்ளன.
நீங்கள் துவிச்சக்கர வண்டியினை வாடகைக்கு பெற்றுக்கொண்டால், ஒரு வாரம், ஒரு மாதம் அல்லது ஒரு வருடம் கூட வைத்திருந்து பயன்படுத்தலாம். இந்த வசதி முதல் கட்டமாக நேற்று வெள்ளிக்கிழமை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. l’Héxagone எனும் புதிய வாடகை துவிச்சக்கர வண்டி நிறுவனம் முதன் முறையாக இந்த சேவையினை Nantes நகரில் சேவைக்கு கொண்டுவந்துள்ளது. நீங்கள் பெற்றுக்கொள்ளும் துவிச்சக்கர வண்டிக்கு ஏற்றால்போல் மாதவாடகை €20 இல் இருந்து €150 வரை நீளும். அதேவேளை ஒரு வருடத்துக்கான வாடகை €120 இல் இருந்து €1,080 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 1000 துவிச்சக்கர வண்டிகள் சேவைக்கு விடப்பட்டுள்ளன. தவிர, இதன் இரண்டாம் கட்டமாக தலைநகர் பரிசுக்கும் கொண்டுவர தாம் தீர்மாணித்துள்ளதாக l’Héxagone நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஏ.சி. மின்சாரத்தை டி.சி. மின்சாரமாக மாற்றும் கருவி.
•
உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு:இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.