Vitry-sur-Seine - சீன நபரை தாக்கி - €3,000 யூரோக்கள் கொள்ளையிட்ட இளைஞனுக்கு 18 மாத சிறை!!
8 September, 2018, Sat 17:00 GMT+1 | views: 2871
சீனாவை பூர்வீகமாக கொண்ட முதியவர் ஒருவரை தாக்கி, அவரிடம் இருந்து €3,000 யூரோக்களை கொள்ளையிட்டுச் சென்ற நபர் ஒருவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஓகஸ்ட் 30 ஆம் திகதி, குறித்த 64 வயதுடைய ஓய்வூதியம் பெறும் நபர், Vitry-sur-Seine இல் குதிரைப்பந்தையம் ஒன்றில் ஈடுபட்டிருந்தார். அவரை கண்காணித்து பின் தொடர்ந்த 20 வயதுடைய நபர் அவரை மோசமாக தாக்கிவிட்டு, அவரிடம் இருந்த €3,000 யூரோக்களை கொள்ளையிட்டுள்ளான். €2,500 யூரோக்களுடன் வந்து குதிரைப்பந்தயத்தில் €3,000 யூரோகளாக பெற்றுக்கொண்டு வீடு திரும்பும் போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தாக்குதல்தாரி இளைஞனோடு மேலும் ஒருவர் சேர்ந்துகொண்டு தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், வீதியில் சென்றவர்கள் முதியவை காப்பாற்றி காவல்துறையினருக்கு தகவலும் தெரிவித்தனர். கொள்ளையன் ஒருவனை கைது செய்த காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர். அதன் போது, 'சீனர்களிடம் இலகுவாக கொள்ளையிடலாம். நன்றாக ஆடை அணிந்த சீனர்களிடம் கண்டிப்பாக பணம் இருக்கும்!' என அவன் தெரிவித்ததாகவும், இதில் இனவாதம் எதுவும் இல்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பின்னர், அவரை தாக்கிய நபருக்கு நேற்று முன் தினம் வியாழக்கிழமை 18 மாத சிறைத் தண்டனையை Creteil நீதிமன்றம் வழங்கியதாகவும் அறிய முடிகிறது. இரண்டாம் நபர் தேடப்பட்டு வருகின்றார்.
பூமிப் பரப்பில் விலங்கினங்கள் உருவான விதம் குறித்து அறியும் படிப்பு.
•
உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு:இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.