நீரில் மூழ்கிய இரு நபர்களை காப்பாற்றிய 13 வயது ஹீரோ!!
26 August, 2018, Sun 13:00 GMT+1 | views: 2687
நீரில் மூழ்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இரு நபர்களை 13 வயதுடைய சிறுவன் ஒருவர் காப்பாற்றியுள்ளான்.
இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை Var மாவட்டத்தில் உள்ள La Croix-Valmer நீர்த்தேக்கத்தில் இரு நபர்கள் நீரில் மூழ்கிக்கொண்டிருந்துள்ளனர். அவர்கள் அபாய குரல் எழுப்ப,துடுப்பு படகு ஒன்றை எடுத்துக்கொண்டு அப்பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுவன் ஆற்றில் இறங்கிவிட்டான். அவர்களை நோக்கி துடுப்பு படகை செலுத்தி, அவர்களை நீரில் இருந்து இழுத்து துடுப்பில் ஏற்றியுள்ளான். இதனால் அவர்கள் இருவரும் நீரில் மூழ்கிடாமல் உயிர் காப்பாற்றப்பட்டது.
13 வயதுடைய குறித்த சிறுவனின் செயல் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய வார இறுதி நாளிதல்கள் பலவும் அவனின் வீரசாகசத்தை பிரசுரித்துள்ளன. தவிர அவனுக்கு அப்பகுதி நகர மண்டபம் 'பதக்கம்' ஒன்றையும் வழங்கியுள்ளது.
கவனத்திற்கு:இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.