Arnouville - வெடிக்கும் நிலையில் உள்ள பொருட்கள் நிரப்பப்பட்ட மகிழுந்து மீட்பு!!
17 August, 2018, Fri 17:00 GMT+1 | views: 2927
வணிக வளாகம் ஒன்றின் தரிப்பிடத்தில் மகிழுந்து பாரிய அளவில் வெடித்துச் சிதறக்கூடிய பொருட்கள் நிறைந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை Arnouville (Val-d'Oise) பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காவல்துறையினர் வழங்கிய தகவல்களின் படி, குறித்த மகிழுந்து ஆறு மாதங்களுக்கு முன்னர் திருடப்பட்டிருந்த மகிழுந்து எனவும், அதற்குள் எரிவாயு கலன்கள், பெற்றோர் கேன்கள் என பல வெடிக்கக்கூடிய பொருட்கள் நிரப்பப்பட்டிருந்தன என அறிய முடிகிறது. நேற்று வியாழக்கிழமை காலை 5 மணி அளவில் தீயணைப்பு வீரர்கள் இந்த மகிழுந்தை மீட்டனர்.
மகிழுந்தை காவல்துறையினர் முற்றாக சோதனையிட்டுள்ளனர். பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்குரிய தடையங்கள் எதுவும் சிக்கவில்லை எனவும், இது குறித்த மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
கவனத்திற்கு:இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.