பரிஸ் - காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் நபர் பலி! - ஒரே நாளில் இரண்டு சம்பவம்!!
16 August, 2018, Thu 17:00 GMT+1 | views: 3302
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரு நபர்கள் அடங்கிய மகிழுந்து ஒன்றை காவல்துறையினர் துரத்திச் சென்றதாகவும், அதன் பின்னர் காவல்துறையினர் ஒன்பது தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவித்திருந்தோம். அதே நாள் இரவில், பரிசில் மற்றுமொரு சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு 26 வயதுடைய நபர் ஒருவர் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு பலியாகியுள்ளார். குறித்த நபரை காவல்துறையினரின் மறிக்க முற்பட்டுள்ளதாகவும், ஆனால் அவர் நிறுத்தாமல் சென்றுள்ளதாகவும் அதைத் தொடர்ந்தே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபரின் சகோதரி தெரிவிக்கும் போது, 'நான் என் வாழ்க்கையின் ஒரு பகுதியை இழந்துவிட்டேன். என் சகோதரனின் உயிர் எதற்கும் தீர்வாகாது!' என தெரிவித்தார்.
துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை அதிகாரி, IGPN படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். போதிய காரணங்கள் இன்று காவல்துறை அதிகாரி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார் என அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகளின் பின்னரே முழு தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
* உலகிலேயே மிகவும் வரண்ட பாலைவனம் எது? ஆடகாமா பாலைவனம் (சிலி)
•
உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு:இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.