மோந்த்-லா-ஜொலி - லிசேப் பேராட்டம் - 144 பேர் கைது!
6 December, 2018, Thu 16:00 GMT+1 | views: 2161
இன்று காலை மோந்த்-லா-ஜொயில் (Mantes-la-Jolie-Yvelines) லிசே மாணவர்கள் நடாத்திய போராட்டத்தை முடக்க காலையிலேயே காவற்துறையினர் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.
பெருமளாவன காவற்துறையினர் காலை 7h00 மணியளவிலேயே களமிறக்கப்பட்டுவிட்டனர்.
லிசேக்களின் வாயில்களில் தடைகளைப் போட முயன்ற மாணவர்கள் மீது காவற்துறையினர் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளனர்.
இது இங்கு கலவர நிலையை உருவாக்கி உள்ளது. காவற்துறையினரின் நடவடிக்கையைக் கண்டித்து நடந்த கலவரத்தில், சிற்றுந்துகள் உட்படப் பல பொருட்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இதில் 141 மாணவர்களைக் காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
இங்குள்ள Lycée Condorcet de Limay மற்றும் Lycée Saint-Exupéry ஆகியவற்றிலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் பெரும் பதற்றம் உருவாகி உள்ளது.
சென்டிமீட்டர் அளவைவிட மிகக் குறைவான அளவீட்டை அளக்கும் கருவி.
•
உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு:இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.